Retro box office: முதல் நாளில் ரெட்ரோ வசூல் இத்தனை கோடியா? சூர்யா ஃபேன்ஸ் ஹேப்பி
சென்னை: நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் முதல் நாளே அனைத்து மொனழிகளிலும் ரூ 13.22 கோடி வசூலானதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு முதல் நாளில் டிக்கெட் கிடைக்காமல் பல ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் இன்று திரையரங்கில் வெளியானது ரெட்ரோ. கங்குவா படம் தோல்வி அடைந்த நிலையில் ரெட்ரோ படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த படத்தில் கனிமா பாடல் முன்கூட்டியே வெளியிடப்பட்டு படத்திற்கு ஒரு ஹைப்பை கூட்டியது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்டோர் பலரும் நடித்திருந்தனர்.
முதல் முறையாக கார்த்திக் சுப்புராஜும் சூர்யாவும் இணைந்ததால் இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த படம் இன்று வெளியான நிலையில் இதற்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் வசனங்கள் வெளியாகின.
இன்று காலை படம் வெளியான நிலையில் இதற்கு டிக்கெட் கிடைக்காமல் பல ரசிகர்கள் அவதியடைந்தனர். இன்றைய தேதியில் நானியின் ஹிட் 3 திரைப்படமும் வெளியானதால் யாருடைய படம் வசூலில் குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த நிலையில் இன்று முதல் நாளே அனைத்து மொழிகளிலும் இதுவரை ரூ 13.22 கோடியை ரெட்ரோ வசூலித்தது. ஆனால் நானியின் ஹிட் 3 படம் ரூ11.96 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. ரெட்ரோவுக்கு இன்று போல் வசூல் இருந்தால், படத்தின் பட்ஜெட்டை காட்டிலும் இரட்டிப்பு லாபத்தை எளிதாக பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய தினம் ரெட்ரோ படம் வெளியான போது தமிழ் திரையரங்குகளில் 79.91 சதவீதம் பேர் படம் பார்த்தனர். அதே வேளையில் ஹிட் 3 படத்திற்கு 47.08 சதவீதம் மட்டுமே தமிழ் ஆடியன்ஸ் இருந்தார்கள். எனவே வசூலில் மட்டுமில்லாமல் ரசிகர்களை கவர்ந்த விதத்திலும் ரெட்ரோதான் நம்பர் ஒன் என்கிறார்கள்.
சென்னையில் ஹிட் 3 யை காட்டிலும் ரெட்ரோதான் அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. மொத்தம் 924 ஷோக்கள் வெளியிடப்பட்டன. அது போல் ஹிட் 3 படம் 69 ஷோக்கள் மட்டுமே கிடைத்தது.
அதே வேளையில் ஹைதராபாத்தில் நானியின் ஹிட் 3 படத்திற்கு அதிக வரவேற்பு தெலுங்கு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது. ஹிட் 3 படத்திற்கு 85.97 சதவீதமும் ரெட்ரோ படத்திற்கு 39.25 சதவீதமும் தெலுங்கு ஆடியன்ஸ் வந்தனராம். நானியின் ஹிட் 3 திரைப்படத்தை சைலேஷ் கோலனு இயக்கினார்.
அது போல் இந்த படத்தை பிரசாந்தி திபிர்நேனி, அடில் பாலா, ராவ் ரமேஷ், பிரம்மாஜி, மகந்தி ஸ்ரீநாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications