ரோஜா படத்தில் புது வெள்ளை மழை பாடலில் இருந்த அமானுஷ்யத்தை உணர்ந்திருக்கிறீர்களா?
சென்னை: ரோஜா திரைப்படத்தில் வரும் புது வெள்ளை மழை பாட்டில் இருந்த அமானுஷ்யங்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அந்த படத்தில் யதார்த்தமாக பொருந்த கூடிய விஷயம் என்றால் அது காஷ்மீர், ரோஜா, துப்பாக்கி ஆகியவைதான். ரோஜா படம் குறித்து மேலும் சுவாரஸ்யமான தகவல்களை அறியலாம்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் இந்தியா மறக்க வேண்டிய ஒரு காலக்கட்டத்தின் படம் என்றால் 'ரோஜா'வைச் சொல்லலாம்... Guns and roses in kashmir என்கிற சொல்லுக்கேற்ப காஷ்மீர், ரோஜா, துப்பாக்கி என பொருந்தக்கூடிய விஷயங்கள் யதார்த்தமாக அமைந்தது தான் சிறப்பு.

காஷ்மீர் மந்திரி முப்தி முகமது சயிது மகள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு மீட்கப்பட்டது முள்ளாக இருக்க, காஷ்மீரில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகள், கடத்தல்கள் இவைகளை வைத்து மணிரத்னம் எழுதிய திரைக்கதை பார்ப்பவர்களை நெருப்பால் சுட்டது நிஜம். காரணம் அது வரை இந்தியனே இந்தியனை கடத்தியதாக காட்டப்பட்டதில்லை என்பதால்.
ரோஜாவை கண்ணை அடைத்து கூட்டிக் கொண்டு வரும் ரிஷி கண்ணிலிருந்து கையை விலக்க, ஓங்கி உயர்ந்த அந்த ஐஸ் மலையை கண்கள் விரிய, இதயம் பரவசத்தில் துடிப்பு எகிற அந்த அனுபவத்தை பின்னணி இசையாலேயே செவி முன் கொண்டு வந்திருப்பார் ரஹ்மான்... புது வெள்ளை மழைப்பாட்டின் அமானுஷ்யம் அதன் தாளம் தான்.
மலைகளில் அந்தப் பாடல் எதிரொலிப்பது போலவே இசையும் இருக்கும். ஒரே மாதிரி படங்களை ரசித்துக் கொண்டிருந்த தமிழனின் கண்ணைக் கட்டி, தியேட்டருக்குள் சென்று கையை எடுத்து "இப்போது பெறு புதிய அனுபவம்...." என்கிறார் மணி. ரோஜா என்கிற பெயரும், அதில் இருந்த மலரும், புதுமுகம் அரவிந்த்தும் இருந்த இப்படத்தை காதல் படமாக எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி. அழகான காதல் கதை வித் த்ரில்லர்...
மெயின் தீம் காஷ்மீர் தீவிரவாதி கடத்துவது தான். அதுவரை கதையை நகர்த்த படாத பாடுபட்டு கொண்டு போவார்கள். சுந்தர பாண்டியபுரத்திலிருந்து சென்ற ரோஜா கணவனை மீட்டாள் என்பதற்கு ரோஜா பெரிதாக என்ன செய்தாள் என்று தெரியவில்லை. ஒரு முறை மந்திரியைப் பார்த்து விடாமல் தமிழில் பேசி பேசி அவரும் வாஸிம் கானை விடுவித்து ரிஷியை மீட்கச் சொல்லி விடுகிறார்.
ஆனால் படம் தொடங்கியது முதல் நம்மை புதிய அனுபவத்துக்குள் இழுத்துக் கொண்டு போவது சந்தோஷ்சிவனின் கேமராவும், ரஹ்மானின் இசைக்கோர்வையும் தான். நாம் ரெகுலராக கேட்கும் ராஜாவின் புல்லாங்குழல் அல்லாத பின்னணி இசை... ஸிந்தஸைஸரில் அதிரும் இசை புது அனுபவம் தமிழனுக்கு... அரே 'ரோஜா ரஹ்மான்'....நீங்க எங்கே போனீங்க?..
த்ரில்லர் காட்சிக்கு பின்னணி இசை ஆட்களை கத்த வைத்து செய்திருக்கிறார். உபயம் குரு டி.ராஜேந்தர் போல... ஒரு அக்கா முறைமாமனைத் தான் கட்டிக்குவேன்னு சொந்தத் தங்கை கிட்ட சொல்ல மாட்டாளா?...என்ன மணி சார்? இந்த பத்தக் காட்சியை வைத்து அரைமணி நேரம் நகர்த்தியாயிற்று...
"எவனோ வெளிநாட்டுக்காரன் பேச்சைக்கேட்டு காலங்காலமா வாழ்ந்த மூணு லட்சம் குடும்பங்களை விரட்டிட்டீங்களே... அவங்க எங்கப்போய் எப்படி இருப்பாங்க... இந்த மண்ணு அவங்களுக்கு சொந்தமில்லையா?... அந்த குழந்தைகளையும், குடும்பத்தையும் விரட்டி விட்டு வீடு எனக்கு தான் சொந்தம்னா அது எப்படி நியாயம்... உலகத்துலயே விலை மதிக்க முடியாத ஒண்ணு.. உங்க உயிர்...."
"எங்களுக்கு உயிர் முக்கியமில்லை....காஷ்மீர் தான் முக்கியம்..." "உங்கப் பிரச்சினை பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினை..."
"இது பேசிலாம் தீராது... பிரிஞ்சு தான் தீரும்..." பிரியாது... இந்தியா பிரியாது...." மயிர் கூச்செரியும் வசனங்கள்... வசனம் சுஜாதா... நெகிழ வைக்கும் காட்சிகள் தான் படத்தின் ஆதாரம்... அரவிந்த்சாமி போனபிறகு அவரை கட்டிப்போட்ட இடத்துக்கு வரும் மதுபாலா தரையில், மண்ணில் "காதல் ரோஜாவே' என எழுதி இருக்கும் இடம்... (பலகையில் எப்படி மண் வந்தது? அதுவும் காஷ்மீர் பனிப் பிரதேசத்தில்...)....
லியாகத் தன் தம்பி பிணமாகி வந்ததும் தனியாக நின்று அழுவது, தேசியக் கொடி எரிவதை சகிக்காமல் அதை அணைக்க முயல்வது, எல்லாவற்றுக்கும் மேலாக தீவிரவாதியே திருந்தி சென்று வா என அனுப்புவது...
இப்படிக் காட்சிக்குகாட்சி நெகிழ வைக்கிறார் மணி.... நாஸரிடம் மதுபாலா தன் கணவனை மீட்கக் கேட்டதும், நாஸர்.. "எல்லையில் 3000 பேர் பனி, குளிர்னு பார்க்காம உயிரைப்பணயம் வைக்கிறோம். உனக்கு உன் புருஷன் கேட்குதா?....." அடடே... இந்த முகநூல்காரர்களுக்கு டயலாக் உபயம் சுஜாதா தானா?... அற்புதம்.... வெள்ளைப் பணியாரம் கேட்கும் ரிஷியின் அதிகாரி எஸ்.வி.சேகரின் தந்தை திரு.வெங்கட்ராமன், ரோஜாவின் மாப்பிள்ளையை கடத்திட்டாங்களான்னு வேதனைப்படும் தில்லானா மோகனாம்பாள் வடிவு சி.கே.சரஸ்வதி, இந்தப் பாட்டிற்குப் பிறகு ஸோலோ நடனத்தில் வந்த 'ருக்குமணி... ருக்குமணி' பாட்டில் வரும் ராஜுசுந்தரம்,
அதே பாட்டில் வந்து பிரபலமாகி தனிக்காமெடி நடிகையாக மாறிய (படம்: பிரதாப்) ருக்குமணி என்கிற சுஜாதா, பாட்டியாக நடித்து பல சீரியல்களில் கலக்கிய வத்சலா ராஜகோபால்....
என பல முகங்கள்.... மிரட்டலான காஷ்மீரி லியாகத்தாக நடித்த ஷாஹித் கபூரின் அப்பா பங்கஜ் கபூர் தான் ரியல் டெர்ரர் நடிப்பு... காஷ்மீரிலிருந்து கோயம்புத்தூர் வந்து அக்ரி காலேஜில் படித்து அதை வைத்து காஷ்மீரில் ஒன்றும் செய்ய முடியாமல் தீவிரவாதியாகி தம்பி இறந்ததும் கதறி அழும், வாய் பேச்சுக்கே திருந்தி மனம் மாறும் லியாகத்தாக பங்கஜ்... செம செட்டிங்... பிரதி எடுத்தது போல் பொருந்துகிறார்.
ரோஜா தமிழ்நாட்டில் வெற்றி பெற்றது எல்லோரும் அறிந்த ஒன்று தான். ஆனா எதிர்பார்க்காத ஜாக்பாட் இதன் ஹிந்தி டப்பிங் வட இந்தியாவில் பெரும் ஹிட்டடித்தது தான். மணியும், ரஹ்மானும் தேசிய அளவில் அல்லாது உலக அளவிலும் பிரபலமானார்கள்.
படத்தைப் பார்த்த நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா படம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் தன் செருப்பை கழட்டி சுவற்றில் வீசினாராம்.
"ஏம்மா?" எனப்பாட்டி கேட்க உங்களை அடிக்க முடியாதே.... என குரல் கம்மச்சொன்னாராம். ஏன்னா பாட்டி இந்த படத்துக்கு ஐஸ்வர்யாவை கேட்ட போது நடிக்க மறுத்துவிட்டதால்.... மதுபாலாவுக்கு நல்ல பெயர்.... ஆனா பேசும் போது அடிக்கடி கீழ் உதட்டை மேல் உதட்டோடு மூடிக்கிற அந்த மேனரிஸம் போரிங்.... அடிக்கடி அவரை அறியாமல் செய்கிறார்.... இந்த இடம் தான் மணிக்கு ஸ்வீட்டான சறுக்கல் தொடங்கியது.
இனி அகில இந்தியாவும் ரசிக்கும் ஒரு பொதுப் படத்தை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் நுழைந்து விட்டார். நம்ம பழைய மணியும் மறைந்து விட்டார்.... ரோஜா அழகான ட்ரெண்ட் செட்டர்.... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications