Azhagu: அழகு சீரியல் டிராப் ஆயிருச்சா.. என்னங்க சொல்றீங்க... ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னை: ரசிகர்களை பொறுத்தவரையில் சினிமாவில் இருப்பதை போலவே சின்னத்திரையிலும் ஏகப்பட்ட பேர் உள்ளனர். ஒரு சீரியல் ஒளிபரப்பாக ஆரம்பித்து சீரியல்களில் ஒருவரை பிடித்து விட்டால் அந்த சீரியலை தொடர்ந்து பார்க்க ஆரம்பித்து கிட்டத்தட்ட அதற்கு அடிமையே ஆகி விடுகிறார்கள்.
அந்த வகையில் தான் அழகு சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டு ரசிகர்களை கவர்ந்து இழுத்து இருக்கிறது. அழகு சீரியலுக்கு பெரும் ரசிகர் கூட்டமே உண்டு. அதில் வரும் நடிகர்களுக்கும் பெரும் ஆதரவாளர்கள் உண்டு. குறிப்பாக ரேவதியின் பண்பட்ட நடிப்பு பலரையும் கவர்ந்திழுத்துள்ளது.
இந்த சீரியல் 2017 இல் ஆரம்பித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் ஆரம்பித்த புதிதில் இந்த சீரியலில் இருந்து சில கேள்விகள் கேட்டு அதற்கு ரசிகர்களுக்கு பரிசுகளை வழங்கி ஊக்குவித்து வந்தது.

ரேவதி நடிப்பு
இதன் காரணமாக சிறுசுகளிலிருந்து பெருசு வரைக்கும் இந்த சீரியலை பார்த்து இதிலிருந்து கேட்கும் கேள்வி என்னன்னு எதிர்பார்த்தும் இருந்தாங்க. அதுபோக இதில் நடிகர் தலைவாசல் விஜய்யும் ரேவதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பர். இவர்களின் காம்பினேஷன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது.

மருமகள் சுதா
நடிகை ரேவதி 80ஸ் கிட்ஸ் களின் முன்னணி கதாநாயகி. இன்று வரையிலும் சினிமாக்களில் கலக்கிக் கொண்டிருப்பவர். இந்த சீரியலில் அழகம்மையாக நடித்திருப்பார். ரிட்டயர்டு வாத்தியாராக விஜய் நடித்திருந்தாலும் ஒரு குடும்பத்தின் அப்பாவை போல தான் எல்லாருக்கும் காட்சி தருகிறார். இந்த வீட்டின் மூத்த மருமகளாக சுதா கேரக்டரில் நடிகை ஸ்ருதி நடித்திருப்பார்.

அழகு சுதா
இவர் ஆபிஸ் சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமாகியிருந்தாலும் இன்றுவரையிலும் தன்னுடைய கியூட்னஸ் நடிப்பால் ரசிகர்களை தன்வசப்படுத்தி இருக்கிறார். மேலும் இதில் இவருக்கும் இவருடைய மைத்துனர் மனைவிக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருக்கும். அவருக்கு கொஞ்சம் கூட இவரைப் பிடிக்காது. ஏனென்றால் அவர் கல்யாணம் பண்ணனும்னு இருந்த ரவியை தான் இவர் இரண்டாவதாக கல்யாணம் பண்ணி இருப்பார்.

அமைதியான மருமகள்
இது அவருக்கு கொஞ்சம்கூட பிடிக்காது. அதனால் அவரை பழிவாங்க அவர் எடுக்கும் முடிவு தான் இந்த நாடகத்தின் ஹைலைட். இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ போட்டு இருக்கிறார். அதில் அழகு சீரியல் டிராப்ஆகி விட்டதாகவும் தன்னால் அதில் நடிக்க முடியவில்லை என்றும் அதற்கான ரீசனையும் கூறியிருக்கிறார்.

சுதாவுக்கு சைனஸ்
அழகு சீரியல் போன மாதமே ஷூட்டிங் ஆரம்பிச்சருக்காங்க. இவங்களால லாக்டோன் டைம்ல வெளியே போவதற்கு கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது. ஏன்னா அவங்களுக்கு ஆல்ரெடி சைனஸ் ப்ராப்ளம் இருக்கிறதுனால வெளியே போயி சளி இருமல் எதுவும் வந்துவிடக்கூடாது என்று பயந்து இருக்காங்க. அதனால் இவர் வரவில்லை என்றும் சொன்னாராம். ஆனால் மறுபடியும் ஷூட்டிங் ஆரம்பிச்சதா இவருக்கு தகவல் வந்திருக்கு.

கைவிட்டாச்சாமே
இந்த நிலையில்தான் சீரியல் டிராப் ஆகி விட்டதாக கேள்விப்பட்டாராம். இது இவருக்கு பெரும் ஏமாற்றமாகி விட்டதாம். இதனால் இந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர், சன் டிவி என அனைவருக்கும் நன்றி சொல்லி மெசேஜ் போட்டிருக்கார். கூட நடித்த அனைவரையும் ரொம்ப மிஸ் பண்ணுவதாகவும் ரசிகர்களை ரொம்ப மிஸ் பண்றதாகவும்தொடர்ந்து தான் நடிக்கும் சீரியல்களுக்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டுமென்றும் கேட்டிருக்கிறார்.
அப்ப அழகு அவ்வவளவுதானா?











Click it and Unblock the Notifications