Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காத்தோட்டோமா இருக்கீங்களே.. அதுக்கு டைம் ஒதுக்கலாமே.. டிடியைக் கலாய்க்கும் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கதாநாயகிகளை போலவே தொகுப்பாளர்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கிறது.

அதுவும் நம்ம டிடி என்கிற திவ்யதர்ஷினி பற்றி சொல்லவே வேண்டாம். அவருடைய படப்பட பேச்சுக்கும் சிரிப்புக்கும் ரசிகர்கள் என்றுமே அடிமைதானாம்.

இருந்தாலும் இவரைப்பற்றிய வதந்திகளுக்கும் பேட் கமெண்ட்களும் பஞ்சமில்லை. அந்த மாதிரி தான் இப்ப கூட இவரை ரசிகர்கள் இணையதளத்தில் கலாய்ச்சி தள்ளுகிறார்கள்.

 நீலகண்டன் டிடி

நீலகண்டன் டிடி

டிடி என்றாலே தமிழக மக்களுக்கு நல்லாவே தெரியும் அந்த அளவுக்கு விஜய் டிவியில் மூலமாக இவர் பிரபலமானவர். இந்த டிவியில் பணியாற்றி கொண்டிருக்கும் போதுதான் இவருக்கு திருமணமும் முடிந்து, அது விவாகரத்தும் ஆனது. அதன்பிறகு இவர் சிங்கிளாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இருந்தாலும் இவரைப்பற்றி அவ்வபோது பல கிசுகிசுக்கள் வந்து கொண்டிருக்கின்றது. இருந்தாலும் இதைப் பற்றி அவர் கொஞ்சம் கூட கவலைப் பட்டது இல்லை. அவருடைய வேலையில் முழு கவனத்தையும் செலுத்தி சாதித்து வருகிறார்.

 விதம் விதமான போட்டோக்கள்

விதம் விதமான போட்டோக்கள்

தற்போது அவருக்கு காலில் அடிபட்டு இருக்கும் இந்த சூழ்நிலையில் இணையதளங்களில் வீட்டில் இருந்துகொண்டே விதவிதமாக போட்டோ எடுத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டே ஆடிக்கொண்டு வீடியோக்களையும் இணையதளத்தில் பதிவேற்றி வருகிறார். இதனை பார்த்த அவருடைய ரசிகர்கள் ஆனந்த அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இவரும் இவருடைய அக்காவும் ஆடிய ஆட்டம் தான் இணையதளத்தில் டிரண்டாக போனது. இப்போ கொஞ்சம் மாற்றமாக தன்னுடைய பழைய வீடியோ ஒன்று இணையதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

 உள்ளாடை டிரஸ்ஸில் டான்ஸ்

உள்ளாடை டிரஸ்ஸில் டான்ஸ்

அதில் அவர் உள்ளாடையோடு கூடிய ஆடையை அணிந்துகொண்டு ஆடியிருக்கிறார். ஸ்ரீலங்காவில் ஷூட்டிங் நடைபெறும் போது எடுத்த வீடியோ போல . அதை இப்போது பதிவிட்டிருக்கிறார் .அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தும் அவரை கலாய்க்கும் சில நெட்டிசன்கள் இவரை கழுவி கழுவி ஊத்தி இருக்கிறார்கள். உள்ளாடையோடு இவர் ஆடிய ஆட்டம் ரசிகர்களை ஆட்டம் காண வைத்திருக்கிறதாம். சிலர் இவருடைய முடி ஒரு சில வெள்ளையானதை சுட்டிக்காட்டி அதற்கு கொஞ்சம் டை அடிக்கக் கூடாதா.... இப்படி காற்றோட்டமாக வந்திருக்கிற உங்களுக்கு இதுக்கு கூட நேரமில்லையா என்றும் கலாய்க்கிறார்கள்.

 தன்னம்பிக்கைன்னா டிடிதான்

தன்னம்பிக்கைன்னா டிடிதான்

அது மட்டும் இல்ல டிடி தன்னம்பிக்கையில் சாதித்த பெண்களில் ஒருவர் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே தொகுப்பாளராக அறிமுகமாகி விட்டாராம். ஸ்கூல் போய்கிட்டு இருக்கிற டைம்ல சின்னதா ஒரு இடத்தில் ஆடிசன் நடக்கிறது என்று கேள்விப்பட்டதும் ஸ்கூலில் இருந்து வந்து ஒரு அம்பாசிடர் காரில் அந்த இடத்திற்கு சென்று அங்கு தான் இவருடைய யூனிபார்மை மாற்றிவிட்டு ஒரு ஜீன்சும் டீ ஷர்ட்டும் போட்டு கிட்டு ஆடிசனுக்கு போனாராம்.

 ஆறு லைன் முதல் விஜய் டிவி வரை

ஆறு லைன் முதல் விஜய் டிவி வரை

அங்கு போனதும் அவருக்கு ஒரு ஆறு லைன் வசனம் கொடுத்தாங்களாம். இதை பேசுங்கள் என்று சொன்னதும் இவர் பேசி இருக்கிறார் .அவர் பேசி முடித்ததும் அவர்கள் போதும் நமக்கு ஒரு புது ஆங்கர் கிடைத்துவிட்டார் என்று கூறினார்களாம். அது இன்றுவரையிலும் இவ்வளவு பெரிய இடத்திற்கு கொண்டு செல்லும் என்று அவருக்கு அப்போது தெரியவில்லையாம். முதலில் தொகுப்பாளராக வேலை பார்க்கும் போது இவருக்கு 1000 ரூபாய் சம்பளம் கிடைத்ததாம்.

 அழுதுட்டாராம்

அழுதுட்டாராம்

ஸ்கூல் படிக்கும்போதே இவர் தொகுப்பாளராக பணியாற்ற வந்துவிட்டதால் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது இவரால் சரியாக ஸ்கூலுக்கு செல்ல முடியவில்லையாம். பிரச்சனை வந்திருக்கிறது ஸ்கூலில். அப்போ இவங்க மிஸ் இவங்கள போல அட்டெண்டன்ஸ் கம்மியான ஸ்டூடண்ட் தனியாக அழைத்து பேசிக் கொண்டிருந்திருக்கிறார். இதை பார்த்ததும் இவருக்கு அழுகையே வந்து விட்டதாம் .இருந்தாலும் இவரை கிளாசுக்கு போக சொல்லி இருக்கிறார். அப்போது தான் இவருக்கு கொஞ்சம் நிம்மதி வந்தது.

 மறக்க முடியாத ஆசிரியை

மறக்க முடியாத ஆசிரியை

கிளாசில் வந்ததும் மறுபடியும் வந்து யாருக்கெல்லாம் அட்டன்டன்ஸ் கம்மியாக இருக்கிறது என்று நேம் வாசித்திருக்கிறார்கள். அதில் இவருடைய பெயர் வரவில்லையாம். இவருக்கு ஒரே குழப்பமாக இருந்திருக்கிறது கொஞ்ச நாள் கழித்துதான் அந்த மிஸ் சொன்னாங்களாம் நீ எதற்காக போனே என்று எங்களுக்கு தெரியும். உன்னுடைய லீவு ஒரு பயனுள்ளதாக இருந்திருக்கிறது என்று சொன்னார்களாம் அந்த ஆசிரியரை இவரால் மறக்கவே முடியாதாம். அவருடைய ஆரம்ப காலத்தில் பள்ளிகளில் தொடங்கி கல்லூரிகள் வரை ஆசிரியர்கள் இவருக்கு நன்றாக உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். வீட்டில் உள்ளவர்களின் அரவணைப்பும் இவருக்கு கிடைத்ததால் தான் இவ்வளவு பெரிய இடத்திற்கு வர முடிந்தது என்று நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

 அக்காவும் சூப்பர் ஆங்கர்

அக்காவும் சூப்பர் ஆங்கர்

தொகுப்பாளர்களில் இவருக்கு ரொம்பவும் பிடித்தது இவரோட அக்கா தானாம் .அவரைப் பார்த்துதான் இவருக்கும் இதில் நுழைய வேண்டும் என்ற ஆசையே வந்திருக்கிறதாம். இவரும் இவருடைய அக்காவும் நாட்டியத்தில் பெயர் பெற்றவர்கள் என்பது நிறைய பேருக்கு தெரியாது. அதனால்தான் இந்த லாக்டோன் டைம்ல இருவரும் நாட்டியத்தை வீடியோ எடுத்து இணையதளத்தில் பதி விட்டிருக்கிறார்கள்.] திருமணம் முடிந்து விவாகரத்து ஆன பிறகு டிடி தன்னம்பிக்கையோடு மட்டுமல்ல தனி அழகோடு தன்னை விதவிதமாக போட்டோ எடுத்து இணையதளத்தில் அப்லோட் பண்ணுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

 கியூட்னஸ் தொடரட்டும்

கியூட்னஸ் தொடரட்டும்

தன்னம்பிக்கை பேச்சுக்கள் மட்டுமின்றி இவருடைய நடவடிக்கைகளும் சிலருக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது. சில ரசிகர்கள் இவரை பார்த்து உங்களை போல தான் எங்கள் பெண் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்று சொல்லுவது இவருக்கு ரொம்பவும் ஆனந்தமாக இருக்கிறதாம். சிலர் ரசிகர்கள் இவரை செல்லமாக கன்னத்தை அடிக்கடி கிள்ளி கொண்டிருக்கிறார்களாம். இவருடைய கியூட்னஸ் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது போல. வாழ்த்துகள் டிடி.. இப்படியே இருங்க எப்பவுமே.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+