என்னாது விஷாலின் உடல்நலம் மோசமடைந்ததற்கு நான் காரணமா? இயக்குநர் பாலா விளக்கம்
சென்னை: நடிகர் விஷாலின் உடல்நிலை மோசமடைந்ததற்கு அவன் இவன் படத்தில் அவர் நடித்ததுதான் காரணம் என்ற குற்றச்சாட்டுக்கு அந்த படத்தின் இயக்குநர் பாலா விளக்கமளித்துள்ளார்.
நடிகர் விஷால் அவன் இவன் படத்தில் நடித்த போது அவர் மாறுகண்ணை வைத்துக் கொண்டு நடித்தார். இந்த படத்தை பாலா இயக்கினார். இந்த படத்தில் விஷாலின் கண்களை மாறுக் கண்ணாக காட்ட அவரது கண்களை தைத்துவிட்டதாக பலர் தெரிவித்து வந்தனர்.

இது போன்றதொரு புகாரை மூத்த செய்தியாளர் ஒருவரும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து மாறுக்கண்ணை வைத்து நடித்ததாலும் அவரது கண்களை தைத்துவிட்டதாலும் விஷாலுக்கு சைனஸ் தொந்தரவு ஏற்பட்டு அதுவே கடைசியில் உடல்நலக் குறைவுக்கு காரணமாகிவிட்டது என சில யூடியூப் சேனல்களுக்கு அந்த செய்தியாளர் பேட்டி கொடுத்திருந்தார்.
இந்த வீடியோக்கள் வைரலான நிலையில் இதை இயக்குநர் பாலா மறுத்துள்ளார். அவர் கூறுகையில், விஷாலின் உடல்நிலை பாதிப்பிற்கு நானா காரணம்? டாக்டர் சர்டிபிகேட் வாங்கித் தர முடியும். அது எப்படி அப்படி செய்ய முடியும் என பதிலளித்துள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால், நடிகைகள் வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடிப்பில் மதகஜராஜா என்ற படம் உருவானது. இந்த படம் 2013 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடுவதாக இருந்தது.
ஆனால் ஏதோ காரணத்திற்காக அது முடியாமல் போனது. இதைத் தொடர்ந்து தற்போது 12 ஆண்டுகள் கழித்து 2025-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷனிற்கு வந்த விஷால், பார்ப்பதற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்தார்.
அவருடைய முகம் வீங்கி, கைகள் நடுங்கின. பேச்சும் குழறியது. இதனால் புரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் எல்லாம் துருதுருனு இருந்த விஷாலுக்கு என்னதான் ஆனது என கேள்வி எழுப்பி கொண்டனர். அவரால் நடக்க கூட முடியாத நிலை இருந்தது.
இதையடுத்து யூடியூப் சேனல்களில் விஷாலின் உடல்நிலை குறித்து பேசப்பட்டது. அப்போது பல செய்தியாளர்கள் பலவிதமான கருத்துகளை தெரிவித்தனர். சிலர் அவரை தனிப்பட்ட முறையிலும் விமர்சித்திருந்தனர். ஒரு சிலர் பாலா, விஷாலை மாறுக்கண் வேடத்தில் நடிக்க வைத்ததால்தான் அவருக்கு சைனஸ் பிரச்சினை ஏற்பட்டு இப்படி உடல்நலம் பாதிக்கப்பட்டது என்றார்கள்.
இந்த நிலையில் விஷால், ப்ரீமியர் ஷோவிற்கு வந்த போது உடல்நலம் சரியாகி வந்திருந்தார். அவர் பேசிய போது , என் கைகள் தற்போது நடுங்கவில்லை. எனக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால்தான் கைகள் நடுங்கின. தற்போது நான் நலமாகிவிட்டேன். எனக்கு என்ன ஆச்சு என கேட்டு வருந்தி பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து்க கொள்கிறேன் என விஷால் தெரிவித்திருந்தார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு












Click it and Unblock the Notifications