பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவாக நடிப்பவர் இவரா? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தகவல்!
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் பாக்யா பற்றிய ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதை பார்த்து ரசிகர்கள் இன்பத்தில் ஷாக்காகியுள்ளனர்.
விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் இருந்தாலும் சீரியல்கள் ரசிகர்களின் மனதிற்கு பிடித்தமானவையாக மாறிவிட்டன. அதில் முக்கியமான சீரியல் பாக்கியலட்சுமிதான்.
இந்த சீரியலில் பாக்கியா கேரக்டரில் நடித்து வருபவர் சுசித்ரா. படிப்பறிவில்லாத பெண்ணாக இருந்து குடும்பத்தில் உள்ள அனைவரையும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ளும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியல்
தன்னை கேப் கிடைக்கும் போதெல்லாம் அவமானப்படுத்தும் கணவர், மாமியாரை சமாளித்து அவற்றை வெளியே காட்டிக் கொள்ளாமல் வாழ்க்கையில் முன்னேறும் கதாபாத்திரமாக நடித்து வருகிறார். குடும்பத் தலைவிகளின் ஃபேவரைட் சீரியல் என்றால் அது இதுதான். இந்த சீரியலின் புரோமோவை கூட மக்கள் விடாமல் பார்த்து வருகிறார்கள்.

தமிழ் ரசிகர்கள்
கன்னடத்து நடிகையான இவர் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுவிட்டார். இப்படிப்பட்ட சுசித்ரா குறித்து சில ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். இவர் தனது 14 ஆவது வயதில் குழந்தை நட்சத்திரமாக கன்னட திரைப்படத்தில் உபேந்திராவின் தங்கையாக அறிமுகமானார்.

கன்னட படங்கள்
இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஒன்மேன் ஆர்மி, மஞ்சுநாதா, காட்ஃபாதர், சிவா, பீமா, கிரெசி ஸ்டார் உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து கன்னடாவில் ஒரு சீரியலில் கூட இவர் நடித்துள்ளார். கன்னடம் மட்டுமல்லாமல் தெலுங்கு சீரியலிலும் நடித்துள்ளார்.

ஏஎல் விஜய் இயக்கம்
இவர் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவான சைவம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பின்னர்தான் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் வாய்ப்பை சுசித்ரா பெற்றார். இவருக்கு தற்போது ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிகின்றன. ஆனால் தனக்கு பெயர் வாங்கிக் கொடுத்த சீரியலை விட்டுவிட்டு செல்ல மனமில்லாமல் அவர் "பாக்கியலட்சுமியாகவே" இருந்து வருகிறார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications