இனிமேல் விஜய் கூட படம் பண்ண முடியாது.. அதுவும் இதுதான் காரணம்.. வெளிப்படையாக பேசிய இயக்குனர் சேரன்
சென்னை: இயக்குனர் சேரன் பல திரைப்படங்களை இயக்கி இருக்கும் நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் தான் விஜய்யோடு இனி படம் பண்ண முடியாது என்று அதற்கான காரணத்தையும் கூறி இருக்கிறார்.
நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி இருக்கும் சமயத்தில் தற்போது சேரன் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதே நேரத்தில் சில வருடங்களுக்கு முன்பு தனக்கு வந்த வாய்ப்பை கூட நீங்கள் விஜய் போய் சந்தியுங்கள், அவருக்கு தான் இந்த படம் சரியாக இருக்கும் என்று அனுப்பி வைத்திருந்தாராம். ஆனால் இப்போ என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சிறு வயதிலிருந்து நடிக்க வேண்டும் என்று ஆசையோடு இருந்த சேரன் பிறகு நடிப்பதற்காகவே ஊரை விட்டு கிளம்பி வந்து இருந்த நிலையில் சென்னைக்கு வந்ததும் இங்கிருக்கும் நிலைமையை பார்த்து நாம நடிக்க வேண்டுமா? என்ற ஒரு கேள்வி அவருக்குள் எழுந்து விட்டதாம்.
பொதுவாக சேரனுடைய திரைப்படங்கள் மக்களின் அடிப்படை பிரச்சனை சார்ந்ததாகவும், சமுதாயத்தின் நிலவும் கஷ்டங்களை பற்றியதாகவுமே இருந்து வரும் அதற்கு எடுத்துக்காட்டாக பல திரைப்படங்களை சொல்லலாம். அவர் இயக்கிய முதல் திரைப்படமான பாரதி கண்ணம்மா, அதைத் தொடர்ந்து பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி அதுபோல நடித்து இயக்கிய சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவம் இருந்து தவமாய் தவமிருந்து என்று பல திரைப்படங்கள் இருக்கிறது.
அந்த வகையில் ஆரம்பத்தில் நடிக்க வேண்டுமா என்று யோசனையோடு இருந்த சேரன் நாம ஒரு நடிகராவதற்கு முன்பு ஒரு இயக்குனராக வேண்டும் என்று முடிவெடுத்தாராம். அதற்கு காரணம் சேரனுக்கு போலீஸ் என்றால் அவ்வளவு பிடிக்குமாம். நம்மால் தான் ஒரு போலீசாக முடியவில்லை. ஆனால் சமுதாயத்திற்கு ஒரு நல்ல கருத்தை கூறி சமுதாயத்தை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக தான் இயக்குனராக மாறினேன் என்று சேரன் கூறி இருக்கிறார்.
அந்த நிலையில் தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் சேரனுக்கு கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுமா? வேண்டாமா? என்று ரொம்பவே யோசித்து இருந்த சேரன் பிறகு தைரியமாக நம்முடைய விளையாட்டை விளையாடுவோம் என்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
ஆனால் இவருடைய விளையாட்டை ஒரு சிலர் பாராட்டி வந்திருந்தனர். அதே நேரத்தில் நெகட்டிவ் இமேஜ் உருவாகியும் இருந்தது. லாஸ்லியாவை இவர் தன்னுடைய பொண்ணு மாதிரி என்று பழகியதை பலர் பாராட்டி வந்தனர். அதே நேரத்தில் கவினோடு பழகும் போது ஒரு தந்தைக்குரிய அறிவுரையை சேரன் பலமுறை சொல்லிக் கொண்டிருந்தார்.
இதனால் இளைஞர்களின் மத்தியில் இவருக்கு நெகட்டிவ் பெயர் வந்தது. பெற்றோர் தரப்பில் இவருக்கு பாராட்டு மழை பொழிந்தது. அந்த நேரத்தில் இவருக்கு ஆதரவாக கே எஸ் ரவிக்குமார் உட்பட பல பிரபலங்கள் பேட்டிகளில் பேசியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படியாக இருந்த நிலையில் இப்போதும் சில திரைப்படங்களை இயக்கியும் நடித்தும் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் விஜய் வைத்து படம் எடுப்பீர்களா? என பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு விஜய் வைத்து இனிமேல் படம் எடுக்க முடியாது அதற்கு நிறைய காரணங்கள் இருக்கு இப்போ அவருடைய நிலைமை ரொம்பவே உயர்ந்திடுச்சு. இப்போ படம் எடுக்கனும்னா அவருக்காக கதையை மாற்றணும்.

அது இல்லாமல் அவர் இப்ப ரொம்பவே பிஸியா இருக்கார். கண்டிப்பா அவர்கிட்ட 10 வருஷத்துக்கு டேட் கிடைக்காது என்று சிரித்தபடியே அந்த பேட்டியில் சேரன் கூறி இருக்கிறார். அதே நேரத்தில் சில வருடங்களுக்கு முன்பு ஆட்டோகிராப் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் பிரபல இயக்குனர் ஒருவர் சேரனிடம் ஒரு கதையை கூறியிருக்கிறார்.
அந்த கதையை கேட்டதும் மிரண்டு போன சேரன் என்னால் இந்த திரைப்படத்தில் எல்லாம் நடிக்க முடியாது. இதற்கு விஜய் தான் சரிப்பட்டு வருவார். நீங்க அவரை போய் சந்தீங்க என்று அனுப்பி வைத்தேன் என்றும் இன்னொரு பேட்டியிலும் சேரன் பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications