எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி கூட நடித்த சங்கீதா! திடீரென வி.கே.ராமசாமியுடன் ஸ்விம்சூட்டில் நடித்தது ஏன்?
சென்னை: எம்ஜிஆர், சிவாஜி, ரஜினியுடன் நடித்த நடிகை சங்கீதா, திடீரென அம்மா, அக்கா என துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? தெலுங்கு திரையுலகில் இருந்து தமிழுக்கு வந்த அற்புதமாக நடிகை இவர்!
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: 'ஊமை விழிகள்' படத்தில் சோழா என்றொரு கடற்கரை ரிசார்ட் இருக்கும். அங்கு யாராவது இளம் பெண் வந்தால் அதுவும் தனியாக வந்தால் அங்கு ஒரு கிழவி பார்த்துக் கொண்டிருப்பாள். அவள் நேரே சென்று அங்கு இருக்கும் ஒருகோவில் மணியை அடிக்க சாரட் வண்டியில் பூட்டப்பட்ட குதிரை சிலிர்க்கும்.

காரணம் அதற்கு வேட்டைக்கு ஓட வேண்டிய நேரம் வந்துவிட்டது. லாங் கோட் அணிந்த மர்ம மனிதன் சாரட் வண்டியில் துரத்துவார். அடுத்த நாள் கண்கள் நீக்கப்பட்டு பிணமாக கிடைப்பாள் அந்தப் பெண்.
அந்த சைக்கோ மர்ம மனிதன் தன் காதலியின் பேசும் விழிகளுக்காக பேசாத விழிகளை சேகரிப்பார்.
அந்த கண்ணாடி பாட்டிலுக்குள் கிடக்கும் விழிகள் தாம் 'ஊமை விழிகள்'. அந்த பேசும் விழிகளுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா? அவர் தான் நடிகை சங்கீதா. 'கண்மணியே காதல் என்பது கற்பனையோ..காவியமோ...' பாட்டு பார்த்திருக்கலாம்.
என்னஒரு பாட்டு. சங்கீதா தான் என்ன ஒரு அழகு. படத்தில் ரஜினியை காதலித்துவிட்டு பணக்கார மாப்பிள்ளை கிடைத்ததும் ஏமாற்றி விட்டு போய் விடுவார்.
அவர் மேல் அந்தக் காட்சியின் போது அவ்வளவு கோபம் வரும்... இவ நல்லாவே இருக்கமாட்டா?.
உண்மையில் சங்கீதா என்கிற 'எம்ஜிஆர் சங்கீதா'வின் (அப்போது 'சிவாஜி சங்கீதா' என்று ஒருவர் இருந்தார். பின் 'விஜய் சங்கீதா' என ஒருவரும், வெங்கட்பிரபு சங்கீதாவும் வந்தார்கள்)
வாழ்க்கையிலும் அவர் ஏமாந்து போன சம்பவங்கள் நடந்தது. வாரங்கல்லை சேரந்த லதா நடிப்பாசையில் சென்னை பாண்டி பஜாருக்கு அம்மாவுடனும், அண்ணனுடனும் வருகிறார்.
தெலுங்கு மட்டுமே தெரிந்த அவர் வாய்ப்புத்தேடி அலைய அவர் மாட்டியது ரவிகுமார் என்கிற நபரிடம். ரவிகுமார் எஸ்.வரலக்ஷ்மியின் சகோதரர். அவர் மானேஜராக நின்று வாய்ப்புகள் தேட 'தீர்ப்பு' என்கிற தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. லதா என்கிற நடிகை முன்பே இருந்ததால் சங்கீதா என பெயர் மாறுகிறார். அதே நேரம் 'முத்யால முக்கு' என்கிற படவாய்ப்பும் கிடைக்க அது முதலில் வெளி வந்து சக்கை போடு போடுகிறது.
அடுத்து என்.டி.ஆர் ராமராகவும், ராவணனாகவும் நடித்து, தயாரித்து, இயக்கிய ஸ்ரீராம பட்டாபிஷேகம் படத்தில் சீதையாக நடிக்க வாய்ப்பு. யாருக்கு கிடைக்கும்? முன்னனி நடிகையானார். தமிழில் ஸ்ரீதர் இயக்க 'அண்ணா நீ என் தெய்வம்' பட வாய்ப்பு மூலம் தமிழுக்கு வருகிறார். எம்.ஜி.ஆரின் சகோதரியாக நடிக்க வந்த சமயத்தில் இங்கு சிவாஜியோடு ஒரு சங்கீதா நடித்துக்கொண்டிருக்க 'எம்.ஜி.ஆர் சங்கீதா' என அருமையான பெயரை பெறுகிறார். ரஜினி, கமலோடு மட்டுமில்லாமல் சிவாஜியோடு தீபம் படத்திலெல்லாம் நடிக்கிறார்.
கொஞ்ச நாட்களில் கால்ஷீட் குளறுபடி. மேனேஜர் ஒரே கால்ஷீட்டை தமிழ், தெலுங்கு எனக் கொடுக்க ஷுட்டிங் குளறுபடிகளால் கெட்ட பெயர் எடுக்க நேரிடுகிறது. விவகாரம் முற்றி வாய்ப்புகள் குறைய மேனேஜர் நிறைய பணத்தை சுருட்டி இருப்பதும் தெரிகிறது. பலவருட வருமானம் போய்விட்டதும் தெரிகிறது.
என்.டி.ஆர், எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி என நடித்து பீக்கில் இருந்த நடிகை விழித்துக் கொண்ட போது வி.கே.ராமசாமியோடு ஸ்விம்சூட் நடிகையாக உன் கண்ணில் நீர் வழிந்தால் படத்தில் நடித்து டூயட் பாட வேண்டிய அவலமும் வந்தது. ஊமை விழிகள் படத்தில் சைக்கோவாக மாறிய ரவிச்சந்திரன் பேசிய விழிகளின் நினைவாக பெண்களை கடத்தி கண்களை எடுத்து ஊமை விழிகளாக சேகரித்து வைப்பார்.
அந்த பேசும் விழிகளுக்கு சொந்தக்காரி சங்கீதா தான். 91ல் சுந்தர்ராஜன் என்கிற தயாரிப்பாளர், டைரக்டரை மணந்தார். அம்மாவாக நடிக்கத் தொடங்கி பின்ஒரு ரவுண்ட் வந்தார். ஆனாலும் இழந்தவை இழந்தவை தானே.. பின் வீடு வாங்கி சென்னையிலேயே செட்டிலாகி விட்டார். ரஜினி-கமலோடு நடித்து பெயர் பெற்ற இவர் நாயகியானதை விட அம்மா நடிகையாகி நிறைய தமிழ்ப் படங்களில் அம்மாவாக நடித்தார்.
யாரையும் கண்மூடித்தனமாக நம்பினால் ஏமாற வேண்டியது தான் என்பதற்கு சங்கீதா வாழ்க்கை ஒரு பாடம்... இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications