OTT: ஆன்லைன் டிஸ்கவரி பிளஸ் ...நோ ஸ்கிரிப்ட்ஸ்!
டெல்லி: தொலைக்காட்சிகளில் டிஸ்கவரி சானல் ஒளிபரப்பிய நிகழ்ச்சிகள் எல்லாருக்கும் பிடித்தவை. முக்கியமாக காட்டில் வாழும் விலங்குகள் அவற்றின் வாழ்க்கை முறைகளை படம் பிடித்து காட்டிய சானல். இந்த சானல் இப்போது ஆன்லைனில் டிஸ்கவரி பிளஸ் ஆப் துவங்கி இருக்கிறது.
இந்த தளம் 40 க்கும் மேற்பட்ட வகைகளில் பல நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. மிகவும் பிரபலமான இந்த தளம் கட்டணம் கட்டி பார்க்கும் வசதியிலும், இலவசமாக ஆனால் விளம்பரத்தால் இயக்கப்படும் வசதியிலும் பார்க்க கிடைக்கிறது. நடுநடுவில் விளம்பரம் வரும்ங்க...!
குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகள் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட எட்டு மொழிகளில் டப் செய்யப்பட்டு அவைகள் விரும்பிப் பார்க்கப்பட்டு வருகின்றனவாம்.

டிஸ்கவரி பிளஸ்
டிஸ்கவரி இப்போது தனது ஆன்லைன் பிரீமியம் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்கவரி பிளஸ் இயங்கு தளத்தை லாக்டவுன் நேரத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. டிஸ்கவரி சானல், அனிமல் பிளானட், பிபிசி, டி.எல்.சி, டிஸ்கவரி சயின்ஸ், டிஸ்கவரி டர்போ, ஐடி, உணவு நெட்வொர்க், எச்ஜிடிவி, சமையல் சானல், டிராவல் சானல் போன்ற தொலைக்காட்சி சானல்களிலிருந்து அறிவியல், சாகச, உணவு மற்றும் வாழ்க்கை முறை உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட வகைகளை இந்த இயங்குதளதிலும் பார்க்கலாம்.

சந்தா கட்டிட்டீங்களா?
கட்டண சந்தாதாரர்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பு, டிஸ்கவரி தலைப்புகள், ஆவணப்படங்கள் மற்றும் இயங்கு தளத்தில் கிடைக்கும் அத்தனையும் பார்த்து மகிழலாம். அதே சமயம் இலவச பயனர்களுக்கு டிஸ்கவரியின் லைப்ரரியில் கிடைக்கும் அனைத்தையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

வட இந்திய மொழிகளில்
தென்னிந்தியர்கள் ஆங்கிலம், ஹிந்தி என்று எந்த மொழியில் டிஸ்கவரி பிளஸில் நிகழ்ச்சிகள் இருந்தாலும் தேடி பார்க்கிறார்கள். வட இந்தியர்கள் தங்களது மொழிகளில் கிடைக்கிறது எனும்போது சுலபமாக பார்க்கிறார்கள் என்பதால் அதிகமாக வட இந்திய மொழிகளில் இந்த இயங்குதளம் இயங்குகிறது.

டிஜிட்டல் துறைகளில்
அதிக அளவில் இணைய பயன்பாட்டாளர்கள் மூலம் டிஜிட்டல் திரைகளிலும் பார்ப்பது கட்டணம் செலுத்தி சந்தாதாரர் ஆவது அதிகரித்துள்ளது என்பதை டிஸ்கவரி உணர்ந்தது, அதனால்தான் நிறுவனம் இப்போது இந்தியாவுக்கு இந்த இயங்கு தளத்தை கொண்டு வந்திருக்கிறது என்று அதன் நிறுவனர் சொல்லி இருக்கிறார்.

ஒன்லி மக்கள் விருப்பம்
இந்தியாவில், பெரும்பாலான ஆன்லைன் ஸ்ட்ரீமிங் சேவைகள் அவற்றின் ஸ்கிரிப்ட் நடைமுறை காரணமாக வெற்றியை ருசித்துள்ளன. ஆனால், டிஸ்கவரி ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட விஷயங்களை தங்களது இயங்கு தளத்தில் தருவதை நீக்க விரும்புகிறது, ஏனெனில் இது ஸ்கிரிப்ட் இல்லாத நிதர்சனமாவற்றை மட்டுமே மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப கொடுக்க திட்டமிட்டு உள்ளதால், ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட விஷயங்கள் இந்த இயங்கு தளத்தில் இருக்காது என்றும் தெரிவித்து இருக்கிறது.

OTT தளங்கள்
மற்ற OTT தளங்கள் இப்போதுதான் புதியவற்றை தயாரித்து வழங்க வேண்டிய அவசியத்தில் இருக்கும். ஆனால், டிஸ்கவரிக்கு ஏற்கனவே இருந்த பல ஸ்ட்ரீமிங் வீடியோக்கள் உரிமமாக இருப்பதால் மக்களுக்குப் பிடித்த ஸ்கிரிப்ட் செய்யப்படாத பல நிகழ்ச்சிகள் அவர்கள் விரும்பிப் பார்க்கும் வகையில் கிடைக்கும்..இது டிஸ்கவரி பிளஸ் இயங்குதளத்தின் பிளஸ்!

தமிழ் இந்தி ஆங்கிலம்
தொலைக்காட்சி சானலைப் போலவே, டிஸ்கவரி பல மொழிகளில் மக்கள் விரும்புவதை வழங்க முயற்சித்து வருகிறதாம்.. இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளில் சுமார் 20 சதவிகிதம் டிஸ்கவரி பிளஸின் நிகழ்ச்சிகள் கிடைக்கிறது. இந்த ஐந்து மொழிகளில் 70சதவிகிதமும், மற்றும் 10சதவிகிதம் ஆங்கிலம் மற்றும் இந்திக்கு மட்டுமே என்று நிகழ்ச்சிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications