திவ்யா சத்யராஜுக்கு விஜய் மீது அப்படி என்னதான் கோபம்? அஜித்தை இப்படி பாராட்டியுள்ளாரே!
சென்னை: அஜித் பிடிக்குமா இல்லை விஜய் பிடிக்குமா என என்னிடம் கேட்டால் அஜித் என யோசிக்காமல் சொல்லிவிடுவேன் என டாக்டர் திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார். ஏன் என்பதற்கு அவர் கூறிய காரணம்தான் இன்று விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை சேர்ந்தவர் சத்யராஜ். ரஜினி, கமல் கோலோச்சிய காலத்திலேயே தனக்கென தனி பாணியையும் ரசிகர் கூட்டத்தையும் வைத்துக் கொண்டவர். இவருக்கு மகேஷ்வரி என்ற மனைவி உள்ளார்.

இவர்களுக்கு சிபிராஜ், திவ்யா சத்யராஜ் ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர். சிபிராஜ் திரைத்துறையில் இருந்து வருகிறார். எனினும் முன்னணி நடிகர் என்ற இடத்திற்கு வரும் அளவுக்கு அவர் நடிக்கும் படங்கள் அவருக்கு கைக் கொடுக்கவில்லை. ஒரு சில படங்களில் தந்தையுடன் நடித்தும் அவருக்கு அது பிக்காகவில்லை.
சத்யராஜின் மனைவி மகேஸ்வரி
சத்யராஜின் மனைவி மகேஸ்வரி, கடந்த சில ஆண்டுகளாக கோமாவில் இருந்து வருகிறார். இவர் எப்போது பழைய நிலைக்குத் திரும்புவார் என குடும்பத்தினர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
உடல்நிலை சரியில்லை
அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதிலிருந்தே அப்பாவுக்கு நான் தாயாகிவிட்டேன். அவர் எனக்கும் தாய்க்கு தாயாகவும் தந்தைக்கு தந்தையாகவும் என்னை பார்த்துக் கொள்கிறார் என ஒரு முறை மகள் திவ்யா சத்யராஜ் தெரிவித்திருந்தார்.
நெட்டிசன்கள்
நெட்டிசன்களும், அவருக்கு ஆறுதல் தெரிவித்திருந்தனர். திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணர். இவர் மகிழ்மதி எனும் அறக்கட்டளை மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோர்களுக்கு உணவு அளித்து வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு கருத்து தெரிவித்து வருகிறார்.
நாடாளுமன்றத் தேர்தல்
இந்த நிலையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜகவிலிருந்து அரசியலில் சேர அழைப்பு வந்ததாகவும் குறிப்பிட்ட மத ரீதியான அரசியல் செய்ய தனக்கு விருப்பம் இல்லை என்பதால் மறுத்துவிட்டதாகவும் திவ்யா தெரிவித்திருந்தார்.
கட்சியில் சேர விருப்பம்
அதே வேளையில் தான் ஒரு கட்சியில் சேரவுள்ளதாகவும் நிச்சயம் தனிக்கட்சி தொடங்க மாட்டேன் என்றும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் அண்மையில்தான் திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உங்களுக்கு விஜய் பிடிக்குமா அல்லது அஜித் பிடிக்குமா என என்னிடம் சிலர் கேட்கிறார்கள்.
அஜித் பிடிக்கும்
நான் எப்போதும் சொல்வதை போல எனக்கு அஜித் பிடிக்கும். அவர் மிகச் சிறந்த நடிகர், மிக முக்கியமாக அவர் பெண்களை மதிக்கிறார். அவர் ஒரு குடும்பத் தலைவர். அவர் தனது வாழ்க்கையிலும் பெண்களை மிகுந்த மரியாதையாக நடத்துகிறார். ரசிகர்களும் அவரை போற்றி, அவரது வழியை பின்பற்றுகிறார்கள்.
பெண்ணுக்கு மரியாதை
அஜித் ரசிகர்கள் எப்போதும் பெண்களை எங்கேயும் அவமதிப்பதில்லை. அவர்கள் பெண்களை கண்ணியத்துடன் நடத்துகிறார்கள். அது போல் அஜித் ரசிகர்கள் எந்த பெண்ணையும் ஆன்லைனில் அச்சுறுத்தவோ அல்லது மரியாதை குறைவாகவோ நடத்துவதில்லை.
துஷ்பிரயோகம்
எனவே பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அல்லது துஷ்பிரயோகங்களை ஊக்குவிக்கும் அல்லது அவர்களை கண்டிக்காத எந்த நபரும் உண்மையான தலைவர் என திவ்யா தெரிவித்துள்ளார். அஜித் குறித்து திவ்யா இத்தனை கருத்துகளை கூறியுள்ள நிலையில் அப்போ விஜய் பெண்களை மதிக்காதவரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் மீது மறைமுக அட்டாக்
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திவ்யா சத்யராஜ் அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய போது துணை முதல்வர் உதயநிதி, ஏசி கேரவனில் சொகுசு விமானத்தில் நண்பர்களின் திருமணத்திற்கு செல்லும் போலி அரசியல்வாதி கிடையாது என தெரிவித்திருந்தார். அப்போதும் அவர் விஜய்யைத்தான் விமர்சனம் செய்கிறார் என பேசப்பட்டது.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications