பி.வாசு - கவுண்டமணி கூட்டணிக்கு இப்படி ஒரு வரலாறா? தனி டிரெண்டையே உருவாக்கி இருக்காங்களே?
சென்னை: 80 மற்றும் 90களில் மிகப்பெரிய காமெடி கூட்டணியாக அறியப்பட்ட கவுண்டமணி-செந்தில் காமெடி கூட்டணியை சப்தமே இல்லாமல் 26 படங்களில் உடைத்திருக்கிறார் இயக்குனர் பி.வாசு.
கவுண்டமணியை மட்டும் காமெடியனாக வைத்து அதிகமான படங்களை இயக்கியுள்ள பி.வாசு அவரது காமெடி ஜோடியான செந்தில் இல்லாமல் இயக்கியது தான் பெரிய ஹைலைட்டே .

ஒரே ஒரு படத்திற்காக மட்டும் தயாரிப்பாளருக்காக செந்திலை நடிக்க வைப்பதில் காம்பரமைஸ் செய்துள்ளார் பி.வாசு.
குறுகிய நாட்களே படப்பிடிப்பு நடைபெறும் அந்த காலத்தில் கதாநாயகன் தவிர மற்ற அனைவரும் ஒரே நேரத்தில் பல படங்களுக்கு கால்ஷீட் ஒதுக்கி இருப்பார்கள்.அப்படி இருந்தாலும் 80, 90களில் படங்களை இயக்க விரும்பும் இயக்குனர்கள் மட்டுமின்றி தயாரிக்க விரும்பும் தயாரிப்பாளர்கள் முதற்கொண்டு கதாநாயகனுக்கு அடுத்தபடியாக செந்தில்-கவுண்டமணி கூட்டணியை படத்தில் களம் இறக்குவதை பெரிதும் விரும்பி வந்தனர்.
ஆனால் இயக்குனர் பி. வாசு கொஞ்சம் வித்தியாசமாக கவுண்டமணி மெயின் காமெடி செய்தாலும் செந்திலுக்கு பதிலாக கதாநாயகனே காமெடி செய்தால் நன்றாக இருக்கும் என்று தனித்துவமாக யோசித்து இருக்கிறார்.கதாநாயகன் இணைந்து காமெடி செய்தால் படத்திற்கு மட்டுமல்ல கதாநாயகனுக்கும் நல்லது என்று அப்போதே நினைத்த பி.வாசு தனது படங்களில் கவுண்டமணியை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்.
கவுண்டமணி வைத்து அதிக படங்களை இயக்கிய பி.வாசு மன்னன்,சின்னத்தம்பி, நடிகன், ரிக்ஷா மாமா, மலபார் போலீஸ் போன்ற படங்களில் காமெடி சீன்களை பெரிதளவு வெற்றி பெறவும் வைத்திருக்கிறார். அந்தப் படங்களின் காமெடி சீன்களில் வரும் வசனங்கள் இன்றளவும் பலரால் பேசப்பட்டு வருகிறது.தயாரிப்பாளர் மிகவும் வற்புறுத்தி கேட்டுக்கொண்டதற்காக விஜயகாந்தின் சேதுபதி ஐபிஎஸ் படத்தில் மட்டும் செந்திலை கவுண்டமணியுடன் இணைந்து நடிக்க வைத்திருக்கிறார்.
இது குறித்து சமீபத்தில் கூறியுள்ள இயக்குனர் பி.வாசு சத்யராஜ் -கவுண்டமணி, ரஜினி- கவுண்டமணி இப்படி ஹீரோக்களுடன் இணைந்தே காமெடியன்கள் காமெடி பண்ண வேண்டும் என்று தான் நினைத்ததாகவும்,தனது படங்களில் காமெடியன்களுக்கு என்று தனி ட்ராக் கிடையாது என்றும்,கவுண்டமணி-செந்தில் காம்போவை தனது படங்களில் வைக்கக் கூடாது என்பதையும் தன்னுடைய படம் தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக இதை ஆரம்பத்திலேயே முடிவு செய்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
அதற்காக செந்திலை தன்னுடைய படங்களில் பயன்படுத்தக் கூடாது என்று நினைக்கவில்லை என்றும் தனக்கு செந்திலையும் அவரது நடிப்பையும் மிகவும் பிடிக்கும் என்றும் கட்டுமரக்காரன் படம் செந்திலை மட்டுமே வைத்து காமெடி காட்சிகளை எடுத்துள்ளதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
-
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications