அழகிய தீபா.. அருமையான பிறந்த நாள்.. ஜாலியா இருங்க.. சந்தோஷப்படுத்துங்க!
சென்னை: சீரியல்களில்தான் அழகழகான அம்மாக்களையும், அக்காக்களையும், வில்லிகளையும் காணலாம். சினிமாவில் கூட இவர்களை ஓரம் கட்டி ஒதுக்கி கண்ணீர் விட வைத்து விடுவார்கள்.. ஆனால் சீரியல்களில் இவர்களுக்குத்தான் ராஜ மரியாதை கிடைக்கும்.
அப்படிப்பட்ட அழகான நடிகைகளில் ஒருவர் தாங்க நம்ம தீபா நேத்ரன். கேரளாவைச் சேர்ந்தவர்.. பிறகென்ன சொல்லவா வேண்டும்.. அழகுக்கு.. அவருடைய கூந்தல் ஸ்பெஷல் அழகு.. சிரிப்பு கொள்ளை அழகு. நம்ம நடிகர் நேத்ரனின் மனைவிதான் தீபா.
நிறைய சீரியல்களில் நடித்துள்ளார்.. நடித்து வருகிறார். முதல் சீரியல் என்றால் அது கனா காணும் காலங்கள்தான். பிறகு சரவணன் மீனாட்சி, அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் ஆகிய சீரியல்களிலும் முத்திரை பதித்துள்ளார் தீபா.

நல்ல அம்மா
அது மட்டுமல்லீங்க.. சினிமாவிலும் தலை காட்டியுள்ளார். தெனாலிராமன் படத்தில் வடிவேலுவுடன் காமடெி செய்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். மாயனின் மாமியாராக, தேவியின் அம்மா கதாபாத்திரத்தில் கொஞ்சம் வில்லி, நல்ல அம்மா என்று நடித்து வருகிறார்.

குடும்ப விருது
சமீபத்தில் ஜீ தமிழ் டிவி நடத்திய விருதுகள் விழாவில் ஜீ தமிழ் குடும்ப விருது வாங்கி அசத்தினார்.. உண்மைதாங்க.. தமிழ் சீரியல்கள் பார்க்கும் குடும்பங்களுக்குள் உள்ளூர ஊடுறுவி நெஞ்சங்களில் ஜம்மென்று அமர்ந்திருக்கிறார் இந்த அழகு தீபா.

டான்ஸ் நிகழ்ச்சி
தீபா தனது கணவர் நேத்ரனைப் போலவே நல்ல டான்ஸரும் கூட. இவரும் இணைந்து விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் ஆடியுள்ளனர். இவர்களது குழந்தையும் டான்ஸில் பின்னிப் பெடலெடுப்பார். எல்லோரையும் போலவே நாமும் தீபாவை வாழ்த்துவோம்..

விஜய் டிவி சீரியல்
ஆர்ஜே.செந்தில் நடிக்கும் விஐய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனை கொல்ல சித்தப்புவுடன் சேர்ந்து சதி செய்யும் வில்லியாக நடித்து இருந்தாலும், மாயனின் மனைவி தேவிக்கு நல்ல அம்மாவாக நடித்து வருகிறார். கொஞ்சம் வில்லி நிறைய அம்மா என்று அந்த பாத்திரத்தில் நடித்து மிளிர்ந்து வருகிறார் தீபா நேத்ரன்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications