தங்க செருப்பு, வைர புடவை.. எம்மாடியோவ்! வரலட்சுமிக்கு நிக்கோலாய் கொடுத்த பரிசா?
சென்னை: நடிகை வரலட்சுமிக்காக அவருடைய கணவர் நிக்கோலாய் என்னென்ன விலை உயர்ந்து பரிசுகளை கொடுத்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் ஜூலை 3 ஆம் தேதிதான் திருமணம் நடந்தது.
சரத்குமாரின் மகள் வரலட்சுமி கடந்த மார்ச் மாதம் தனது நீண்ட நாள் நண்பரான நிக்கோலாய் என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக அறிவித்து, அவர்களுக்கான நிச்சயதார்த்த புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.

வரலட்சுமிக்கும் நிக்கோலாய்க்கும் மிகவும் எளிமையான முறையில் மும்பையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் ப்ரீ வெட்டிங் நடந்தது. இதையடுத்து ஜூலை 3ஆம் தேதி இருவருக்கும் தாய்லாந்தில் திருமணம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் திருமண பதிவு செய்வதில் சிக்கல் காரணமாக சென்னை தாஜ் ஹோட்டலிலேயே அவர்களுடைய திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் வந்தனர். திருமணத்தையொட்டி ஹல்தி, மெஹந்தி, ப்ரீ வெட்டிங், ரிசப்ஷன், என தொடர்ந்து ஓய்வில்லாமல் சடங்குகள் நடந்தன.
இந்த நிலையில் திருமணம் முடிந்த கையோடு கணவருடன் வரலட்சுமி ஹனிமூன் சென்றுள்ளார். நிக்கோலாய, வரலட்சுமிக்காக ரூ 200 கோடியில் சொத்து வாங்கி வைத்துள்ளாராம். தங்கத்தில் செருப்பு, வைரக்கல் பதிக்கப்பட்ட புடவை, தங்கம், வைர நகைகள் என பரிசு கொடுத்து அசத்தியுள்ளாராம். ஆனால் இந்த பரிசு பொருட்களை எல்லாம் அவர் கொடுத்தாரா என்பது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
நிக்கோலாய் ஏற்கெனவே கவிதா எந்ற பெண்ணுடன் திருமணமானவர். இவர்களுக்கு 15 வயதில் மகள் உள்ளார். கவிதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து நிக்கோலாய் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களது மகள் பளு தூக்கும் வீராங்கனை ஆவார். நிக்கோலாயும் பாடி பில்டர் என்கிறார்கள்.
நிக்கோலாயும் வரலட்சுமியும் தாய்லாந்தில் ஒரு ஹோட்டலில் சந்தித்துக் கொண்டனர். அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. இதையடுத்து நிக்கோலாய் சரத்குமாரையும் அவரது முன்னாள் மனைவி சாயாதேவியையும் சந்தித்து வரலட்சுமியை காதலிப்பதாக தெரிவித்து, அவர்களின் சம்மதத்துடன் வரலட்சுமியை புரபோஸ் செய்தாராம்.
வரலட்சுமியுடன் காதலுக்காகவே தனது மனைவியை அவர் விவாகரத்து செய்தார் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் இதை வரலட்சுமி மறுத்தார். அவரது மனைவியையும் தான் சந்தித்து பேசியதாகவும் இருவருக்கு ஒத்து வராவிட்டால், யாருடன் ஒத்து போகிறதோ அவர்களுடன்தான் வாழ வேண்டும். எனக்கு நிக்கோலாயை பிடித்திருக்கிறது. கல்யாணம் செய்து கொள்ள போவது யார், என்னை பற்றி நெட்டிசன்கள் ஏன் கலவைப்படுகிறார்கள் என ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பியிருந்தார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications