Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விதவிதமா சோப்பு சீப்பு! தேனிசை தென்றல் தேவா குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்! டிரென்ட் செட்டர்!

Subscribe to Oneindia Tamil

இசை என்பது மனதை உருக்கியும், உணர்வுகளை வெளிப்படுத்தியும், நம்மை ஒரு புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும் ஒரு கலை. அந்த இசை உலகில் தனித்துவமான புகழையும், நீண்ட காலமாக மக்கள் மத்தியில் எதிரொலிக்கும் இடத்தையும் பெற்றவர் தேனிசை தென்றல் தேவா. தமிழ்த் திரைப்பட இசையில் தனக்கே உரிய ஒரு பாணியை உருவாக்கிய தேவா, 90-களில் தனது இனிமையான இசையால் ரசிகர்களை மயக்கியவர். தேவாவின் இசை பயணம் 1980-களில் தனது இசை பயணத்தை தொடங்கியபோதும், 1990-களில் தான் அவருடைய இசை தமிழ் சினிமாவில் பரவலாக பேசப்பட்டது.

deva

மூவாயிரத்திற்கு மேல் சினிமா பாடல்கள், நான்காயிரத்திற்கு மேல் பக்தி பாடல்களை கொடுத்தவர், மேலும் 96 ம் வருடம் 36 படங்கள் இவர் இசை அமைத்து வெளி வந்தன. ஆரம்ப காலங்களில் மேடை நாடகங்களுக்கு இசை அமைத்து வந்தார்.

நீண்ட போராட்டம்

வாய்ப்புகளை தேடி அலைந்த கால கட்டங்கள் அதிகம் தன்னோடு நட்பாக பயணித்த சந்திரபோஸ் பல படங்களுக்கு இசை அமைக்க தொடங்கி விட்டார், தனது முதல் வாய்ப்பு பேச்சுவார்த்தையில் இருந்த போது இளையராஜா முதல் பட வாய்ப்பை பெற்று தனது இசை பயணத்தை தொடங்குகிறார் என்று தேவாவின் பழைய நினைவுகள் சமூக வலைத்தளங்களில் நெகிழ செய்கிறது.

வயலும் வாழ்வும் நிகழ்ச்சியில் வரும் பாரதியார் , பாரதிதாசன் பாடல்களுக்கு கம்போஸ் செய்து வந்துள்ளார். அப்போது நூறு கேஸட் மேல ஆல்பம் தயார் செய்திருந்தார். அதை பாராட்டி அந்த பாராட்டு மேடையில் எம்.எஸ். விஸ்வநாதன், இவருக்கு "தேனிசை தென்றல் தேவா" என்ற பெயரை சூட்டினார். அது மட்டும் இல்லாமல் அதே மேடையில் தேவாவுக்கு யாராவது சினிமாவில் இசை அமைக்க ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் என்ற கேரிக்கையை வைத்தார்.

அவர் சொன்ன அடுத்த 3 மாதத்தில் தேவாவுக்கு பட வாய்ப்பு வந்தது. வைகாசி பிறந்தாச்சு என்ற படத்தின் மூலம் தனது இசையை தமிழ் திரையில் பரவ விடுகிறார்.

தேவாவின் சாதனை

இந்து படத்தில் கானா பாடல் என்று ஒரு புதிய ட்ராக்கை கொண்டு வந்தார். அத்தகைய பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது. பின்னர் சூரியன் படத்திலும் லாலாக்கு டோல் டப்பி மா என்று புதிய ஹூக் கவர்ச்சி வரிகளை பாடலில் சேர்த்து புதிய ட்ரெண்ட் செட் அமைத்தார்.

சினிமாவுக்குள் வரும் முன்பே மூவாயிரம் பக்தி பாடல்களுக்கு இசை அமைத்தவர். இளையராஜா முதல் வாய்ப்பு பெற்று ரெகார்டிங் செய்யும் போது தேவா வாய்ப்புக்காக அலைந்து கொண்டு இருந்தார் .ஆனால் தேவாவுக்கான வாய்ப்பு 89-ம் ஆண்டு இறுதியில் தான் தான் கிடைத்தது. பிறகு 90ல் இருந்து 2000 ம் ஆண்டு வரை தேவா இசை உச்ச நிலையை தொட்டது. ரஜினி, அஜித், விஜய் என்று பல நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

குறிப்பாக அண்ணாமலை படத்திற்கு டைட்டில் தீம் ரஜினிகாந்திற்கு ஒரு தனி பிராண்டாக மாறி இன்றளவும் கொண்டாடப்படுகிறது. நேருக்கு நேர், ஒன்ஸ்மோர், அண்ணாமலை, முகவரி, பாட்ஷா, குஷி, என்று பல வெற்றி படங்களுக்கு இசை அமைத்தவர். இவரின் மெலடி பாடல்கள் இன்று வரும் புதிய படங்களில் சேர்க்கப்பட்டு ட்ரெண்ட் ஆகி வருகிறது.

தேவாவின் உலகளாவிய வெற்றி

தேவா, தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டவர். இவர் தனது இசைக் கச்சேரிகளை தமிழ்நாட்டில் பல இடங்களில் அரங்கேற்ற ஆரம்பித்தார் துபாய், அமெரிக்கா என்று பல நாடுகளில் லைவ் இன்னிசை கச்சேரிகளை வெற்றிகரமாக செய்து வருகிறார். அது மட்டும் அல்லாமல் பல படங்களில் பாடல் பாடியிருக்கிறார். தற்போது நிறைய படங்களுக்கு இசையும் அமைத்து வந்தார். ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியும் ஆதரவும் அளித்து வருகிறார்கள்.

தேவாவின் இசை பிரபலம்

இசையை சாதாரணமாக மட்டும் புரிந்து கொள்ளாமல், அதை மக்கள் செவிகளில் ஊற்றி, அவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றியவர் தேவா. அவருடைய இசையமைப்பு பாணி, 90-களில் வளர்ந்தவர்களுக்கு மட்டும் அல்ல, இன்றும் புதிய தலைமுறையினருக்கும் பிடிக்கிறது. அவரது பாடல்கள் காலத்திற்கேற்ப புதுமையாக இருக்க, இன்னும் பல ஆண்டுகள் தேவாவின் இசை பிரபலமாக இருக்கக்கூடும். தமிழ்த் திரைப்பட இசையில் இவரது பெயர் என்றும் தங்கியிருக்கும். தேவாவின் இசை மட்டும் அல்ல, அவரின் எளிமையான பேச்சு, நேர்மையான இசை அணுகுமுறை ஆகியவை அவரை மக்கள் மனதில் "தேனிசை தென்றல்" என்ற பெயருடன் நிலைத்திருக்கச் செய்துள்ளன.

இயற்கையின் தென்றலாக இனிமையாக வீசும் தேவாவின் இசை, காலம் கடந்தும் நம்மை மகிழ்விக்க தொடரட்டும்! உங்களுக்கு பிடித்த தேவா அவர்களின் பாடல்களை பதிவு செய்யுங்கள்.

- குரு கிருஷ்ணன்

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+