என்னாச்சு லொள்ளுப்பா.. சன் டிவி இதை ஏன் தள்ளி வச்சுருச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவி காமெடியை தள்ளி வச்சுருச்சு... காமெடி என்று ஒன்றை இப்போது சன் டிவி கண்டு கொள்வதே இல்லை.

சனிக்கிழமை காலை ஆரம்பித்து இரவு வரை வழக்கம் போல சீரியல்கள். ஞாயிறு மட்டும்தான் வழக்கமான நாளில் இருந்து மாறுபட்ட நிகழ்ச்சிகள்.

அதிலும், காலை 1 மணி வரை ஜெய் அனுமான் சீரியல், அலாவுதீன் சீரியல், என்று சீரியல்கள் ஆதிக்கம். அடுத்துதான் சன் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள்.

கவலையைத் தள்ளுப்பா

கவலையைத் தள்ளுப்பா

ஞாயிறு காலையில் சொல்லுங்கண்ணே சொல்லுங்க.. லொள்ளுப்பா கவலையைத் தள்ளுப்பா போன்ற காமெடி நிகழ்ச்சிகள் இருந்தன. இரவு நேரங்களில் காமெடி ஜங்க்ஷன் நமக்கு எதுக்கு டென்சன் போன்ற நிகழ்ச்சிகளும் இருந்தன. இப்போது எதுவுமே இல்லை.

ஆதித்யா டிவி

ஆதித்யா டிவி

ஆதித்யா என்று ஒரு தனி சானல் இருப்பதாலோ என்னவோ, சன் டிவி இப்படி துளி கூட காமெடிக்கு இடம் தராமல் முழுக்க முழுக்க சீரியஸாக சீரியல் மற்றவை என்று ஒளிபரப்பிக் கொண்டு இருக்கிறது. இது நல்லதுக்கு இல்லை என்று சானலுக்கு தெரியாதா என்ன?

ஸ்டேண்டப் காமெடி

ஸ்டேண்டப் காமெடி

ஸ்டேண்டப் காமெடி விஜய் டிவியில் ஹிட் ஆன புதிதில் சன் டிவி, கலைஞர் டிவி என்று மாற்றி மாற்றி ஞாயிற்று கிழமைகளில் ஸ்டேண்டப் காமெடிகளை ஒளிபரப்பி வந்தன. மக்களை திகட்ட திகட்ட காமெடிகளை ரசிக்க வைத்தன. வயிறு குலுங்க சிரிக்க வைத்தன.இந்த போட்டியில் புதுப்புது கலைஞர்கள் உருவாகினர்.

விஜய் டிவி

விஜய் டிவி

இன்று விஜய் டிவி மட்டும் எதோ ஒரு வகையில் புது கலைஞர்களை உருவாக்கி அவர்களுக்கு வாய்ப்பும் கொடுத்து வருகிறது. ஆனால், போட்டி இல்லை. புதுப்புது கலைஞர்கள் உருவாகும் வாய்ப்பும் அவ்வளவாக இல்லை. இது ஒரு இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலை நீடிக்கவும் கூடாது. வெறும் சீரியல்களில் வாரம் முழுக்க மக்கள் மூழ்கி இருக்கவும் கூடாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+