கேட்க கூடாத கேள்விகள் எல்லாம் கேட்டேன்.. இயக்குநர் சரண்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபலமானவர்கள் முதல் எளிமையானவர் வரை யூடியூப் சானல்கள் நடத்துவது என்பது இப்போதெல்லாம் சகஜமாய் உள்ளது.

அதோடு, அதன் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பு... அதோடு லட்சத்தையும் தாண்டி மாதா மாதம் சம்பாதித்தும் வருகிறார்கள்.

இது மிக அருமையான வாய்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.திறமை எந்த விதத்தில் யாரிடம் இருந்தாலும் அதை மேம்படுத்தி சம்பாதிக்க ஒரு வாய்ப்பாகத்தான் யூடியூப் சானல்கள் இருக்கின்றன.,

சித்ரா லட்சுமணன்

சித்ரா லட்சுமணன்

தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் டூரிங் டாக்கீஸ் என்று ஒரு யூடியூப் சானல் நடத்தி வருகிறாரா. அதில் இயக்குநர் சரணை பேட்டி கண்டுள்ளார். அதில் சரண் பேசி இருக்கும் விஷயங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றன.பாரம்பரியமான நிறுவனமான ஏவிஎம் நிறுவனத்துக்கு கதை சொல்ல சென்று தான் போட்ட 10 கண்டிஷன்கள் பற்றி கூறுகிறார்.

தலைப்பு நான்தான்

தலைப்பு நான்தான்

கதை என்னன்னு இப்போ நீங்க கேட்க கூடாது...படத்துக்கு தலைப்பு நான்தான் வைப்பேன்.செட்டுக்கு தயாரிப்பாளர் வரவே கூடாது. 4 வது கண்டிஷன் போடும்போது வெளியில போகச்சொல்லுன்னு சொல்லிட்டாராம் ஏவிஎம் சரவணன்.அது என்ன அந்த நாலாவது கேள்வி?

எனக்கு பரத்வாஜ்

எனக்கு பரத்வாஜ்

இசை அமைப்பாளரை நான்தான் முடிவு பண்ணுவேன்..எனக்கு பரத்வாஜ் தான்னு சொன்னபோது சரவணன் சார் டென்ஷன் ஆகி, அவரை வெளியில போக சொல்லுங்கன்னு சொன்னாராம். குகன் சார்தான் இன்னும் ஆறு கண்டிஷன் இருக்கு.. இரு கேட்போம்னு சொன்னாராம். அடுத்து எடிட்டிங் பக்கமே வர கூடாதது இப்படி நிறைய கண்டிஷனாம் .இப்போது எனக்கு நினைவில்லை என்று சொன்னார்.

இசை எஸ்.ஏ.ராஜ்குமார்

இசை எஸ்.ஏ.ராஜ்குமார்

இசை எஸ்.ஏ ராஜ்குமாரை வச்சுகிட்டா என்ன, அவருக்கு நாங்க வாக்கு குடுத்து இருக்கோம்னு கேட்கும்போதும் சரண் ஒத்துக்காமல், யோசிச்சு சொல்லுங்க சார்னு சொல்லிட்டு போயிட்டாராம் .கார்ல் வீட்டுக்கு போறதுக்குள்ள ஓகேன்னு சரவணன் சார் போன் செய்தாராம்.

குருட்டு தைரியம்

குருட்டு தைரியம்

ஒரு குருட்டு தைரியத்தில் நான் அப்படி கேட்டுட்டேன்னு அப்புறமா எனக்கு புரிஞ்சுது. எவ்ளோ பெரிய நிறுவனம்..அவங்ககிட்ட இப்படி கன்டிஷன்ஸ் போட்டுட்டேன்.உடனே எனக்கு எல்லா வசதியும் செய்து கொடுத்துட்டாங்க. ஜெமினி தலைப்பு ரொம்ப அவங்களுக்கு பிடிச்சு இருந்தது.

வேணும் மானோரமா

இந்த படத்தில் ஆச்சி மனோரமாவுக்கு ஒரு கதாபாத்திரம் வேணும்.இந்த படத்தில் அவங்க நடிச்சுட்டா ஏவிஎம் நிறுவனத்தில் அவங்க 25 படம் நடிச்சு முடிச்சதுன்னு எண்ணிக்கை வந்துரும்னு அது மட்டும்தான் கேட்டுக்கிட்டாங்க.அப்புறமா இடைச் செருகலாத்தான் ஆச்சி கதாபாத்திரம் அமைக்கப்பட்டதுன்னு சொன்னார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+