நக்ஸலைட் டூ ஹீரோ! சங்கவி முதல் நிஷாந்தி வரை! இந்தியில் ஹீரோயினாக்கிய மிதுன் சக்கரவர்த்தி! யார் அவர்?
சென்னை: தமிழ் நடிகைகளை இந்தி படங்களில் நடிக்க வைத்த பெருமை வங்காள தேசத்தில் பிறந்த அந்த நடிகரையே சாரும். தமிழகத்தின் மீதான காதலால் ஊட்டியிலேயே ஹோட்டல் வைத்து நடத்தியவர், யார் அவர் என்பதை பார்க்கலாம்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: 90களில் ஒரு ஆபத்பாந்தவன் இருந்தார்.
வங்காளப் பிறப்பானாலும், தமிழ்நாட்டின் மலைகளின் ராணியின் மேல் காதல் கொண்டு இங்கேயே வாழ்ந்தவர். ஊட்டியின் தத்துப்பிள்ளை மிதுன் சக்ரவர்த்தி.

ஒரு நக்சலைட்டாக அந்த இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றிய மிதுன் அதிலிருந்து வெளியே வந்து பின் நடிகரானார். கோபக்கார நக்ஸலைட். Angry young man சொல்லுக்கு பொருத்தமான ஹீரோ.
மிதுன் சக்ரவர்த்தி ஸ்பெஷல் என்னன்னா ஆர்ட் பிலிம் வகையில் முதல் படத்தில் நடித்து சிறந்த நடிகனாக தேசிய விருது வாங்கி பின் கமர்ஷியல் ஹீரோவாக வெற்றிக் கொடி கட்டியவர்.
90களின் தமிழ் நடிகைகளுக்கு ஒரு கனவு இருக்கும். நாமளும் ஸ்ரீதேவி மாதிரி ஹிந்தியில் நடிக்க மாட்டோமா?.ன்னு ஏங்கும் போது 'கொடு கை'ன்னு கை கொடுப்பார். நேரே ஹிந்தியில் தன் படத்தில் நாயகியாக்கிடுவார். அதே மாதிரி தமிழ்ப் படங்களின் கதையை பெரிய தொகைக்கு ஹிந்திக்கு வாங்கிட்டு போறதும் அவர் தான்.
'ஹத்யாரா'ன்னு ஒரு படம். இங்கே இருந்த நடிகை ஸ்வாதியை ஹிந்தியில் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ஜஸ்டிஸ் சவுத்ரி படத்திலும் வாய்ப்பு கொடுத்தார்.
வடிவேலு கூட மனைவியாக சந்திரமுகி படத்தில் ஸ்வர்ணா மேத்யூன்னு ஒரு நடிகை நடிச்சிருப்பாங்க. அவங்களை கூட்டிட்டுப்போய் சுல்தான், சன்யாஸி மேரே நாம்னு ரெண்டு படங்களில் நடிக்க வச்சிருக்கார்னா பார்த்துக்கோங்க...
பாட்ஷா படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்த செண்பகாவை 'ஸ்னேகா' என்கிற பெயரில் யம்ராஜ் படத்தில் நடிக்க வைத்தார். பொற்காலம் படத்தில் நடித்த சங்கவியை பார்த்ததும் நேரே தனக்கு ஜோடியாக ஷெர்யே ஹிந்துஸ்தான் படத்தில் நடிக்க வைத்தார்.
நடிகை சிம்ரன் அமிதாப்பின் தயாரிப்பான தேரே மேரே சப்னேவில் அறிமுகமானதும் மிதுன் தனது தாதாகிரி படத்துக்கு கொண்டு வந்தார். ரம்யா கிருஷ்ணன் தயாவான், கல்நாயக் என ஒரு பாடலுக்கு நடித்துக்கொண்டிருந்த போது நாயகியாக்கினார் மிதுன். படம் லோஹா.
இப்போ மந்த்ராவை விட்டுடுவாரா என்னன்னு நினைக்கிறீங்க. ஆமாம்.
தன் அங்காரா படத்தில் மந்த்ராவை நாயகியதையும் செய்தார்.
அமைதிப்படை படத்தின் கதையை வாங்கி ஜல்லாட் என்கிற பெயரில் இரண்டு ரோல்களிலும் மிதுன் நடித்தார். கூடவே ரம்பாவையும் அறிமுகப்படுத்தினார். வாணி விஸ்வநாத் பீஷ்மா படத்திலும், கௌதமியை ப்யார் ஹுவா சோரி சோரி படத்திலும் அறிமுகப்படுத்தியவர்.
கௌதமியும், மிதுனும் நடித்த இந்த ஹிந்திப்படம் மோகன்லாலின் 'சித்ரம்' படத்தின் ஹிந்தி பதிப்பு. சுமலதாவுக்கு படங்கள், பானுப்ரியாவின் தங்கை நிஷாந்திக்கு என இவர் கை கொடுக்காத நடிகைகளே இல்லை. அமலா, பானுப்ரியா, ஜெயப்ரதா, விஜயசாந்தி என பட்டியல் நீளும்.
பெங்காளிகளும், தமிழர்கள் பார்க்க ஒன்று போல் இருந்ததனாலோ என்னவோ இவருக்கு தமிழ்நாட்டு பிரியம் அதிகம். ஊட்டியில் ஷூட்டிங்குக்கு வந்தவர் ஊட்டியை விரும்பி இங்கேயே monarch என்கிற ஹோட்டலை தொடங்கி இருந்தார். அதனாலேயே இவரது மிக்கப் படங்களும் ஊட்டியிலேயே இருக்கும்.
எண்பதுகளில் டிஸ்கோ டான்சர்,டான்ஸ் டான்ஸ் போன்ற படங்களில் இவர் இந்திய மாணவர்களை ஆட்டம் போட வைத்தவர். டிஸ்கோ டான்சரில் ஜிம்மி ஜிம்மி, ஐம் எ டிஸ்கோ டான்சர், யே ஓ ஆ....பாட்டெல்லாம் பெரிய பெரிய ஸ்பீக்கர்களை வைத்து அடித்து தகர்த்த பாடல்கள்.
வருடத்திற்கு ஏழெட்டு படங்களாவது நடித்து விடுவார். ஹிந்தி,'பெங்காலி, போஜ்புரி படங்களில் நடித்து மூன்றிலுமே சூப்பர் ஹிட்டுகள் கொடுத்தவர். நடிகை ஸ்ரீதேவியை காதலித்து திருமணம் வரை போய் பின் ஸ்ரீதேவி கழண்டு கொண்டார். மிதுனின் மனைவி யோகிதா பாலி. ராஜ்கபூரின் சகோதரர் ஷம்மிகபூரின் மனைவி கீதா பாலி. கீதா பாலிக்கு ஹரிதர்ஷன் கவுர் என்கிற சகோதரி உண்டு. அவரின் மகள் தான் மிதுனின் மனைவி யோகிதா பாலி.
யோகிதா மிதுனை மணக்கும் முன் பாடகர் கிஷோர் குமார் மனைவியாக இரண்டு வருடம் வாழ்ந்தார். மிதுனும் ஹெலினா லூக் என்கிற நடிகையை மணந்து பிரிந்தவர் தான். மிதுன்-யோகிதாவுக்கு நான்கு குழந்தைகள். மருமகள் மதாலஸா ஷர்மா தம்பிக்கு இந்த ஊரு படத்தில் நடித்திருந்தார்.
மிதுனிடம் ஒரு குழந்தை முகம் உண்டு. அவர் மனதும் குழந்தை போல. இவரைப்போல ஒரு நாயகன் இருந்தால் இன்றைய தமிழ் நாயகிகள் நயன், த்ரிஷா எல்லாம் உடனே ஹிந்திக்கு போயிருப்பார்கள். அப்படி குழந்தை உள்ளம் கொண்ட மிதுன் Brain strokeல் ஆஸ்பத்திரியில் இருந்து மீண்டு உள்ளார். அவர் நலமாய் வாழ வேண்டும் என பிரார்த்தனைகளுடன்... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications