கயல் சீரியல் நடிகர், நடிகைகளுக்கு எவ்வளவு சம்பளம்? யாருக்கு அதிகம்? சைத்ரா ரெட்டிக்கா சஞ்சீவுக்கா?
சென்னை: சன் டிவி தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் ஊதியம் எவ்வளவு என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி பார்த்து வருகிறார்கள். இந்த சீரியல் கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது வரை கடந்த 2 ஆண்டுகளாக ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

கயல் சீரியலில் நடுத்தர குடும்பத்தில் பொறுப்பில்லாமல் குடிக்காரனாக இருந்த அண்ணன், அவருடைய குடும்பம், கணவரை இழந்த தாய், இரு தங்கைகள், தம்பி என பெரிய குடும்பத்தில் கயல் மட்டும் செவிலியராக பணிபுரிந்து சம்பாதிக்கும் சம்பாத்தியம்தான் அந்த வீட்டில் இருப்போரின் வாழ்வாதாரம்.
ஒரு வழியாக கயலின் அண்ணன் திருந்தி தற்போது கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். திருமணத்திற்கு முன்பே பணக்கார பையனிடம் தன்னை இழந்து பிறகு பெரும் போராட்டத்திற்கு பிறகு காதலனையே கரம் பிடிக்கிறார். அடுத்தது கடைசி தங்கை மருத்துவர் கனவில் இருக்கிறார். தம்பி எந்த வேலைக்கும் போகாமல் போலீஸாக வேண்டும் என இலக்குடன் இருக்கிறார்.
இதனிடையே கயலின் பெரியப்பா குடும்பம் இவர்கள் தலைநிமிரவே கூடாது என பாடுபடுகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் அனைத்து விதமான குடைச்சல்களையும் தாண்டி கயல் எப்படி மேலே வருகிறார் என்பதை விறுவிறுப்பாக இயக்குகிறார் இயக்குநர். அதிலும் தங்கை ஆர்த்தியுடன் திருமணம் நடக்கவிருக்கும் எழில் கயல் திருமணம் நடக்குமா என்பது பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.
இந்த சீரியலில் கயலாக சைத்ரா ரெட்டியும் எழிலாக சஞ்சீவும் நடித்து வருகிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் ஊதியம் எவ்வளவு என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் சைத்ரா ரெட்டிக்கு ஒரு நாளைக்கு மட்டும் ரூ 25 ஆயிரம் ஊதியமாக கொடுக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சஞ்சீவுக்கு ரூ 20 ஆயிரம் ஊதியமாக கொடுக்கப்படுகிறது. அதாவது கதாநாயகியை விட கதாநாயகனுக்கு ரூ 5000 குறைவுதான். விக்னேஷ் கதாபாத்திரத்தில் நடிக்கும் கோபி, அவருடைய மனைவி தேவி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ஆகியேருக்கு ரூ 8ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
அது போல் காமாட்சி, மூர்த்தி, தனம், தர்மலிங்கம் ஆகியோருக்கு ஒரு நாளைக்கு ரூ 15 ஆயிரம் ஊதியமாக கொடுக்கப்படுகிறதாம். மற்றவர்கள் சில காட்சியில் மட்டும் நடிப்பதால் அவர்களுக்கு ரூ.10000-ஐ விட ஊதியம் குறைவுதானாம். வடிவுக்கும் உமா ரியாஸுக்கும் எவ்வளவு ஊதியம் என்பது வெளியாகவில்லை. அவர்களுக்கும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை வழங்கப்படலாம் என தெரிகிறது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications