பொம்பளைய லேசா நினைக்காதே ராசா பாடல் கனகாவுக்காக எழுதப்பட்டதா? என்ன சொல்கிறார் இந்த டைரக்டர்?
சென்னை: விரலுக்கேற்ற வீக்கம் திரைப்படத்தில் பொம்பளைய லேசா நினைக்காதே ராசா என்ற பாடல் கனகாவுக்காக வைக்கப்பட்டதாக இயக்குநர் வி.சேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வாவ் தமிழா எனும் யூடியூப் சேனலுக்கு இயக்குநர் வி.சேகர் அளித்த பேட்டியில் கனகா குறித்து குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: விரலுக்கேத்த வீக்கம் படத்தில் கோவை சரளாவை வடிவேலுக்கு ஜோடியாக போட்டுவிட்டேன்.

விவேக்கிற்கு ஜோடியாக யாரை போடுவது என யோசித்த போது உதவி இயக்குநர்கள் என்னிடம் கொடுத்த லிஸ்ட்டில் கனகாவின் பெயர் இருந்தது. கனகா பெரிய நடிகை, அவருடைய அம்மாவும் பெரிய நடிகை. காமெடியில் நடிப்பார்களா என தெரியவில்லை.
பிஆர்ஓ போய் பேசிய போது விவேக்கிற்கு ஜோடியாக வேண்டாம் என சொல்லிவிட்டார்களாம். இதனால் தேவிகாவிடம் போய் நானே பேசினேன். நான் தென்னிந்தியாவில் மிகப் பெரிய ஆர்டிஸ்ட்டாக இருந்தேன். நான் நினைத்திருந்தால் பெரிய நடிகரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி இருந்திருப்பேன்.
ஆனால் நான் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒரு டிரைவரை காதலித்து ஏமாந்துவிட்டேன். இப்போது என் மகள் காமெடியனுடன் நடித்தால், பிறகு எல்லாரும் 2 சீன், 3 சீனுக்கு நடிக்க கூப்பிடுவார்கள். எனக்கு அதுவே வருத்தமாக இருக்கும் என்றார்.
அப்போது நான், பெண்களை மையமாக வைத்து படம் எடுக்கும் டைரக்டர் நான். உங்கள் மகளை வைத்து படமெடுப்பதால் அவருக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்றேன். பிறகு தேவிகா, "உங்களுக்காக நடிக்க வைக்கிறேன்" என்றார். அந்த படத்தில் பொம்பளைய லேசா நினைக்காதே என்ற பாடலை வைத்தேன்.
5 வயது குழந்தையை போல் அம்மா கூடவே உட்கார்ந்திருப்பார். சீனுக்கு கூப்பிட்டால் வந்து நடிப்பார், பிறகு அப்படியே அமைதியாக உட்கார்ந்திருப்பார். வடிவேலு என்னை வந்து பார்த்து நடிக்க வாய்ப்பு கேட்டார். அவர் ஹிட்டானதை அடுத்துதான் விவேக்கும் என்னை பார்த்து வாய்ப்பு கேட்டார்.
தனிப்பட்ட முறையில் விவேக் ஒரு ஜென்டில்மேன். சரவணப்பொய்கை எனும் படத்தில் என் மகனை நடிக்க வைத்தேன். அந்த படம் சில போட்டி பொறாமைகளால் ரிலீஸாகாமல் போய்விட்டது. அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய போகிறேன். பழனியில் மக்கள் கேட்டுக் கொண்டதால் அங்கு ஷூட்டிங் எடுத்து சரவணப்பொய்கை என பெயரிட்டேன்.
ஒன்னா இருக்க கத்துக்கணும் என்ற படத்திற்கு சம்பளமே வாங்காமல் இசையமைத்துக் கொடுத்தார் இசைஞானி இளையராஜா. சிம்பொனியை கொடுத்ததால் தமிழர்களுக்கு பெருமை. சங்கீதம், கலை எல்லாம் ஒரு கட்டத்திற்கு மேல் எல்லாருக்கும் பொதுவானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
90களின் அழகுக் கன்னியாக திகழ்ந்த கனகா, தனது நுட்பமான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பிரபல நடிகை தேவிகாவின் மகளாகவே இவர் திரைத்துறைக்கு அறிமுகமானாலும், தனது தனிப்பட்ட திறமையால் தனிச்சுவடுகளை பதித்தார்.
கரகாட்டக்காரன் போன்ற ஹிட் படங்களில் நடித்ததால், கனகா ஒரு இனிமையான தமிழ் நாட்டுப் பெண்ணின் முகமாக பரிச்சயமானார். கனகாவின் கண்கள், முகபாவனை மற்றும் இயல்பான நடிப்பு இன்று வரை ரசிகர்கள் மனதில் நிலைத்து உள்ளது.
திரையுலகில் குறுகிய காலம்தான் இருந்தாலும், கனகா தமிழ் சினிமாவின் ஒரு நினைவுக்கூரத்தக்க நடிப்பும் அழகும் கொண்ட நடிகையாக திகழ்கிறார். தற்போது அவர் வெளியுலகமே தெரியாமல் வீட்டுக்குள்ளேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications