கமலுக்கும் விஸ்வநாத்துக்கும் பூர்வஜென்ம பந்தமா இருக்குமோ? அந்த காட்சியால் அதிர்ந்த இயக்குநர்!
சென்னை: கமல்ஹாசன் நடித்த அந்த காட்சி குறித்து ரசிகர் ஒருவர் விளக்கிய போது இயக்குநர் விஸ்வநாத்தே அதிர்ந்துவிட்டாராம். அது என்ன காட்சி என தெரியுமா?
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: ஒரு படம் படமாக திரைக்கு முன்னால் உருவங்களாக இல்லாமல் நம்மை நேரிலேயே கூட இருந்து பார்ப்பது போல் ஒரு உணர்வை ஏற்படுத்துமென்றால் அது ஸ்வாதி முத்யம்.

படம் தொடங்கியதும் முதல் காட்சி. அதிகாலை கதவைத் திறந்து பால் குப்பியை எடுக்க கமல் வெளியே வருவார். அப்போது அவர் வீட்டில் கோலம் மட்டுமே போடப்பட்டிருக்கும். பக்கத்து வீட்டில் கோலத்தோடு சாண உருண்டைகளோடு பூக்கள் வைக்கப்பட்டிருக்கும். கமல் தன் வீட்டுக் கோலத்தில் ஒன்றுமேயில்லையென அந்த சாண பூவில் நடுநாயகமாக இருக்கும் ஒரு சிவப்பு பூ சாண உருண்டையை எடுத்துவிட்டு பின் கூடவே மஞ்சள் பூவோடு ஒன்றையும் கொண்டு வருவார்.
இந்த காட்சியின் ஸ்பெஷல் என்ன தெரியுமா? அந்த ஒரே ஷாட் படத்தின் முழுக் கதையையும் சொல்லி விட்டது. இது தான் விஸ்வநாத்தின் ஸ்பெஷல். ராதிகாவையும், மகனையும் தன் வீட்டுக் கூடத்தில் வைத்து உயரிய மரியாதையை கொடுப்பதை தான் கோலத்தில் சாண உருண்டைகளை கொண்டு வந்து வைத்த ஷாட்டில் வைத்ததாக ரசிகர் ஒருவர் சொன்ன போது விஸ்வநாத்துக்கே ஆச்சர்யம். நாம் சாதாரணமாக வைத்த ஷாட்டில் இப்படி முழு கதையும் வந்தது தெய்வசங்கல்பம் எனச்சொன்னவர் விஸ்வநாத்.
இவர் படத்தில் எல்லா கேரக்டர்களும் பாசிட்டிவாகவே போகும். சிப்பிக்குள் முத்துவில் தீபா, தீபாவின் கணவர், பாட்டி, முறைப்பெண், மாமாவின் புது மனைவி என சிவா தன் வாழ்வில் சந்திக்கும் நபர்கள் எல்லாம் சிப்பிக்குள் முத்து சிவாவிடம் அன்பு செலுத்துவார்கள்.
படத்தில் தீபாவுக்கு முதுகு தேய்க்கும் போது பாடப்படும் 'பட்டு சீர தெஸ்தனானி' (பட்டுச்சேல தரேனுன்னு...தமிழில்) பாடலை ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து விஸ்வநாத் எழுத அதற்கு டியூன் இட்டது யார் தெரியுமா? கமல் தான். கமல் டியூன் செய்து அதை கேஸட்டில் அவரே பாடி ரெக்கார்ட் செய்து அதை ஒலிக்க வைத்து தீபா வாயசைத்து நடிக்க வைத்து எடுக்கப்பட்டது.
பின்னே தான் பாடல் பாடகி பாட ரெக்கார்டிங் செய்யப்பட்டது. கமலிடம் இந்தப் படத்தை பற்றி கேட்ட போது அவர் சொன்ன ஒரு விஷயம். Tom hanks நடித்த Forest gump படம் அச்சு அசலாக இந்தப் படத்தை தழுவியே கேரக்டர்கள் எடுக்கப்பட்டு எடுத்ததாக சொன்னது தான். இதை வடக்கு ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று எழுதியதாகவும் கே.விஸ்வநாத் சொல்கிறார்.
ஹாலிவுட்டும் இந்திய தழுவல்களை எடுக்கிறார்களே...மேலும் ஆஸ்காருக்கு அனுப்பப்பட்ட முதல் தெலுங்கு படமும் ஸ்வாதிமுத்யம் தான். ரஷ்ய எழுத்தாளர் தஸ்தாயேவ்ஸ்கிக்கும் கே.விஸ்வநாத்துக்கும் ஒரு சம்மந்தம் இருக்கிறது. தஸ்தாயேவ்ஸ்கியின் புகழ்வாய்ந்த கதை தான் Crime and punishment. அதாவது குற்றமும் தண்டனையும்.
இந்த கதையில் நாயகன் குற்றம் செய்து விட்டு மன உளைச்சல்களால் அவதிப்படுவான். சரியா, தவறா என அவன் உள்ளங்களில் அவதிப்படும். இந்த ஒரு முடிச்சை எடுத்துக் கொண்டு பாலையா என்பவர் 'நெரமு சிக்ஷா' என்கிற கதையை மாற்றி தெலுங்குக்கு தகுந்த மாதிரி எழுதினார்.
அதில் கிருஷ்ணா, பாரதி, பண்டரிபாய் நடித்தனர். இந்த படத்தில் கண் தெரியாத பாத்திரத்தில் கதாசிரியர் பாலைய்யாவையே நடிக்கவைத்தார் அந்த இயக்குனர்.
யாருன்னா நம்ம இயக்குனர் கே.விஸ்வநாத். படம் செம ஹிட். உடனே அந்த கதையை வாங்கி ஒரு தமிழ் ஹீரோ நடித்தார்.
அந்தப் படம் தான் எம்.ஜிஆர் நடித்த 'நீதிக்கு தலைவணங்கு'. எஸ்.பி.சம்மந்தமூர்த்தின்னு ஒரு ஹரிகதா வித்துவான் ஆந்திரால இருந்தாரு.
இவருக்கும், இவர் மனைவி சகுந்தலாவுக்கும் ஐந்து மகன்கள். மூன்று மகள்கள்.
மகன்களில் ஒருவர் தான் எஸ்.பி.பாலு.
பாலுவின் மூன்று சகோதரிகளில் ஒருவர் எஸ்.பி.ஷைலஜா. சாகரசங்கமத்தில் நடித்தவர். இவர் தெலுங்கு நடிகர் சுபலேகா சுதாகரை மணந்தார். சுபலேகா சுதாகர் கே.விஸ்வநாத்தின் சுபலேகா படத்தில் நடித்து புகழ்பெற்றவர். சுபலேகாவும், சாகரசங்கமமும் பின்னாளில் மணவாழ்வில் இணைந்தது கூட ஆச்சர்யம் தான்.
எம்.ஜி.ஆரின் 'நாளை நமதே' படத்தில் அன்புமலர்களே பாடுவாரே நடிகர் சந்திரமோகன். எஸ்.பி.பியின் அண்ணியும், சந்திரமோகனின் மனைவியும் சகோதரிகள். சந்திரமோகனுக்கு பாலு பாடிய 'சுஜாதா ஐ லவ் யூ' பாடல் சூப்பர் ஹிட் ஆந்திராவில்.
சலங்கை ஒலி, சங்கராபரணம் எடுத்த தனுஷின் தாத்தாவாக நடித்த இயக்குனர் கே.விஸ்வநாத் யார் தெரியுமா? சந்திரமோகனின் பெரியப்பா மகன்..
கே.விஸ்வநாத்துக்கும் கமலுக்கும் பூர்வஜென்ம பந்தம் இருந்திருக்கிறது போல. கே.விஸ்வநாத் இயக்கிய 'செல்லேலு காப்புரம்' படத்தைத்தான் தமிழில் அன்புத்தங்கை என ரீமேக் செய்தார்கள்.
இதில் நடன உதவி இயக்குனராக இருந்த கமல் ஜெயலலிதாவுக்கு ஜோடியாக புத்தாவாக பாடலில் தோன்றி நடித்தார். ஓ சீதா கதா என்கிற விஸ்வநாத் இயக்கிய படம் தான் பின்னாளில் மலையாளத்தில் மற்றொரு சீதா எனவும், தமிழில் மூன்று முடிச்சு எனவும் வந்தது.
இரண்டிலுமே கமல் வேறு வேறு பாத்திரங்களில் நடித்தார்.
கமலுக்கு இவர் தந்த சாகரசங்கமம் படத்தை இதுவரை யாருமே ரீமேக் செய்ய முடியவில்லை.
எந்த சண்டை ஹீரோவானாலும் மம்முட்டி, ராஜசேகர், சிரஞ்சீவி, வெங்கடேஷ், அனில்கபூர் எல்லோரையும் தன் ஸாஃப்ட் கேரக்டரில் நடிக்க வைத்து அவர்களுக்கு புதிய பரிமாணம் தந்து விடுவார்.
சங்கராபரணம் படத்தில் சங்கர சாஸ்திரிக்கும், தேவதாசிப்பெண் துளசிக்குமான அந்த உறவை இவ்வளவு அழகாக இவரைத் தவிர வேறு யாராவது சொல்லி இருக்க முடியுமா?
சங்கராபரணத்தின் வெற்றி அதைப் போன்ற படங்களை எடுக்க மற்றவர்களை தூண்டியது நிஜம். பாதாளபைரவி படத்தில் உதவி இயக்குனராக தொடங்கிய வாழ்வில் எண்ணற்ற அனுபவங்களை ரசிகர்களுக்கு தந்தவர் விஸ்வநாத்.
யாரடி நீ மோகினியில் தனுஷோடு கூட நடித்து நடிப்பிலும் நம் உள்ளங்களை அள்ளிச் சென்றவர்....குருதிப்புனலில் ஊழல் மேலதிகாரியாக வந்து தற்கொலை செய்து கொள்ளும் காட்சியில் அதிர வைப்பார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications