இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு முத்தம் கொடுத்தவர் லதா மங்கேஷ்கரின் அத்தையாமே!
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: சத்யா படத்தில் 'வளையோசை' பாட்டு லதா பாடியது நமக்கு பிடிச்ச பாட்டு. அதிலேயே 'இங்கேயும் அங்கேயும் ஒரே முகம்' பாட்டு செமயா இருக்கும். அதை பாடியதும் லதாஜி தான்.
லதா மங்கேஷ்கர்.... தீனாநாத் மங்கேஷ்கர் ஒரு கோபக்காரர். அவர் அப்பா கணபதி பட் ஒரு பிராமண கோவில் அர்ச்சகர். மங்கேஷி கிராமத்தில் ஸ்ரீ மங்கேஷ் கோவிலில் அர்ச்சகர். தீனாநாத்தின் அம்மா ஒரு தேவதாசி.

கணபதி பட்டுக்கு மனைவியோடு பிறந்தவர் தான் ஜிதேந்திர அபிஷேகியின் அப்பா பல்வந்த் ராம் அபிஷேகி. அபிஷேகம் செய்பவர் என்பதில் இருந்து எடுத்த அபிஷேகியை கணபதி பட்டின் பேரன் ஜிதேந்தர் சேர்த்துக்கொண்டார். மங்கேஷ் கிராமத்தை சேர்ந்தவர் என்கிற அர்த்தத்தில் தீனாநாத் மங்கேஷ்கர் என சேர்த்துக் கொண்டார் இவர்.
பல்வந்த்ராவ் அபிஷேக்கிக்கு ஒரு சகோதரி உண்டு. சகோதரியின் மகன் தான் பண்டரிநாத் கோலாப்புரி. பண்டரிநாத் கோலாப்புரியின் மகள்கள் தான் ஷிவாங்கி, பத்மினி, தேஜஸ்வினி. பத்மினி கோலாப்புரி தான் நடிகையாக நாம் பார்த்திருக்கிறோம். இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு முத்தம் கொடுத்து வைரலானவர். ஷிவாங்கி கோலாப்புரி வில்லன் நடிகர் சக்தி கபூரை மணந்து கொண்டார்.
இவர்களது மகள் தான் ஷ்ரத்தா கபூர். மூன்று கோலாப்புரிக்களும் அத்தைகள் .தீனநாத் மங்கேஷ்வர் மகள்கள் லதா, மீனா, ஆஷா, உஷா நால்வரோடு ஹிருதய நாத் என்கிற மகனும் உண்டு.
தீனாநாத், ஜிதேந்திர அபிஷேக்கி, லதா, ஆஷா எல்லோருமே இசையில் சிறந்தவர்கள். லதா மங்கேஷ்கரின் அப்பா தீனநாத் நர்மதா என்கிற பெண்ணை மணந்தார். நர்மதாவுக்கும், தீனநாத்துக்கும் லதிகா என்கிற மகள் பிறந்தார். ஆனால் லதிகா சிறு வயதிலேயே இறந்து விட பின்னாலேயே தாய் நர்மதாவும் இறந்தார். தீனநாத் நர்மதாவின் சகோதரி ஷெவந்தியை மணந்தார். இவர்களுக்கு தான் அந்த ஐந்து குழந்தைகள்.

லதாவின் உண்மையான பெயர் ஹேமா. தந்தை இறந்த லதிகாவின் நினைவாக ஹேமாவை லதா என அழைக்க அதுவே பெயரானது. தீனநாத் ஆல்கஹாலுக்கு அடிமையாக 41வது வயதில் இறந்தார்.
குடும்பத்தை ஏற்ற லதா முதலில் 1942ல் மராத்தி பாடலோடு துவங்கினார். 1943ல் முதல் ஹிந்தி பாடலும் கிடைத்தது. ஆஷாவும், லதாவும் சிறிய ரோல்களில் நடிக்கவும் செய்தனர்.
லதா தன் சகோதரன் மற்றும் சகோதரிகளுக்காக திருமணமே செய்து கொள்ளவில்லை. இந்திய கிரிக்கெட் போர்டின் முன்னாள் தலைவர் ராஜ் சிங் துங்கர்பூரோடு காதல் இருந்தது. லதாவின் சகோதரர் ஹிருதயநாத்தின் நண்பர் ராஜ்சிங் ராஜஸ்தானின் துங்கர்பூர் நகர ராஜகுடும்பத்தை சேர்ந்தவர். லதா-ராஜ் சிங் பேசி, பழகி காதல் கொள்ள திருமணப் பேச்சு வரை சென்றது.
ராஜ்சிங்கின் தந்தை லதா ராஜ குடும்பம் அல்ல என்பதால் மறுக்க திருமணம் தடைபட்டது. ராஜ் வேறு திருமணம் செய்து கொண்டார். லதா காதலோடு தனியாகவே வாழ்ந்துவிட்டதாக செய்தி உண்டு. லதாவை பல இசையமைப்பாளர்களோடு சேர்த்து பல வதந்திகளை வடநாட்டு பத்திரிகையாளர்கள் எழுதியதுண்டு. ஆனால் இது எதையும் சட்டை செய்யாத லதா தன் பாடல்களோடு தன் இசைப்பணிகளோடு வாழ்ந்தார்.
ஐந்து மராத்திப் படங்களுக்கு இசையமைப்பாளராகவும் தன் பணியை செய்தார். ஆராரோ ஆராரோ பாடலை ஆனந்த் படத்திலும், கண்ணுக்கொரு வண்ணக்கிளி படத்தில் இங்கே பொன் வீணை பாடலும், எங்கிருந்தோ அழைக்கும் பாடலை என் ஜீவன் பாடுது படத்திலும் பாடியவையே தமிழில் வெளிவந்த பாடல்கள்... ஹிந்தியில் அவர் தொடாத உச்சமேயில்லை... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications