வேல ராமமூர்த்தியுடன் மனஸ்தாபமா? விக்ரம் சுகுமாரனுக்கு கடைசி நேரத்தில் வரை தீராத சினிமா தாகம்: பிரபலம்
சென்னை: ஒன்றிரண்டு படங்களை டைரக்ட் செய்துவிட்டு, அதற்கு பிறகு காணாமல் போனவர்கள் பலர் இருக்கிறார்கள்.. நடிகர்கள் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறார்கள். நடிகர்களாவது கேரக்டர்களுக்கு தகுந்தபடி வாய்ப்பு உள்ளது. ஆனால், இயக்குனர்களுக்கு அப்படி வாய்ப்புகள் இல்லை.. வறுமையில் வாடியும், உடலை பாதுகாத்து கொள்ளாதபடியும்தான் சினிமாவில் பல, இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் உள்ளனர் என மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா வேதனை தெரிவித்துள்ளார்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, விக்ரம் சுகுமாரன், பாலுமகேந்திராவின் மாணவர்.. பாலுமகேந்திராவிடம் இருந்து வெளிவந்தவர்கள், அனைவருமே திறமையான இயக்குனர்கள்..

மண்ணை பேசக்கூடிய படங்களை பாலுமகேந்திரா எடுக்காவிட்டாலும், அவரிடமிருந்து இயக்குனராக உருவான விக்ரம் சுகுமாரன், வெற்றிமாறன், சீனு ராமசாமி, போன்றோர் மண்ணை சார்ந்தும், மண்ணின் பெருமையை சொல்லக்கூடிய படங்களை எடுக்கக்கூடியவர்கள்..
மாரடைப்புகள்
இதில் வெற்றிமாறனுக்கு இணையாக வரவேண்டியவர் விக்ரம் சுகுமாரன்.. அதற்கு காரணம்,2013ல் ஒருபடம், பிறகு மற்றொரு படத்தை தந்துவிட்டு, 2025வரை படம் எதுவுமே இல்லாமல் இருந்துள்ளார்.. 2 படங்களே மட்டுமே இதுவரை எடுத்துள்ளார்..
படம் சம்பந்தமாக, மதுரையில் இயக்குனர் ஒருவரை சந்தித்து பேசிவிட்டு, பஸ்ஸில் சென்னைக்கு வரும்போதுதான் மாரடைப்பில் உயிர் பிரிந்துள்ளது.. பஸ்ஸில் வருகிறார் என்றாலே, அவர் இன்னமும் சக இயக்குனராககூட உருவாகவில்லை என்று தெரிகிறது. எடுத்த 2 படங்களும் ஹிட் ஆகவில்லை..
ராவணக்கோட்டம்
இதில் மதயானை கூட்டம் பெரிய ஹிட்டாகியிருக்க வேண்டிய படம்.. இதற்கு காரணம், பிரபலமில்லாத நடிகர்களை தேர்ந்தெடுத்ததா? தெரியவில்லை.. ஆனால், கதை நன்றாக இருந்தது.. மதயானைக் கூட்டம், ராவணக்கோட்டம் என்ற இந்த அவரது 2 படங்களுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சாயலை கொண்டது.. கருத்தியலாக பேசப்பட்டாலும், கமர்ஷியலாக பேசப்படவில்லை..
இப்போதெல்லாம் பெரிய ஹிட் படம் கிடைத்தாலும், வாய்ப்புகள் உடனே கிடைப்பதில்லை.. ஆனால் விக்ரம் சுகுமாரனின் 2 படமும் ஓடாததால், வாய்ப்புகள் வரவில்லை.. வில்லனுக்குரிய முகதோற்றம் இருந்துமே, நடிப்பதற்கும் பெரிய அளவிலான வாய்ப்புகள் வரவில்லை. இயக்குனராகவே வெற்றி அடைய வேண்டும் என்ற வேட்கையிலேயே இருந்துள்ளார்.. அதனால்தான், கதையை சொல்லிவிட்டு, பஸ் ஏறும்போது உயிரிழந்துள்ளார்..
ராஜேஷ் - மன அழுத்தம்
திரைத்துறையில் மாரடைப்பு மரணங்கள் பெருகின்றன.. ஆனால், வயது மூப்பில் மாரடைப்பு ஏற்பட்டு ராஜேஷ் உயிரிழந்ததற்கும், மனோஜ், விக்ரம் சுகுமார் போன்றோர் இளம் வயதில் மாரடைப்பில் உயிரிழந்ததற்கும் வித்தியாசம் உள்ளது.. இதெல்லாம் சினிமாவுக்கு இழப்புதான்.. சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து, பிஸியாக இருந்திருந்தால் இப்படியான மரணங்கள் அதிகரிக்காது. ஆனால் பலரும் வாய்ப்புகள் இல்லாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகிவிடுகிறார்கள்..
சின்ன சின்ன பாலிட்டிக்ஸ்
இங்கே வியாபாரம் ஆட்டிப்படைக்கிறது.. ஒரு ஹிட் படம் தந்துவிட்டால், அதேபோன்று 4 படங்களை எடுப்பதில்தான் டைரக்டர்கள் எடுக்கதான் தயாராகிறார்களே தவிர, புதிதாக சிந்திக்க ஆட்கள் இல்லை.. அப்படியே புதிதாக சிந்தித்தாலும் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை..
விக்ரம் சுகுமாரனுக்கும் சினிமாவில் ஒரு பெரிய கனவு இருந்துள்ளது.. ஆனால் வாய்ப்புகள் வரவில்லை.. இங்கு கமர்ஷியல் படங்களைதான் எதிர்பார்க்கிறார்கள்.. அந்தவகையில் 10 வருடங்களாக படம் இல்லாததால், ஒருவிதமான மனஅழுத்தத்தில் விக்ரம் சுகுமாரன் ஆளாகியிருந்திருக்கலாம்..
4 பேர் சேர்ந்து வேலை செய்யக்கூடிய எந்த இடமானாலும் அங்கே அரசியல் இருக்கும்.. அப்படியிருக்கும் சினிமாவில் நிறைய தள்ளுமுள்ளுகள், அரசியல் இருக்கவே செய்யும்.. சின்ன சின்ன பாலிட்டிக்ஸ் சினிமாவில் நிறைய இருக்கும்.. ஒருவருக்கு வரும் வாய்ப்புகளை கெடுப்பது, அந்த வாய்ப்பை தட்டி பறித்து கொள்வது என பலர் இருப்பார்கள்..
சினிமாவில் கெட்டவர்கள்
"சினிமாவில் நிறைய கெட்டவர்கள் இருக்கிறார்கள்".. என்று 70 ஆண்டு காலம் சினிமாவில் பயணிக்கும் கமல்ஹாசனே சொல்கிறார், அதுபோல, விக்ரம் சுகுமாரனுக்கும் தோல்விகள் இருந்திருக்கலாம்.. வேல ராமமூர்த்தியுடன் மனக்கசப்பு இருந்ததாகவும் சொல்கிறார்கள்.. மனக்கசப்புகள் சினிமாவில் சகஜம்தான்..
ஒன்றிரண்டு படங்களை டைரக்ட் செய்துவிட்டு, அதற்கு பிறகு காணாமல் போனவர்கள் பலர் இருக்கிறார்கள்.. நடிகர்கள் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறார்கள். நடிகர்களாவது கேரக்டர்களுக்கு தகுந்தபடி வாய்ப்பு உள்ளது.
ஆனால், இயக்குனர்களுக்கு அப்படி வாய்ப்புகள் இல்லை.. வறுமையில் வாடியும், உடலை பாதுகாத்து கொள்ளாதபடியும்தான் சினிமாவில் பல, இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மதயானை கூட்டம் திரைப்படத்தில் நடித்த எழுத்தாளர் "வேலராமமூர்த்தி" தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், "என்னை சினிமாவுக்குள் இழுத்து வந்தவர். நான் உண்ணும் சினிமா சோற்றில் ஒவ்வொரு பருக்கையிலும் அவன் பெயர் எழுதப்பட்டிருக்கிறது. தாங்க முடியாத துயரமாக இருக்கிறது" என உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications