Born with a silver spoon.. சர்ச்சைகளின் ராணி.. தைரியலட்சுமி வனிதா விஜயகுமாரின் சொத்து மதிப்பு என்ன?
சென்னை: நடிகை வனிதா விஜயகுமாரின் சொத்து மதிப்பு என்ன என்பது குறித்து உத்தேச தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்திரலேகா, மாணிக்கம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தவர் வனிதா விஜயகுமார். அதன் பிறகு ஆகாஷுடனான மணமுறிவு, ஆனந்தராஜுடன் இரண்டாவது திருமணம் என லைம் லைட்டில் இருந்தார் வனிதா.
இதைத் தொடர்ந்து அவர் தனது தாய் மஞ்சுளா, தந்தை விஜயகுமார் ஆகியோருடன் சொத்து தகராறின்போது அதிகம் பேசப்பட்டவர் வனிதா விஜயகுமார். அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் வனிதா.

இதைத் தொடர்ந்து அவருக்கு மீடியா வாய்ப்புகளும் சினிமா வாய்ப்புகளும் கிடைத்தன. அந்த வகையில் குக் வித் கோமாளி ஷோவில் கலந்து கொண்டு அந்த பட்டத்தை பெற்றார். இதையடுத்து கலக்க போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடுவராக இருந்து நடத்தினார். மேக்கப், சமையல் கலை மீது அதிக ஈடுபாடு கொண்ட வனிதா விஜயகுமார், யூடியூப் சேனலை தொடங்கினார்.
இதன் மூலம் பல டிப்ஸ்களை ரசிகர்களுக்கு சொல்லி வந்தார். இந்த நிலையில்தான் தான் எடுக்கும் வீடியோக்களை எடிட் செய்ய பீட்டர் பால் என்பவரை சந்தித்தார். இந்த சந்திப்பு காதலாக மாறியது. இவருடைய காதலுக்கு வனிதாவின் மகள்களும் பச்சைக் கொடி காட்டினர். இதையடுத்து லாக்டவுன் நேரத்தில் பீட்டர் பாலை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பீட்டர் பால் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே வனிதாவை திருமணம் செய்து கொண்டார் என்ற புகார்களும் விமர்சனங்களும் எழுந்தன. இந்த திருமணம் ஒரு சில மாதங்களிலேயே முடிவுக்கு வந்தது. சில ஆண்டுகள் பீட்டர் பாலை விட்டு பிரிந்திருந்த நிலையில் அண்மையில் அவர் இறந்தும் விட்டார். வனிதா தற்போது நல்ல படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அவர் மல்லி பெல்லி எனும் தெலுங்கு திரைப்படத்தில் நரேஷுடன் நடித்திருந்தார். இது நரேஷின் உண்மையான திருமண வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த படம் வெற்றியடைய திருப்பதிக்கு வந்திருந்தார். இந்த நிலையில் வனிதா விஜயகுமார் தனது யூடியூப் மூலம் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து வனிதா கூறுகையில் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு கொண்டே இருந்தால் ஒரு மாதத்திற்கு ஒன்றரை லட்சம் வரை சம்பாதிக்கலாம். சரியாக வீடியோக்களை பதிவிடாமல் இருந்தால் 5 ஆயிரம், ரூ 10 ஆயிரம் என மாத வருமானம் வரும் என தெரிவித்திருந்தார். இவர் கடந்த இரு ஆண்டுகளாக பேஷன் பொட்டிக்கையும் நடத்தி வருகிறார்.
வனிதா விஜயகுமாரின் தாய், தந்தை இருவரும் புகழ்பெற்ற நடிகர், நடிகை. தங்க தட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும் குடும்பத்தினருடன் ஏற்பட்ட சண்டையால் வனிதா விஜயகுமார் குடும்பத்தினரை பிரிந்து வெளியே வந்து தனியாக கஷ்டப்பட்டு சம்பாதித்தார். இரு பெண் குழந்தைகளையும் பல்வேறு ஏசல் பேச்சுகளுக்கு மத்தியில் வளர்த்து ஆளாக்கினார். அவருக்கு ரூ 7.63 கோடி மதிப்பில் சொத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications