நடிகை மனீஷா அசிங்கமான புகார்.. மனைவிகள் புரிஞ்சுக்கோங்க.. சீனு ராமசாமி டைவர்ஸுக்கு காரணம் இதுதானா?
சென்னை: சீனு ராமசாமி மீது புகாரை சொன்ன நடிகை மனீஷா, அதற்கான ஆதாரங்களை இதுவரை காட்டவில்லையே? என்று பிரபல நடிகரும், மூத்த பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் கேள்வி எழுப்பியிருக்கிறார். அத்துடன் திரைப்பட துறை விவாகரத்துகள் குறித்தும் விரிவாக பேசியிருக்கிறார்.
King 24X7 என்ற யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில் அவர் பேசும்போது, "சீனு ராமசாமி மதுரையில் பிறந்தவர்.. மதுரை திருமலை நாயக்கர் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். ஆரம்பத்தில், இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

அதன்பிறகு சினிமா மோகம் காரணமாக, இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக சேர்ந்தார்.. சீனு ராமசாமி இயல்பிலேயே எழுதும் திறன் படைத்தவர். ஏற்கனவே பல புத்தகங்களை எழுதியிருக்கிறார்..
பெரும்பாலும் இவருடைய புத்தகங்கள், மதுரையின் சிறப்புகளை பற்றியே எழுதியிருப்பார். அடிப்படையில் இவர் ஒரு எழுத்தாளர். தன்னுடைய எழுத்துக்களை கேமரா மூலம் வெளிக்கொண்டுவந்தார்.
கூடல் நகர்: தான் பிறந்த ஊருக்கு மரியாதை சேர்க்கும் விதமாக, "கூடல் நகர்" என்ற படத்தை முதலில் எடுத்தார்.. அடுத்து தென்மேற்கு பருவக்காற்று என்ற மண் சார்ந்த வாழ்வியல் படத்தை எடுத்தார். விஜயசேதுபதியை ஹீரோவாக இதில் அறிமுகமானவர்.. "மக்கள் செல்வன்" என்ற பட்டத்தை விஜயசேதுபதிக்கு வழங்கியவர் சீனு ராமசாமி. 3 தேசிய விருதுகளை தென்மேற்கு பருவக்காற்று படம் பெற்றது.
இதன்பிறகு பல படங்களை எடுத்தார்.. வசூலில் சாதனை படைத்தது தர்மதுரை என்ற படம். கோழிப்பண்ணையும் செல்லதுரையும் படத்தை கடைசியாக எடுத்தார். கோழிப்பண்ணை வைத்திருக்கும் இளைஞனின் வலியை இந்த படம் பதிவு செய்தது.. நல்ல விமர்சனத்தையும் இந்த படம் பெற்றிருந்தது.
திருமணம்: சீனு ராமசாமி தர்ஷா என்பவரை திருமணம் செய்திருந்தார். 17 வருட இல்லற வாழ்க்கையில் இருந்தார். திடீரென விவாகரத்தை அறிவித்துள்ளார். சீனு ராமசாமி புரடக்ஷன் ஆபீஸிலேயே படுத்துவிடுவார் என்றும், தன்னுடைய வீட்டுக்கு அடிக்கடி போகமாட்டார் என்றும் சலசலப்புகள் எழுந்தன. அதைபற்றி விவாதிக்க தேவையில்லை என்று சீனு ராமசாமி ஏற்கனவே சொல்லிவிட்டதால், அதை பற்றி இப்போது நாம் பேசத்தேவையில்லை.
ஆனாலும், ஒரு நடிகையின் பாலியல் குற்றச்சாட்டு, பத்திரிகைகளில் பரபரப்பாக வெளிவந்ததை நாம் இங்கு நினைவுகூர வேண்டியிருக்கிறது. 2013ம் ஆண்டு, "இடம்,பொருள்,ஏவல்" படத்தை இயக்கி கொண்டிருந்தபோது, தன்னை சீனு ராமசாமி பலாத்காரம் செய்துவிட்டதாக, அப்படத்தின் ஹீரோயின் பகீர் குற்றச்சாட்டை வைத்திருந்தார். ஆனால், மனீஷா யாதவ், அந்த குற்றச்சாட்டுக்கு எந்தவொரு ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை. பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டை சீனு ராமசாமி மீது வீசிவிட்டு, ஒதுங்கிவிட்டார்.
ஆனால், இந்த ஒரு புகாரை தவிர, சீனு ராமசாமி பற்றி வேறு எந்த கிசுகிசுக்களும் வந்ததில்லை.. அதைபற்றி நான் எங்குமே பேசியதுமில்லை.. ஆனாலும், திடீரென விவாகரத்து அறிவிக்க காரணம் ஒன்றே ஒன்றுதான்.. இதை விவாகரத்து கோரும் இயக்குனர்களின் மனைவிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
கணவன்மார்கள்: தங்கள் கணவன்மார்களுக்கும் பாடி டிமாண்டு உண்டு.. தொழில் வலிகள் உண்டு. சிலசமயம் வீட்டுக்கு தாமதமாக வரவேண்டி வரும். இதனால் மனைவியிடம் அன்பு செலுத்த முடியாமல் போய்விடும். 40 நாட்கள் வெளிப்புற படப்பிடிப்புக்கும் போக வேண்டியிருக்கும்.. இதையெல்லாம் புரிந்துகொண்ட இயக்குனர்களின் மனைவிகள் எந்த பிரச்சனையும செய்யாமல், கணவனுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.. சில மனைவிமார்கள் புரிந்துகொள்வதில்லை. ஆனால், சந்தேகம் என்று வந்துவிட்டால் அது புற்றுநோய்தான்.
அதேபோல தன்னுடைய கணவன் எவ்வளவுதான் பிரபலமாக இருந்தாலும், தன்னையும் பராமரிக்க வேண்டும், தன்னுடைய கஷ்ட நஷ்டங்களிலும் பங்கெடுத்து கொள்ள வேண்டும் என்ற மனைவிமார்களின் எதிர்பார்ப்புகள் நியாயமானதே.. இவைகளை சிலசமயம் சரிசெய்ய முடியாமல் போய்விடுகிறது.. அதனால் கணவன் - மனைவி சினிமா பிரபலங்களாகவே இருந்தாலும் சேர்ந்திருக்க முடியாது.
சினிமா பிரபலங்கள்: விவாகரத்து என்பது சினிமா தவிர, எல்லா இடங்களிலும் உள்ளது.. சினிமா பிரபலங்கள் என்பதால் வெளியே தெரிந்துவிடுகிறது. எது எப்படியோ, சீனுராமசாமி எழுத்தாளராக, இயக்குனராக வெற்றி பெற்று பவனி வர வேண்டும் என்று வாழ்த்துகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications