விஜய்யுடன் நடனமாடிய நடிகை ஷகீலாவின் தங்கை.. குக் வித் கோமாளியில் வந்த புதிய தகவல்!
சென்னை: நடிகர் விஜய்யுடன் தனது தங்கை ஷீத்தல் டான்ஸ் ஆடியிருப்பதாக நடிகை ஷகீலா உருக்கமாக தெரிவித்திருந்தார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது 3ஆவது சீசன் நடைபெறுகிறது. முதல் சீசனில் வனிதாவும், இரண்டாவது சீசனில் கனியும் வெற்றி பெற்றார்கள். கோமாளிகள் செய்யும் அரட்டையால் இந்த நிகழ்ச்சிக்கு நிறைய வரவேற்பு இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியை பார்த்து வாய்விட்டு சிரிப்பதால் தங்களது கவலைகள் எல்லாம் பறந்துவிடுவதாக ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். இன்னும் சிலர் புகழின் காமெடியை இந்த நிகழ்ச்சியில் பார்த்து தனது தாய் உடல்நலம் தேறியதாக அவரது மகன் தெரிவித்திருந்தார்.

நீண்டகாலம்
அது போல் இந்த நிகழ்ச்சியை பார்த்து நீண்டகாலமாக குழந்தையில்லாத நிலையில் தற்போது குழந்தை பிறந்திருப்பதாக ஒருவர் தெரிவித்திருந்தார். இதை செப் வெங்கடேஷ் பட் ஒரு நிகழ்ச்சியில் அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த அளவுக்கு இந்த சீசனில் மணிமேகலை, புகழ், பாலா, உள்ளிட்டோர் காமெடி செய்து வருகிறார்கள்.

2 ஆவது சீசன்+ 3ஆவது சீசன்
தற்போது நடைபெறும் 3ஆவது சீசனில், சந்தோஷ் பிரதாப், ரோஷினி, கிரேஸ் கருணாஸ், சுட்டி அரவிந்த், அந்தோணிதாசன், மனோபாலா, ராகுல் தாத்தா உள்ளிட்டோர் எலிமினேட் ஆகியுள்ளனர். இவர்களில் ஸ்ருத்திகா அர்ஜுன், தர்ஷன், வித்யூலேகா ராமன், அம்மு அபிராமி, வேட்டை முத்துக்குமார் ஆகியோர் பைனலிஸ்ட்டாக உள்ளனர்.

செலிபிரேஷன் ரவுண்ட்
இந்த நிலையில் நேற்றைய தினம் இந்த நிகழ்ச்சியில் சீசன் 2 போட்டியாளர்களும் சீசன் 3 போட்டியாளர்களும் இணைந்து சமைக்கும் செலிபிரேஷன் ரவுண்ட் நடைபெற்றது. இந்த ரவுண்டில் ஷகீலா, கனி, பவித்ரா லட்சுமி உள்ளிட்டோர் வந்துள்ளார்கள். ஷகீலாவை பார்த்ததும் பாலா, புகழ் உள்ளிட்டோர் போய் வரவேற்றனர்.

ஷீத்தல்
அப்போது ஷகீலா கோமாளியாக உள்ள ஷீத்தலை பார்த்து, கட்டி அணைத்து, "நான் இவருக்காகவே இந்த சீசன் பார்க்கிறேன். ஏனென்றால் எனது தங்கை பெயரும் ஷீத்தல்தான். பூவே உனக்காக படத்தில் ஓ பியாரி பானி பூரி, பம்பாய் நாரி எனும் பாடலில் விஜய்யுடன் டான்ஸ் ஆடியிருப்பார். அவர் 23 வயதிலேயே இறந்துவிட்டார்" என ஷகீலா உருக்கமாக பேசியிருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications