Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பளார் விட்ட பிரியங்கா.. என்னை ஏன்டா மொறைக்குற.. மணிமேகலையின் வீடியோவுக்கு "தரமான பதில்".. இது எப்போ

Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிமேகலை வெளியிட்ட பரபரப்பு வீடியோக்களுக்கு , இதுவரை பிரியங்கா எந்தவிதமான பதிலையும் சொல்லவில்லை. ஆனால், இதுதான் "தரமான பதிலடி" என்று, புரோமோ வீடியோ ஒன்றை, அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

மணிமேகலை வெளியிட்ட அறிக்கையின் அதிர்வலைகள் இன்னமும் அடங்கவில்லை.. இதையடுத்து, பிரியங்கா மீதான குற்றச்சாட்டை பிரபலங்கள் ஒவ்வொருவராக பகிர்ந்து வந்த நிலையில், தற்போது அது மெல்ல ஓய்ந்துள்ளது.

television priyanka manimegalai

கூடும் ஆதரவு: சோஷியல் மீடியாவில் மணிமேகலைக்கு சப்போர்ட்கள் கூடிவரும் நிலையில், விஜய் டிவி பிரபலங்களிடையே பிரியங்காவுக்கு சப்போர்ட் கூடிவருகிறது..

அதேசமயம், பிக்பாஸ் சீசன் 8-ல் போட்டியாளராக மணிமேகலையின் பெயர் தொடர்ந்து அடிபட்டும் வருகிறது. இதற்கு நேர்மாறாக, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், மணிமேகலையின் இடத்தை நிரப்ப புதிய கோமாளி ஒருவர் தொகுப்பாளராக வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய தொகுப்பாளர்: எப்படியும் மணிமேகலை விஜய் டிவிக்கே வந்துவிடுவார் என்று நம்பப்பட்டது. ஆனால், மணிமேகலை நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டதால், புதிய கோமாளி புகழ் தொகுப்பாளராக வரப்போகிறாராம்.

ஒருவேளை, பிக்பாஸ் போட்டியாளராக மணிமேகலை அறிவிக்கப்பட போகிறாரா? அதனால்தான் புதிய தொகுப்பாளர் வருகிறாரா? அல்லது மணிமேகலையை சேனலைவிட்டே நிறுத்திவிட்டார்களா என்று தெரியவில்லை.

மணிமேகலை: ஆனால், பிரியங்காவோ தன்னுடைய தொகுப்பாளர் வேலையை, அதே வேகத்துடனும், அதே கலகலப்புடனும் ஆரம்பித்துவிட்டார்.. மணிமேகலை வெளியிட்டிருந்த அடுத்தடுத்து வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் பரபரப்பை தந்த நிலையில், சோஷியல் மீடியாவில் மணிமேகலைக்கு ஆதரவுகள் பெருகின. இதற்கு இதுவரைக்கும் பிரியங்கா தரப்பில், எந்த பதிலும் தரப்படவில்லை.. எந்த குற்றச்சாட்டுக்கும், விளக்கமும் தரப்படவில்லை..

மணிமேகலையை விமர்சித்து, பிரியங்காவுக்கு விஜய் டிவி பிரபலங்களும் ஆதரவை தந்து போஸ்ட்களை பதிவிட்டு வந்தாலும், இதுகுறித்தும் பிரியங்கா எந்தவிதமான கருத்தையும் சொல்லவில்லை.

புரோமோ: இந்த நிலையில் பிரியங்கா தொகுத்து வழங்கும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒவ்வொன்றும் வெளியாகி பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு வெளியான முதல் ப்ரோமோவில், ஜெயம் ரவியின் நடித்த "பிரதர்" படத்தின் மக்காமிஷி பாடல் ஒலிக்கிறது.. எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அனைவருமே பிரியங்காவை போற்றி புகழ்கிறார்கள்..

குறிப்பாக, நடிகர் பால சரவணன், "இனி எத்தனை வருஷம் ஆனாலும் நீ தான் விஜய் டிவியோட பெஸ்ட் ஆங்கர்.. இன்னும் 2000 வருஷத்துக்கு உங்களை ஒன்னுமே செய்ய முடியாது.. நீங்கதான் ஆங்கர்.. ஸ்டார்ட் மியூசிக் சீசன் 2030-க்கும் நீங்கதான் ஆங்கர்.. நல்லாயிருங்க.. நல்லாருந்துட்டு போங்க" என்கிறார்.

குழப்பம்: ஆனால், இது எதற்குமே பிரியங்கா பெரிதாக ரியாக்ட் செய்து கொள்ளவில்லை. எதையுமே காதில் வாங்காமலும், கண்டுகொள்ளாமலும், பதில் தராமலும் இருப்பதே, மணிமேகலைக்கு தரப்படும் பதிலாக பார்க்கப்படுகிறது. வழக்கம்போல கலகலப்புடன் நிகழ்ச்சியை துவங்கிவிட்டார் பிரியங்கா.. ஆனால், மணிமேகலையோ, பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லப்போகிறாரா? அல்லது ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு செல்லப்போகிறாரா? என்றெல்லாம் உறுதியாக தெரியாமல் அவரது ரசிகர்கள் குழம்பி போயிருக்கிறார்கள்.

இதனிடையே, விஜய் டிவி எப்படி மணிமேகலையை பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்துக் கொள்ளும்? மணிமேகலையை சமாதானம் செய்து, பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக அழைத்து கொண்டால், அது விஜய் டிவி மீதான, விமர்சனங்களை ஓரளவு குறைக்க உதவும் என்றும் கணக்கு போடுகிறதாம். அப்படியே விஜய் டிவி நினைத்தாலும், சுயமரியாதைக்காக வெளியேறி வந்த மணிமேகலை எப்படி விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்பார்? என்ற சந்தேகங்கள் எல்லாம் இணையவாசிகளை குழப்பிவிட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+