எதிர்நீச்சலுக்கும், கோலங்களுக்கும் உள்ள வித்தியாசம்!? இனி நடப்பது இதுதான்.. மனம் திறந்த இயக்குனர்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலை பல வருடங்களுக்கு பிறகு இயக்குனர் திருச்செல்வம் இயக்குகிறார். இந்த நிலையில் அந்த சீரியலை பற்றி அவர் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
ஏற்கனவே திருச்செல்வம் இயக்கி நடித்த கோலங்கள் சீரியலுக்கும் இந்த எதிர்நீச்சல் சீரியலுக்கும் உள்ள வித்தியாசங்கள் பற்றி அவர் முதல் முறையாக மனம் திறந்து இருக்கிறார்.

அதுபோல இருக்குமோ
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நேரத்தில், இந்த சீரியல் குறித்து பல்வேறு தகவல்களும் பரவி வருகிறது. ஏற்கனவே இயக்குனர் திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் சீரியலின் கதையைப் போலத்தான் இந்த சீரியலும் இருக்கப் போகிறதோ என்று சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். கோலங்கள் சீரியலில் அபி வீட்டை விட்டு கிளம்பி தன்னுடைய சொந்தக்காலில் நின்று வாழ்க்கையை ஜெயித்தது போல இந்த சீரியலிலும் ஜனனி வீட்டை விட்டு கிளம்பி வெளியே சென்று இருந்தார் ஆனால் அப்பத்தா மீண்டும் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்திருக்கும் நிலையில் அதுபோலத்தான் இந்த சீரியலும் இருக்குமா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுதான் வேற்றுமை
ரசிகர்களின் கேள்வியை குறித்து இந்த சீரியலில் ஸ்கிரிப்ட் ரைட்டராக இருக்கும் வித்யா அதாவது கோலங்கள் சீரியலில் ஆர்த்தியாக நடித்த அதே வித்தியா, திருச்செல்வனிடம் கோலங்கள் பெண்களுக்கும் எதிர்நீச்சல் பெண்களுக்கும் என்ன வித்தியாசம் என்று நீங்கள் உங்களுடைய ஸ்கிரிப்ட் மூலமாக பார்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்க, கோலங்கள் கதாபாத்திரங்கள் அபி, ஆனந்தி, உஷா, ஆர்த்தி, கவிதா, மேனகா இவங்க எல்லாம் ஒரு வீட்டுக்குள்ள சுதந்திரமாக இருந்து வெளியே சுதந்திரத்தை தேடி அலைந்தவங்க. ஆனா, இந்த எதிர்நீச்சல் கதாபாத்திரத்தில் ஜனனி, ரேணுகா, நந்தினி ,ஈஸ்வரி இவங்க வீட்டுக்குள்ளே சுயத்தை இழந்து, சுதந்திரமும் இல்லாமல் போய் வெளியே போனால் என்ன செய்வாங்க என்று ஒரு கேள்வி வரும் என்று கூறி இருக்கிறார்.

மனித சுதந்திரம்
அதுபோல வெளியே சென்று சுயத்தையும், பெற்று சுதந்திரத்தையும் பெற்று மிகப்பெரிய வெற்றி பெறுவார்கள் என்பது தான் இந்த கதையின் கரு அப்படிப் பார்த்தால் எதிர்நீச்சல் பெண்களாக இருந்தாலும் சரி கோலங்கள் பெண்களாக இருந்தாலும் சரி, வெற்றி பெற்றவர்கள் தான் என்று திருச்செல்வன் குறிப்பிட்டு இருக்கிறார். மனித சுதந்திரம் என்பது அவர்கள் அவர்களாகவே வாழ்வது. இதில் ஆண் பெண
பேதம் இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனால் ரசிகர்கள் பலரும் அப்படி என்றால் இனி ஜனனியை தொடர்ந்து, மூன்று பெண்களும் வீட்டை விட்டு கிளம்புவார்களா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அந்த நேரத்துக்காக வெயிட்டிங்
ஏற்கனவே வீட்டை விட்டு கிளம்பிய ஜனனி மீண்டும் வந்து என்ன செய்ய காத்திருக்கிறார் என்று யாருக்குமே தெரியாமல், அதை கெஸ் பண்ண முடியாமல் இருந்து வரும் நிலையில், இனி அடுத்தடுத்த பெண்களும் தைரியமாக முடிவெடுக்க இருக்கிறார்களாம். வீட்டை விட்டு வெளியேறி தங்களுடைய சுயமான கேரக்டரில் அவர்கள் முடிவெடுத்து வெற்றி பெறுவது தான் இந்த சீரியலின் கடைசி முடிவு. இந்த சீரியல் குறைந்தது 5 முதல் 7 வருடங்கள் வரை ஒளிபரப்பாகப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வீட்டில் இருக்கும் மீதமுள்ள மூன்று பெண்களும் இப்போதைக்கு வீட்டை விட்டு கிளம்புவதாக இல்லை என்று தான் தெரிகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications