குக் வித் கோமாளியில் இருந்து விலகிய மணிமேகலை.. இதுவரை பெற்ற ஊதியம் என்ன தெரியுமா?
குக் வித் கோமாளியில் மணிமேகலை பெற்ற ஊதியம் என்ன தெரியுமா?
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய மணிமேகலை வாங்கிய ஊதியம் என்ன தெரியுமா?
விஜே மணிமேகலை குக் வித் கோமாளி சீசன் 1 முதல் 3 ஆவது வரை தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வந்தார். அவரது உடல்மொழி, முக பாவனை என அவர் செய்வது அனைத்துமே சிரிப்பை வரவழைக்கிறது.
இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் டான்ஸர் ஹூசைன் என்பவரை காதலித்து தன் வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் விஜேவாகவும் பணியாற்றி வரும் மணிமேகலை யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.

சேனல்
இந்த சேனலில் கணவன் மனைவி இருவரும் அடிக்கும் லூட்டி இருக்கே அப்பப்பா... இவர் குக் வித் கோமாளியின் 4ஆவது சீசனிலும் வந்தார். இந்த நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்கள் மட்டுமே அவர் பங்கேற்றிருந்த நிலையில் கடந்த வாரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் இன்றுதான் என்னுடைய கடைசி ஷூட்டிங்.

குக் வித் கோமாளி
இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நான் வரமாட்டேன் என கூறி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகினார். அவர் தனது பதிவில் நானே வருவேன் கெட்டப்பில் இருந்து நான் வரமாட்டேன் என அறிவிக்கிறேன். 2019 ஆம் ஆண்டு ஆரம்பித்த குக் வித் கோமாளி முதல் சீசனிலிருந்து என் மீது ரசிசர்கள் அன்பை பொழிந்தீர்கள். உங்களுக்கெல்லாம் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். எனக்கு கொடுத்த வாய்ப்புகளையும் சூழல்களையும் சிறப்பாக கொண்டு வர நான் கூடுதல் முயற்சிகளை எப்போதும் எடுப்பேன். இதுவரை குக் வித் கோமாளியில் எனக்கு கொடுத்த பணியை நான் சிறப்பாக செய்தேன் என நம்புகிறோன். உங்களிடம் இருந்து எனக்கு கிடைத்த அன்பு என்பது நான் எதிர்பார்க்காத ஒன்று. நான் எந்த காரியத்தை செய்தாலும் அதற்கு இது போன்றதொரு அன்பை அளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன் என தெரிவித்திருந்தார்.

விலகலுக்கு காரணம் என்ன
இந்த நிலையில் மணிமேகலையின் விலகலுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. அந்த வகையில் அவர் கர்ப்பமாக இருப்பதாக சொன்னார்கள். அவருக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் நிகழ்ச்சியிலிருந்து விலகுகிறார் என்றும் கூறியிருந்தார்கள். ஆனால் உண்மையான காரணம் என்னவென தெரியவில்லை. ஆனால் தற்போது மணிமேகலை விவசாயம் செய்த வீடியோ மட்டும் வைரலாகி வருகிறது.

ஒரு எபிசோடிற்கு எவ்வளவு
இந்த நிலையில் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் வாங்கிய ஊதியம் குறித்த தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு எபிசோடிற்கு ரூ 60 ஆயிரம் ஊதியமாக பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சீசனில் அவர் 5 வாரங்கள் பங்கேற்றிருந்தார். வாரத்திற்கு இரு எபிசோடுகள் என்றாலும் ஒரு வாரத்திற்கு அவருக்கு ஊதியமாக ரூ 1.20 லட்சம் கிடைத்திருக்கும். வாரத்திற்கு 1 எபிசோடு வீதம் கணக்கிட்டால் 5 வாரங்களுக்கு ரூ 3 லட்சத்தை அவர் ஊதியமாக பெற்றிருப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

செல்வாக்கை பொறுத்து
குக் வித் கோமாளி நிகழ்ச்சி இல்லாமல் வேறு சில நிகழ்ச்சிகளிலும் மணிமேகலை உள்ளார். அது போல் அவர் யூடியூப் சேனல் மூலமாகவும் வருமானம் ஈட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குக்காக இருந்தாலும் கோமாளியாக இருந்தாலும் அவர்களுக்கு ரசிகர்களிடையே இருக்கும் செல்வாக்கை கொண்டு ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது. இதே போல்தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் வாரத்திற்கு இவ்வளவு ஊதியம் என நிர்ணயம் செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications