டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸில் டிஸ்கோ சாந்தி!
சென்னை: விஜய் டிவியின் டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸில் நடிகை டான்சர் டிஸ்கோ சாந்தி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்கிறார்.
80 களின் சிறப்பு நடன கலைஞர் நடிகை டிஸ்கோ சாந்தி. வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் என்று கூறப்படுகிறது.
தம்பி தங்கைகளுக்கு திருமணம் முடித்து வைத்த பின்னர் தானும் திருமணம் செய்துகொண்ட நடிகை.

ராத்திரி நேரத்து
ஊமை விழிகள் படத்தில் வரும் ராத்திரி நேரத்து பூஜையில் பாடலில் நடனமாடி பெரும் புகழடைந்தவர் டிஸ்கோ சாந்தி. சாந்தகுமாரி இவரது பெயர். அப்போது டிஸ்கோ நடனங்கள் புகழடைந்து இருந்த நேரத்தில் இவரது பெயரும் டிஸ்கோ சாந்தி என்று பெயர் பெற்றது.

நடிகர் ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பல பாடல்களுக்கு நடனமாடி நடித்து இருக்கார் ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி போன்ற பாடல்கள் புகழ் பெற்றவை. நடிகர் ராமராஜன், நடிகர் விஜயகாந்த் என்று முன்னணி நடிகர்களுடன் டான்ஸ் ஆடி வலம் வந்தவர்.

உலகநாயகன் கமல்ஹாசன்
உலகநாயகன் கமல்ஹாசனுடனும் பாடல்களுக்கு நடனமாடியுள்ளார் தத்தோம் தனாங்கு தத்தோம் என்கிற வெற்றி விழா படத்தில் வரும் பாடலுக்கு அருமையான நடனம் ஆடியுள்ளார்,. இவர் பார்ப்பதற்கு ஆங்கிலோ இண்டியன் பெண்போல இருப்பதாகவும் இவர் நடனத்தில் தனி ஸ்டைல் இருப்பதாகவும் சினிமா உலகத்தினர் கூறுவதுண்டு.

பிறகு தரிசனம்
நீண்ட நாட்களுக்குப் பிறகு இவர் விஜய் டிவியின் டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் தரிசனம் தர உள்ளார். என்ன இருந்தாலும் இவர் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் இவர் கலந்துகொள்ள இருக்கிறார். இவருக்கு டான்சுக்குமான பந்தத்தை நாமும் கண்டு களிக்கலாம். நாளை ஞாயிறு 6:30க்கு பார்க்கலாம்.
டிஸ்கோ சாந்தி டான்சும் ஆடுகிறார் பார்க்கலாம்!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications