மாரிமுத்துவை அடிக்க வந்தாங்க.. அவரை கொன்னது “இது” தான்.. நண்பரும் இயக்குநருமான களஞ்சியம் எமோஷனல்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.
அதைத்தொடர்ந்து அவருடைய நண்பர்களும் உறவினர்களும் ரசிகர்களும் அவரைப் பற்றிய பல நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் மாரிமுத்துவோடு ஆரம்ப காலத்தில் இருந்தே துணை இயக்குனர் ஆக இருந்து பிறகு இயக்குனராக மாறிய களஞ்சியம் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நடிகர் மாரிமுத்து ஆரம்ப காலகட்டத்தில் வீட்டிலிருந்து தான் சினிமாவில் சாதித்து விட்டு தான் வருவேன் என்று வீட்டை விட்டு கிளம்பி சென்னைக்கு வந்து பல போராட்டங்களுக்கு பிறகு தான் அவருக்கு துணை இயக்குனராக வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து இயக்குனராக இரண்டு படங்களை இயக்கி அடுத்ததாக நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
அந்த நிலையில் தான் சின்ன திரையில் எதிர்நீச்சல் சீரியலில் அவருக்கு குணசேகரன் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அந்த சீரியல் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்திருந்த நிலையில் தான் அவருடைய எதிர்பாராத மரணம் ரசிகர்களுக்கும், உறவினர்களுக்கும், அவருடைய நெருங்கிய நண்பர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதைத்தொடர்ந்து பலரும் மாரிமுத்து பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் இயக்குனர் களஞ்சியம் மாரிமுத்துவோடு தான் வேலை செய்யும் போது ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் தங்களுக்குள் ஏற்பட்ட நட்பு குறித்து பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அந்த வகையில் மாரிமுத்துவை போல ஒரு மனிதரை பார்க்கவே முடியாது. அவர் இயக்குனராக இருந்தாலும் சரி நடிகராக இருந்தாலும் சரி, தனித்துவமான கேரக்டரை கொண்டவர். அதுபோல அவருக்கு சில நேரங்களில் கோபம் சர் என்று வந்துவிடும்.
நாங்கள் துணை இயக்குனராக இருக்கும்போது ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க போய் இருந்தோம். அப்போ அங்கே திரைப்படம் ஓடிக்கொண்டே இருக்கும்போதே எங்கள் பக்கத்தில் இருந்தவர்கள் கமெண்ட் கொடுத்துட்டே இருந்தாங்க. அது மாரிமுத்து கொஞ்சம் கூட பிடிக்கல. அமைதியா இருக்கும்படி முதலில் சொன்னார். ஆனாலும் அவர்கள் அதையே செய்ய கோபமான மாரிமுத்து அவர்களிடம் சண்டை போட்டார். அவர்கள் மாரிமுத்துவை அடிக்க வந்து விட்டார்கள்.
அப்போ நானும் மாரி முத்துவும் மட்டுமே இருந்ததால் நாங்கள் இருவரும் சேர்ந்து அவர்களை அடித்தோம். அதனால் படத்தை நிறுத்தி வைத்து விட்டு தியேட்டரில் இருந்து எங்களிடம் வந்து விசாரணை செய்தார்கள். பிறகு அவர்களை வெளியே அனுப்பிவிட்டு எங்களை படம் பார்க்க வைத்தார்கள். அப்போதும் கூட அவர்கள் வெளிய வாங்க உங்கள கொன்னுருதோம் சென்று மிரட்டி விட்டு போனாங்க. அந்த மாதிரி மாரிமுத்துவிற்கு டிசிபிளின் ரொம்பவே முக்கியம். அவர் துணை இயக்குனராக இருக்கும்போதே சிகரெட் போன்ற எந்த கெட்ட பழக்கமும் அவருக்கு கிடையாது.

அதுபோல மாரிமுத்துவின் சாவிற்கு காரணமும் சினிமா தான் என்று நான் சொல்லுவேன். காரணம் மாரிமுத்துக்கு சினிமா என்றால் உயிர் என்பதாகத்தான் இருந்து வந்தார். கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே நல்லா படித்துக் கொண்டிருந்த இவருக்குள் சினிமா ஆசை வர தன்னுடைய அப்பாவிடம் சண்டை போட்டுக் கொண்டுதான் சுவற்றில் நான் சினிமாவில் சாதித்தால் உயிரோடு வருவேன். இல்லை என்றால் பிணமாகத்தான் வருவேன் என்று எழுதி வைத்துவிட்டு வந்து இருக்கிறார்.
நாங்கள் துணை இயக்குனராக இருக்கும் போது பொங்கல், தீபாவளி போன்ற நாட்களில் ஊருக்கு போக வேண்டும் என்று கூப்பிட்டால் கூட நான் வரவில்லை நான் சாதிக்காமல் ஊருக்கு வந்தால் எங்க அப்பா என்னை குதிக்காலை வெட்டி விடுவார். நான் வரவில்லை என்று சொல்லுவார். சோகத்தையும் கூட காமெடியாகவே மாரிமுத்து பேசுவார். சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் அவருக்கு பெரிய அளவில் சம்பளம் கொடுக்கப்பட்டது.
அப்போது கூட நான் சினிமாவில் இப்படி சாதிப்தேன் என்று நினைக்கவில்லை. நான் நல்ல நிலைமைக்கு வந்து விட்டேன். எனக்கு இவ்வளவு பெரிய சம்பளம் தந்து இருக்காங்க என்று ரொம்பவே சந்தோஷப்பட்டார். இப்போதும் அவருடைய இழப்பை என்னால் தாங்க முடியவில்லை என்று அந்த பேட்டியில் இயக்குனர் களஞ்சியம் பேசியிருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications