ஆடுகள் அதுபாட்டுக்கு மேயும்.. "ஆடு" என மீனா யாரை சொல்றாரு? நயன்தாரா அப்பவே அப்படி.. பிரபலம் அட்டாக்
சென்னை: மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாரா, மீனா நடிக்க உள்ளனர்.. படத்தின் பூஜை விழாவில், மீனாவை நயன்தாரா அவமரியாதையுடன் நடத்தியதாகவும், இதனால், அவர்களுக்குள் ஏதோ சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சலசலப்பு அடங்குவதற்குள் மீனா பதிவிட்ட, இன்ஸ்டாகிராம் பதிவு பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
மீனா தன்னுடைய இன்ஸ்டா பதிவில், "நிறைய ஆடுகளுடன் இருக்கும் ஒரு சிங்கத்தின் போட்டோவை இணைத்து, 'ஆடுகள் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறது என சிங்கம் கவலைப்படாது" என்று பதிவிட்டிருக்கிறார்.
மூக்குத்தி அம்மன் 2
இந்நிலையில், King Voice சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், "மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாரா முதலில் இல்லை என்றார்கள்.. பிறகு நயன்தாராவே நடித்தால் நன்றாக இருக்கும் என்று சுந்தர் சி விருப்பப்பட்டதால், அதை ஐசரி கணேஷூம் ஏற்றுக் கொண்டார்.

அதன்படி, மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் நயன்தாரா நடிக்கிறார்.. இதுவும் நயன்தாராவுக்கு கெத்து தந்திருக்கலாம். சொந்த படம் எடுக்கிறோம் என்ற கெத்தும் நயன்தாராவுக்கு ஏற்கனவே இருக்கிறது.
எப்பவும் தலைக்கணம் பிடித்தவர்தான் நயன்தாரா.,. நம்பர் 1 இடத்தில் இருப்பதாக சொல்கிறார்.. பல கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.. போயஸ் கார்டனில் 100 கோடி ரூபாய் செலவில் கனவு இல்லத்தை கட்டியிருக்கிறார்.. இந்த கெத்துதான் இதற்கெல்லாம் காரணம்.
மீனாதான் நம்பர் 1
கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரக்கூடிய 2 படங்கள் ஓடியதுமே, தன்னுடைய ரேஞ்சு உயர்ந்துவிட்டதாகவும் நயன்தாரா நினைத்து கொள்கிறார்.. ஹீரோ இல்லாமலேயே தன்னுடைய படம் ஓடுவதால் இயல்பாகவே ஒரு திமிர் வரத்தான் செய்யும்.
எனினும், நயன்தாரா காலத்தில் நயன்தாரா நம்பர் 1 என்றால், மீனா காலத்தில் மீனாதான் நம்பர் 1.. ஆனால் மீனா எதற்காக இன்ஸ்ட்டா போஸ்ட் அப்படி பதிவிட்டார் என்று தெரியவில்லை..
ஆடு என்பது யாரை குறித்தாலும், அது மோசமான வார்த்தை.. பொதுவாக, ஆட்டுக்கு சிந்திக்க தெரியாது.. ஒரு ஆடு எப்படி செல்கிறதோ, அதேபோல மற்ற ஆடுகளும் செல்லும்.. ஓரிடத்தில் பச்சை பசேலென தாவரம் தெரிந்தால், தற்போதுள்ள இடத்தில் மேய்வதைவிட்டுவிட்டு, அங்கு ஓடிவிடும்.. நுனிப்புல் மேய்வதுதான்ஆடுகளின் வழக்கம்.. எனவே, ஆடுகள் என்று குறிப்பிட்டு மிகவும் அழுத்தமான விஷயத்தை பதிவு செய்துள்ளார் மீனா.
தரக்குறைவான விமர்சனம்
தனக்குதான் முக்கியத்துவம் தர வேண்டும் என்று நயன்தாரா சொன்னதாக சொல்கிறார்கள்.. ஒரு விழாவில் 100 பேர் வருவார்கள்.. தனக்கு மட்டுமே முக்கியத்துவம் தர வேண்டும் என்று நினைக்ககூடாது.. ஆனால், நயன்தாரா அப்படி சொன்னார் என்பதற்கான ஆதாரம், வீடியோ எதுவுமே கிடையாது..
மற்ற விஷயங்களில் நிறைய எதிர்மறை விமர்சனங்கள் நயன்தாராவுக்கு இருக்கின்றன.. தனுஷ் மீது தொடுக்கப்பட்ட தவறான வழக்கு இதற்கு உதாரணம். நீதிமன்றமே அதை தள்ளுபடி செய்துவிட்டது. தனுஷை தரக்குறைவாக விமர்சித்திருந்தார்.. இன்னொருவருக்கு சொந்தமான விஷயங்களை, அவர்களது உரிமையில்லாமல் உபயோகிப்பது தவறு. அந்தவகையில், நயன்தாரா கண்டனத்துக்கு உரியவர்தான்..
லேடி சூப்பர் ஸ்டார்
அதேபோல, லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை யார் அவருக்கு தந்தது என்பது பத்திரிகையாளர்களுக்கே தெரியாது.. அவருக்கு ஜால்ரா அடிப்பதற்காக, யாரோ ஒரு இயக்குனர் சொல்லியிருக்கலாம்.. அப்படியே சொல்லியிருந்தாலும், அதை நயன்தாரா ஏற்றிருக்கக்கூடாது.. ஏனென்றால், லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை முதன்முதலில் பெற்றவர் விஜயசாந்திதான்.. அவர் இன்னமும் உயிருடன் இருக்கும்போது, அதெப்படி அவர் பட்டத்தை நயன்தாரா அனுபவிக்கலாம்?
நீயெல்லாம் லேடி சூப்பர் ஸ்டாரா? என்று நயன்தாராவை எல்லாரும் கிண்டல் செய்யவும்தான், அந்த பட்டத்தை அவர் துறக்க முன்வந்திருக்கலாம்.
அன்று "சிவாஜி" படத்தில் நடித்தும்கூட, சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்பது தனக்கு தெரியாது என்றார் நயன்தாரா.. இதையும் பலர் அப்போதே கிண்டல் செய்திருந்தார்கள். ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.. இயல்பாக பிரச்சனை வருவது வேறு, நயன்தாராவே பிரச்சனையை இழுத்து கொள்வது வேறு.. வேலியில் போற ஓணானை இவங்களாகவே இழுத்து விட்டு கொள்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications