DNA Review: புதிய சஸ்பென்ஸ் த்ரில்லர்! பார்க்கலாமா வேண்டாமா? முழு விமர்சனம் இங்கே!
DNA
ஓடிடி தளம்: அமேசான் பிரைம் (Prime)
ரேட்டிங்: 3.5/5
அதர்வா, நிமிஷா சஜயன், முகமது ஜீஷான் அய்யூப் ஆகியோர் நடித்து, நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளிவந்த படம்தான் 'DNA'.

கதை
படம் ஒரு இரவு விபத்துடன் தொடங்குகிறது. அந்த விபத்தில் ஒரு பெண்ணும் ஆணும் பைக்கில் அடிபட்டு சாலையில் கிடக்கிறார்கள். அவர்களின் பச்சிளம் குழந்தை ஒரு ஓரத்தில் விழுந்து அழுது கொண்டிருக்கிறது. அந்த வழியாகச் செல்லும் ஆம்புலன்ஸ் இதைக் கண்டு மூவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறது.
இவர்களை இடித்த நபரும் (முகமது ஜீஷான் அய்யூப்) கூட செல்கிறார். அந்த மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறக்கிறது. அடிபட்ட ஆணும் பெண்ணும் இறந்துவிடுகிறார்கள். இவர்களின் குழந்தை, இறந்த குழந்தையின் தாய்க்கு கொடுக்கப்படுகிறது.
சில வருடங்களுக்குப் பிறகு என்று கதை தொடங்குகிறது. அதில் அதர்வா அளவுக்கு அதிகமாகக் குடிப்பது, புகைப்பிடிப்பது என காதலி பிரிந்த சோகத்திற்காக வாழ்ந்து வருகிறார். இதனால் இவரின் தந்தை அதர்வாவைத் திட்டித் தீர்க்கிறார். வசதியான குடும்பத்தில், நல்ல வேலை, அந்தஸ்தில் உள்ள அதர்வாவின் பெற்றோருக்கு இவரின் இந்தப் போக்கு கவலை அளிக்கிறது.
இவருக்குத் திருமணம் ஆகாததால் இவரின் தம்பிக்கும் திருமணம் தள்ளிப்போகிறது. ஆனால் அதர்வா ஒரு ஆஸ்ரமத்திற்குச் சென்று அங்கு தங்கி வந்ததால் குடிப்பழக்கத்தை நிறுத்திவிடுகிறார்.
இன்னொரு பக்கம், நாயகியாக வரும் நிமிஷா சஜயன் வீட்டில், இவருக்குப் பார்க்கும் வரன்கள் எல்லாம் நிமிஷாவின் குறும்புப் பேச்சு, வெகுளித்தனமான போக்கு உள்ளிட்டவையால் நின்று விடுகின்றன. இன்னொரு பக்கம், ஒரு வயதான மூதாட்டி கட்டைப் பையில் வைத்து, ஒவ்வொரு மருத்துவமனையிலும் பிறந்த குழந்தையைத் திருடிச் செல்கிறார்.
ஒரு கட்டத்தில் அதர்வாவுக்கும் நிமிஷாவுக்கும் திருமணம் நிச்சயம் ஆகிறது. அதர்வா மது அருந்துபவர்; நிமிஷா சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். அதர்வா வீட்டில் நிமிஷாவுக்கு மனநிலை சற்று குன்றியவர் என்று தெரிந்தே திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள்.
திருமணத்திற்குப் பின் இருவருக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது. பிறந்த குழந்தையை நிமிஷாவிடம் செவிலியர் கொடுக்கிறார். பின்னர் எடை பார்த்து வந்தபின் அவரிடம் கொடுக்கும்போது, "இது என் குழந்தை இல்லை" என்று சொல்கிறார். அப்போது எல்லோரும் "இவர் மனநிலை குன்றியவர், அப்பப்போ இப்படிப் பேசுவார்" என்று சொல்கிறார்கள்.
ஆனால் அதர்வாவுக்கு, நிமிஷா சொல்வதில் உண்மை உள்ளது என்று எண்ணத் தோன்றுகிறது. பிறகு ஒரு தனியார் ஆய்வகத்தில் DNA டெஸ்ட் எடுத்துப் பார்க்கும்போது, தங்களின் குழந்தை இல்லை என்று அதர்வா உணர்கிறார். பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படுகிறது. அந்தக் குழந்தையை காவல்துறையும் அதர்வாவும் தேடிக் கண்டுபிடித்தார்களா என்பதுதான் கதை.
படம் ஆரம்பத்தில் காட்டப்படும் ஒரு விபத்தின் மூலம் ஒரு கதையை உருவாக்கி, அதை அதே நேர்கோட்டில் கொண்டு சென்றதை வெகுவாகப் பாராட்டலாம். அந்தக் கதைக்கு இயக்குநர் அமைத்த கிளைக் கதைகளும் வலுவாக இருந்தன. அதுபோக அதர்வா, நிமிஷாவின் நடிப்பு இப்படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்தது. மேலும், வேகமாக, சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகளோடு பயணிக்கிறது.
அதுவும் இந்தக் குழந்தைகளை யார் கடத்துகிறார்கள், இவற்றை வைத்துச் சொல்லப்படும் கதை பின்னணி என்ன என்பதை எல்லாம் மிக அழகாக, டீடெய்லாகச் சொன்ன விதம் அருமை. ஜிப்ரானின் இசை மேலும் வலு சேர்த்தது. ஒரு பாட்டியைக் காட்டி படம் பார்ப்பவர்களை மிரளவிட்டுள்ள அந்தக் காட்சிகள் எல்லாம் வேற லெவல்.
கதை, திரைக்கதை, காட்சி அமைப்புகள் எல்லாமே பக்காவாகச் செய்திருந்தனர். இந்தப் படம் திரையில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்க வேண்டிய படம். சில தவறான விமர்சகர்களால் படம் பெரிய வெற்றி அடையாமல் சென்றுவிட்டது. ஆனால், ஓடிடி வெளியீட்டிற்குப் பிறகு எல்லா தரப்பிலும் நல்ல விமர்சனம் வந்த வண்ணம் உள்ளது. என்ன குறை என்றால், ஆரம்ப கட்டத்தில் அதர்வாவின் குடிப் பழக்கக் காட்சிகள் ரொம்ப நீளமாகச் சென்றன.
நாயகிக்கு மன வளர்ச்சி சற்று குன்றியவர் என்று சொல்லக் காரணமாக இருக்கும் காட்சிகள் எங்குமே காட்டத் தவறியது இது மட்டுமே சிறு குறை. மொத்தத்தில் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய தரமான படம்தான் 'DNA'.
- குரு கிருஷ்ணன்
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications