பிரேக்ஃபாஸ்ட்டில் 1, 2 அல்ல 5 ஆம்!.. 10 வருஷமா ஃபாலோ செய்யும் கன்னிகா ரவி.. சினேகன் எப்படி?
சென்னை: சீரியல் நடிகை கன்னிகா ரவி தனது எடை கூடாமல் இருக்க என்னென்ன டயட்டை பின்பற்றி வருகிறார் தெரியுமா?
தமிழ் திரையுலகில் இதுவரை 600-க்கும் மேற்பட்ட பாடல்களில் 2,500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர் கவிஞர் சினேகன். இவருக்கு நடிப்பு மீதான ஆர்வத்தால் அவர் பூமிவீரன், ராஜராஜ சோழனின் போர்வாள் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் சினேகனுக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்றதும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து கொண்டார்.
தீவிர அரசியலில் இறங்கிய சினேகனுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கடந்த 8ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இவர்களது திருமணத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நடத்தி வைத்தார்.
43 வயதாகும் சினேகனுக்கு 27 வயதான கன்னிகாவுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த வயது வித்தியாசம் குறித்து சமூகவலைதளங்களில் விவாதங்கள் எழுந்தன. சினேகன் மீதான காதலை கார்த்திகை தீபத்திருநாள் அன்று சொன்னதாக கன்னிகா ரவி தெரிவித்திருந்தார். அப்போது கையில் தாலி கயிற்றை எடுத்துச் சென்றார். இதற்கு சினேகனும் ஓகே சொல்லிவிட இவர்கள் 8 ஆண்டுகளாக காதலித்துவிட்டு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் செய்த கொஞ்ச நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டிற்கு சினேகன் சென்றுவிட்டார். அப்போது மனைவியை நினைத்து சினேகன் உள்ளே உருக, வெளியே கன்னிகா உருக என காதல் ரசம் சொட்டியது. இருவரும் ஒரே நிறத்தில் ஆன உடைகளை அணிந்துக் கொண்டு பொது இடங்களுக்கு செல்வார்கள்.

கன்னிகா ரவி நன்றாக ஓவியம் வரைவார். கிராப்ட் வேலையையும் செய்கிறார, அது போல் பெயிண்டிங், சமையலுடன் சினேகன் எழுதும் கவிதைகளுக்கு மெட்டு அமைத்து பாடியும் வருகிறார் கன்னிகா ரவி. இவருக்கு நீண்ட கூந்தல் இருக்கிறது. இதுதான் அவருடைய அழகே. இதை பராமரிப்பது எப்படி என்பது குறித்து கன்னிகா ரவி நிறைய டிப்ஸ்களை கொடுத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது அவர் உடல் எடையை கட்டுப்படுத்துவது எப்படி என்பதற்கான டிப்ஸ்களை கூறியுள்ளார். அதன்படி தினமும் காலை எழுந்தவுடன் 1 டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரை குடிப்பாராம். காலை பெரும்பாலும் 5 வேக வைத்த முட்டைகளையும் அத்துடன் நட்ஸ்களையும் காலை உணவாக எடுத்துக் கொள்வாராம்.
காலை உணவுக்கு முன்பு முளைக்கட்டிய பச்சை பயிறை கட்டாயம் சாப்பிடுவாராம். 10 ஆண்டுகளாக இதை மட்டுமே பின்பற்றி வருகிறாராம். ஓ இதுதான் கன்னிகாவின் அழகிற்கு காரணமா?
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications