பாடி ஷேமிங் செய்த சிவக்குமார்.. வாயை பொளந்துட்டு போன கங்குவா.. இன்னுமா திருந்தல? "எவன்டா" : பிரபலம்
சென்னை: 'ரெட்ரோ' படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ், ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் போன்றோர் நடித்திருக்கிறார்கள்.. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார்.. இந்த படத்தின் டிரெயிலர் 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. அந்த விழாவில் நடிகர் சிவகுமார் பேசும்போது, தமிழ்நாட்டில் சிக்ஸ்-பேக் வச்சவன் யாரு இருக்கா? என்றெல்லாம் கேட்டிருந்தார். சிவக்குமார் ஒருமையில் பேசியிருந்தது, சலசலப்பை உண்டுபண்ணியிருந்தது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தன்னுடைய கருத்து கூறியிருக்கிறார்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "முதலில் மேடையில் பேசும்போது, எப்படி பேச வேண்டும் என்ற வரைமுறை உள்ளது.. அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்? ஒரு நடிகருக்கு சிக்ஸ் பேக் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?

கார்த்தி அப்படி கிடையாது
இன்னும் சிவக்குமார் குடும்பம் திருந்தவேயில்லை.. 35 ஆண்டுகாலம் சினிமாவில் புகழ்பெற்றுவிட்டு, இப்போது "செல்தட்டி சிவக்குமார்" என்ற பெயரைதான் பெற்றிருக்கிறார் சிவக்குமார்.
சூர்யா, ஞானவேல்ராஜா, கார்த்தி, ஜோதிகா இவங்க எல்லாருமே மேடையில் ஏறினால் இப்படித்தான் பேசுவார்கள் போல.. லட்டு விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்டார்.. ஆனால், லட்டு விஷயத்தை கேஷூவலாகத்தான் கார்த்தி சொன்னார்.. அதனால் கார்த்தியை இந்த லிஸ்ட்டில் சேர்க்க தேவையில்லை.
பொளந்துட்டு போன கங்குவா
ஆனால் சூர்யா அப்படியில்லை.. "கங்குவா படம் வந்ததுமே வாயை பொளந்துட்டு பார்ப்பீங்க"ன்னு சூர்யா சொன்னார்.. கடைசியில் வாயை பொளந்துட்டு அந்த படம் போயிருச்சு.. முதலில் சிவக்குமார் எதுக்கு எல்லாரையும் ஒருமையில் பேசுகிறார்? இதுவே மேடையில் சிவாஜி அல்லது எம்ஜிஆர் யாராவது இருந்தால் சிவக்குமார் இப்படி "எவன்டா? அவன்டா?" என்று பேசுவாரா?
எம்ஜிஆர், சிவாஜி எல்லாம் சிக்ஸ் பேக் வைத்துக் கொண்டா நடித்தார்கள்? இத்தனைக்கும் எம்ஜிஆர், முத்துராமன், ஜெய்சங்கர் போன்றோர் உடல்நிலையை சரியாக வைத்து கொண்டவர்கள்.. சிக்ஸ் பேக் வைத்தவர்கள்தான், பெரிய நடிகர் என்றால், மொட்டை ராஜேந்திரன் சூப்பர் ஸ்டாராக இந்நேரம் இருந்திருக்க வேண்டுமே.
பிறவிக்கலைஞன் - ரகுவரன்
விக்ரம், சூர்யா எல்லாம் பிறவிக் கலைஞர்கள்.. ஆனால், ரகுவரனுக்கு மாற்றாக இன்று யாராவது இருக்கிறார்களா? இதே சூர்யாவால், சிவக்குமாரால் ரகுவரன் மாதிரி நடிக்க முடியுமா? இதெல்லாம் இயற்கையாக வரக்கூடியது..
அதுக்காக, இன்னொரு நடிகரை பார்த்து, "இது இருக்கா, அது இருக்கா? எவன்டா இருக்கான்?" என்று கேட்பதா? கொஞ்சமாவது அடிப்படையான விஷயம் தெரிந்திருக்கணும்.
"கலியுலக மார்க்கண்டேயன்" என்று சொன்னால், மண்டைக்கு ஏறிடுமா? மைக்கை பிடித்தாலே இப்படி பேச தோன்றுமா? கிட்டத்தட்ட மற்ற நடிகர்களை "பாடி ஷேமிங்" செய்யும் நிலைமைக்கு வந்துவிட்டது சிவக்குமாரின் பேச்சு.. எப்படி பார்த்தாலும், இது ரொம்ப தப்பான பேச்சு" என்று தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications