Run Serial: பாய் ஃபிரண்டுக்கு பச்சக்குன்னு உதட்டில் முத்தம் குடு!
சென்னை: சன் டிவியின் ரன் சீரியல் படப்பிடிப்பு மிகவும் அருமை. யரும் குரலை உசத்தி வில்லி போலவோ, வில்லன் போலவே பேசவில்லை. சத்தம் இல்லாமலும் வில்லத்தனம் செய்யலாம்.
இதற்காகவே இந்த சீரியலுக்கு ஒரு சபாஷ் போடலாம். அமைதியான வசனம், அர்த்தமுள்ள வசனம் என்று தூள் கிளப்பி இருக்கிறார்கள்.
ஒரு லொகேஷனுக்கு ஒரு காட்சி என்று கூட ஷூட் செய்து இருப்பது ரசிக்கும்படி இருக்கிறது.இது போன்ற வித்தியாச சீரியல்கள் வரவேற்கத்தக்கது.

யாரு சக்தி
சக்திக்கு அடிக்கடி மிரட்டல் கால் வருது. அதில் திவ்யா சித்தப்பாவின் ஆள் ருத்ரன் அவளை மிரட்டிக் கொண்டே இருக்கிறான். அவ்வப்போது வீட்டில் யாருக்காவது விபத்து,காலில் ஆணி குத்தி என்று பலப்படுத்தவும் செய்கிறான்.என்ன என்று கேட்டால், உங்க ஆஸ்பத்திரியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரை இருக்குது. அதை ஒப்படைச்சுடுன்னு கேட்கிறான்.

தெரியாது எனக்கு
எனக்கு தெரியாது என்று இவ்ளோ சொல்லியும் நம்பாமல் ருத்ரன் டார்ச்சர் செய்ய,அவளும் ஆஸ்பத்திரி முழுக்க தேடியும் கிடைக்கலை. வீட்டிலும் கிடைக்கலை.சரி,கேரோலின் மனைவிக்கும், அப்பாவுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக சொல்கிறார்களே அங்கு போயி பார்ப்போம் தேடித் பார்த்தால் ,அங்கு காலியான மருந்து அட்டை கிடைக்கிறது. சக்தி வருவதாக கேரோலின் தங்கைக்கு போன் வர, திவ்யா சக்தி ஏதாவது கேட்பான்னு பயந்து உடனே கிளம்பிடறா.

யார் சக்தி
போன்லே சக்தின்னு வருது.. யாரடி அவன்னு அவன் சக்தின்னு திவ்யா ஆஸ்பத்திரி போனிலிருந்து பேசறான் ருத்ரன்.அவள் தயங்கி தயங்கி நிற்க, கடைசியில், அவன் தனது பாய் பிரண்ட்னு சொல்லிக்கறா.அப்போ அவனை அழைச்சுக்கிட்டு நான் சொல்ற இடத்துக்கு வான்னு சொல்றான். அதற்குள் சக்தி இவளுக்கு போன் செய்து,எதுக்குடி கேரோலின் வீட்டுக்கு வந்தே...சொல்லுன்னு சொல்றான்.நீ நான் சொல்ற இடத்துக்கு வான்னு சொல்ல,அவனும் வர ஒப்புக் கொள்கிறான்.

மாடி ரெஸ்ட்டாரென்ட்
மொட்டை மாடி ரெஸ்ட்டாரென்டில் சக்தியுடன் திவ்யா நிற்க, அப்போது போன் வருது,சக்தி போனைத் தர மறுக்க,,அவனிடமிருந்து பிடுங்கி,நீ சொன்ன மாதிரி நான் அழைச்சுட்டு வந்திட்டேன். கொஞ்சம் டைம் கு டு..உன் சரக்கை தேடி குடுத்துடறேன்ன்னு சொல்றா திவ்யா.

ஒரு முத்தம்
சரி, அவன் உன் பாய் ஃபிரண்ட்னு சொன்னியே அவனுக்கு ஒரு முத்தம் கொடுன்னு சொல்றான் .முன்னேபின்னே அறியாதவனுக்கு ஒரு பெண் எப்படி முத்தம் குடுக்க முடியும். இருந்தாலும் முத்தம் தருகிறாள் சசக்தியின் கன்னத்தில். பாய் ஃபிரண்ட்னா கன்னத்தில் முத்தம் குடுப்பே...பச்சக்குன்னு உதட்டில் முத்தம் குடுன்னு சொல்றான் ருத்ரன்.வேறு வழி இல்லாமல் நடுங்கிக் கொண்டே பச்சக் என்று முத்தம் கொடுக்கிறாள் உதட்டில், சக்தி அதிர்ச்சியில் நிற்கிறான்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications