சீக்கிரம் வந்தா சிம்புன்னு சொல்றதில்லையே......தீனா!
சென்னை: விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு சீசன் 7 நடந்தபோது, சிறப்பு ஜட்ஜாக வந்திருந்தார் நடிகர் சிம்பு. அந்த நிகழ்ச்சியை விஜய் டிவி மறு ஒளிபரப்பு செய்தது. அப்போது வெறும் குரல் மட்டும் கொடுத்து பேசிக்கொண்டு இருந்தார் விஜய் டிவியின் தீனா.
நேரில் வந்து பேசுங்க என்றபோது இல்லை சார் நான் இங்கிருந்தே சிம்புவா பேசறேன்னு சொன்னார். ஏன் எப்ப பாரு லேட்டா வறீங்க என்று சிம்பு கேட்க, சீக்கிரம் வந்தா சிம்புன்னு ஒப்புக்க மாட்றாங்க சார் என்று சொன்னார்.
உங்ககிட்ட பேசினா பல பிரச்சனைகள் வந்து சேரும் சார் என்று சொன்ன தீனா நான் பேசலைவணக்கம் மட்டும் சொல்லிக்கறேன் என்று சொன்னார். இல்லை...நீங்க என்கிட்ட எது வேணும்னாலும் கேட்கலாம் என்று மீண்டும் சொன்னார் சிம்பு

ஃபிரீயா இருக்கீங்களா...
ஃபிரீயா இருக்கீங்களா...போன வரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்தீங்க...இப்போ இங்கே வந்து இருக்கீங்க என்று சிம்பு கேட்க, விஜய் டிவிக்கு வந்தாலே ஃ பிரீயாத்தானே கூப்பிடுவாங்க. எப்போ காசு கொடுத்து கூப்பிட்டு இருக்காங்க என்று கூறி சிரிக்க வைத்தார் தீனா.

எது வேணும்னாலும் கேளு
நீ எது வேணும்னாலும் கேளு தம்பி என்று சிம்பு சொல்ல, நான் என்ன வேணும்னாலும் கேட்ருவேன் சார்...அதுக்கப்புறம் என்னை எவனாவது கேட்பான் சார்..நான் இங்கிருந்தே பேசறேன்னு சொன்னார் தீனா. பதிலுக்கு சிம்பு அப்பா நீ பிராங்கா பேசறவன்.. நான் ஃபிராங்கா பேசறவன் கேளுப்பா என்று சொன்னார் சிம்பு.

லேட்டா வரியாமே
ஆமாம்.. எப்பயோ பாரு லேட்டா வரியாமே என்று சிம்பு கேட்க, சீக்கிரம் வந்தா சிம்புன்னு ஒப்புக்க மாட்றாங்க சார்...உங்க பாணிக்கே வரேன்...முதலில் யார் ஃபர்ஸ்ட் வாறாங்கன்றது முக்கியம் இல்லை. கடைசியில யார் ஃபர்ஸ்ட் வறாங்கன்றதுதான் முக்கியம்னு தீனா சொல்ல, என் டயலாக்கை என்கிட்டேயே சொல்றியான்னு கேட்டார் சிம்பு.

தீனாவின் பொய் கணக்கு
தீணாவின் பெயரில் பொய்யாக இன்ஸ்டா அக்கவுண்ட் ஒண்ணு கிரியேட் ஆகி, கன்னாபின்னான்னு ஃபாலோயர்ஸ் குவியறாங்களாம். அதில் மாஸ்டர் பட போஸ்டர் எல்லாம் போடறாங்க...நான் எங்கே அதெல்லாம் போட்டேன் .. அது பொய் கணக்குங்க என்று கூறுகிறார் தீனா. விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் மாஸ்டர் படத்தில் தீனா நடித்து இருக்கார்.
-
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications