யூடியூப் சேனல் நடத்தி வரும் நடிகை வனிதா விஜயகுமார்.. மாதம் எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா?
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் யூடியூப் மூலம் எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா?
சந்திரலேகா, மாணிக்கம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தவர் வனிதா விஜயகுமார். அதன் பிறகு ஆகாஷுடனான மணமுறிவு, ஆனந்தராஜுடன் இரண்டாவது திருமணம் என லைம் லைட்டில் இருந்தார் வனிதா.
இதைத் தொடர்ந்து அவர் தனது தாய் மஞ்சுளா, தந்தை விஜயகுமார் ஆகியோருடன் சொத்து தகராறின்போது அதிகம் பேசப்பட்டவர் வனிதா விஜயகுமார். அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் வனிதா.

இதைத் தொடர்ந்து அவரது மீடியா வாய்ப்புகளும் சினிமா வாய்ப்புகளும் கிடைத்தன. அந்த வகையில் குக் வித் கோமாளி ஷோவில் கலந்து கொண்டு அந்த பட்டத்தை பெற்றார். இதையடுத்து கலக்க போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடுவராக இருந்து நடத்தினார்.
இதைத் தொடர்ந்து மேக்கப், சமையல் கலை மீது அதிக ஈடுபாடு கொண்ட வனிதா விஜயகுமார், யூடியூப் சேனலை தொடங்கினார். இதன் மூலம் பல டிப்ஸ்களை ரசிகர்களுக்கு சொல்லி வந்தார். இந்த நிலையில்தான் தான் எடுக்கும் வீடியோக்களை எடிட் செய்ய பீட்டர் பால் என்பவரை சந்தித்தார். இந்த சந்திப்பு காதலாக மாறியது. இவருடைய காதலுக்கு அவருடைய மகள்களும் பச்சைக் கொடி காட்டினர்.
இதையடுத்து லாக்டவுன் நேரத்தில் பீட்டர் பாலை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பீட்டர் பால் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே வனிதாவை திருமணம் செய்து கொண்டார் என்ற புகார்களும் விமர்சனங்களும் எழுந்தன. இந்த திருமணம் ஒரு சில மாதங்களிலேயே முடிவுக்கு வந்தது.

சில ஆண்டுகள் பீட்டர் பாலை விட்டு பிரிந்திருந்த நிலையில் அண்மையில் அவர் இறந்தும் விட்டார். வனிதா தற்போது நல்ல படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் மல்லி பெல்லி எனும் தெலுங்கு திரைப்படத்தில் நரேஷுடன் நடித்திருந்தார். இது நரேஷின் உண்மையான திருமண வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
இந்த படம் வெற்றியடைய திருப்பதிக்கு வந்திருந்தார். இந்த நிலையில் வனிதா விஜயகுமார் தனது யூடியூப் மூலம் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வனிதா கூறுகையில் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு கொண்டே இருந்தால் ஒரு மாதத்திற்கு ஒன்றரை லட்சம் வரை சம்பாதிக்கலாம். சரியாக வீடியோக்களை பதிவிடாமல் இருந்தால் 5 ஆயிரம், ரூ 10 ஆயிரம் என மாத வருமானம் வரும் என தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications