Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்க அப்பா திமுகவா? விஜய்யை திட்டினால் போஸ்டிங்? சத்யராஜ் மகள் திவ்யாவுக்கு வந்த பேராசை: பிரபலம் நச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேராசையை நிரூபித்துவிட்ட, சத்யராஜ் மகள் திவ்யாவுக்கு திமுகவில் பதவி தர மாட்டார்கள். உழைப்புக்கேற்ற மரியாதை கிடைத்தால் அதை திவ்யா பெற்றுக் கொள்ளட்டும், சத்யராஜ் மகளுக்கு பேராசை அதிகம்.. நாவடக்கம் தேவை தங்கை திவ்யாவுக்கு" என்று மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

AG Modern Media சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் தந்துள்ள பேட்டியில், "பொதுவாக, பிரபலமானவர்களை திமுகவில் அதிகம் சேர்க்க மாட்டார்கள்.. அதிலும் சினிமாக்கார குடும்பத்தில் பெரும்பாலும் சேர்க்க மாட்டார்கள்.. நடிகர், நடிகைகளை எல்லாம் ஓரம் கட்டித்தான் வைத்திருக்கிறது திமுக..

television actor sathyaraj divya

போஸ் வெங்கட் என்ற நடிகர், வெறித்தனமான திமுக தொண்டர்.. அவருக்கு திமுகவில் ஏதாவது பதவி தந்திருக்கிறார்களா? இதுபோல எத்தனையோ நடிகர்கள் இன்னமும் திமுகவில் அமைதியாக இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில், ஏதோ தகிடுதத்தம் வேலை செய்து, சத்யராஜ் மகள் திவ்யா, திமுகவில் முதல்வர் முன்னிலையில் இணைந்தார்.. ஆனால், அவரது தந்தை சத்யராஜ் திமுக கிடையாது.. அவர் ஒரு பெரியாரிஸ்ட்.. திவ்யாவின் தம்பி சிபிராஜ், தவெகவில் உறுப்பினராகியிருக்கிறார். ஒரே குடும்பத்திலேயே ஒற்றுமை இல்லை.

தொண்டர்கள்: ஒருவேளை திமுகவில் திவ்யா சேர்ந்தாலும், அடிமட்ட தொண்டர்கள் என்ன வேலை செய்கிறார்களோ, அதை செய்துட்டு போயிட்டே இருக்கணும்.. அதைவிட்டுட்டு, விஜய் பற்றி, எதுக்காக தப்பா பேசணும்? விஜய் என்ன சமூக பணி செய்தார்? என்று திவ்யா கேட்கிறார்.. அப்படின்னா திவ்யா என்ன சமூக பணி செய்தார்?

ஊட்டச்சத்து நிபுணர், முதுகலை பட்டம் பெற்றவர் என்கிறார்.. எந்த ஒரு இடத்திலாவது, ஏழை குழந்தைகளுக்கு திவ்யா சத்துணவு தந்திருக்கிறாரா? மணிப்பூருக்கு அனுப்பி வைத்திருக்கிறாராம் சத்துணவை.. இங்கே இல்லாத ஏழை குழந்தைகள் மணிப்பூரில் இருக்கிறார்களா?

எடப்பாடி பழனிசாமி: முதல்வராக இருந்தபோது, எடப்பாடி பழனிசாமியை சென்று சந்தித்தார் திவ்யா.. ஆனால், திவ்யாவை எடப்பாடி அப்போது அங்கீகரிக்கவில்லை.. ஏனென்றால், அப்போதெல்லாம் திமுகவின் ஆதரவாளராக தன்னை வெளிப்படுத்தி கொண்டிருந்தார் சத்யராஜ். திவ்யாவை அன்றே மதிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டார் எடப்பாடி.

அதேபோல, எம்பி தேர்தலின்போது, தேசிய கட்சியிலிருந்து அழைப்பு வந்தது? சீட் தருவதாக சொன்னார்கள் என்றார்.. ஆனால், அந்த தேசிய கட்சி மறுப்பு தெரிவித்துவிட்டது.. இப்போது திமுகவில் வந்து சேர்ந்திருக்கிறார் திவ்யா,

சீமான், விஜய்: சீமானை ஏன் திவ்யா விமர்சனம் செய்யணும்? உங்களுக்கு என்ன துரோகம் செய்தார் சீமான்? தமிழ் தேசியம் என்று சொன்னால் தப்பா? சீமானை திட்டுவதாலோ, விஜய்யை திட்டுவதாலோ, பெரிய பதவியை திமுக திவ்யாவுக்கு தரப்போவதில்லை என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். ஆனானப்பட்ட கனிமொழியையே தூத்துக்குடிக்கு அனுப்பிட்டாங்க.. இப்பவும் அவர் தமிழ் அரசியலில் இல்லை.. டெல்லி அரசியலில்தான் இருக்கிறார்.

வாய்க்கொழுப்பு சேலையில் வடிவது போல ஒரு வார்த்தை சொல்லி இருக்கிறார் திவ்யா.. அதாவது, சென்னை மாநகராட்சி, அல்லது கோவை மாநகராட்சியின் மேயராக வேண்டும் என்று ஆசை இருக்கிறதாம். ஆனால், திமுகவில் இந்த பதவி வேண்டும் என்று கேட்டு பெற முடியாது.. உங்களை மேயர் ஆக்க சொல்லி, மாண்புமிகு முதல்வருக்கும், மாண்புமிகு உதயநிதிக்கும் ஆர்டர் போடறாங்களா திவ்யா? எத்தனையோ சீனியர்கள் திமுகவில் இருக்கிறார்கள்.. ஓடாக உழைத்து தேய்ந்த தொண்டர்கள் இருக்கிறார்கள்.

உழைப்புக்கேற்ற மரியாதை: அவர்களுக்கு வராத ஆசை திவ்யாவுக்கு எப்படி வந்தது? நீங்க என்ன திமுக பாரம்பரியமா? உங்க அப்பா திமுகவா? மேயராக, வானதிக்கு எதிராக சட்டசபையில் போட்டியிடணும்னு ஆசைப்பட்டால் எப்படி? பதவிக்காக திமுகவில் வாய்ப்பு தர மாட்டார்கள். அதிலும், இப்படியொரு பேராசையை நிரூபித்துவிட்ட திவ்யாவுக்கு பதவி தர மாட்டார்கள். உழைப்புக்கேற்ற மரியாதை கிடைத்தால் அதை திவ்யா பெற்றுக் கொள்ளட்டும்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+