தேவதை வம்சம் நீயோ பாடலில் நடித்த நடிகையை நினைவிருக்கா? ஜோதிகாவின் ரீல் சிநேகிதி என்ன செய்கிறார்?
சென்னை: சினேகிதியே திரைப்படத்தில் நடிகை ஜோதிகாவின் தோழியாக இருக்கும் நடிகை ஷர்பானி முகர்ஜியை நினைவிருக்கிறதா? யார் அவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
2000ஆம் ஆண்டு வெளியான த்ரில்லர் திரைப்படம் சிநேகிதியே. இந்த படத்தில் நடிகை ஜோதிகாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஷர்பானி முகர்ஜி. படங்களில் நாயகிக்கு தோழியாக வந்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் அடுத்தடுத்த படங்களில் பார்க்க முடியாமல் போகும்.

அந்த வகையில் இந்த படம் சூப்பர் ஹிட் படமாகும். தேவதை வம்சம் நீயோ, ராதை மனதில் ராதை மனதில் பாடல் சூப்பர் டூப்பர் பாடலாகும். இந்த படத்தை இயக்கியவர் பிரியதர்ஷன். இதில் தபு, மனோரமா, சுகுமாரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த சிநோகிதியே படத்தில் லீடு ரோல்களில் பெண்கள் மட்டுமே நடித்திருப்பர். ஆண் கதாபாத்திரமாக முன்னாள் ராணுவ வீரரும், பிரபல இயக்குநருமான மேஜர் ரவி கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஜோதிகாவும், ஷர்பானியும் நெருங்கிய தோழிகள். இருவரும் ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பர். இருவரும் குறும்புக்கார பெண்கள். அவர்கள் இருவரும் ஹாஸ்டலுக்கு லேட்டாக வருவது , ஹாஸ்டல் விதிகளை மீறுவது உள்ளிட்டவைகளில் ஈடுபடுவார்கள்.

திருமணத்திற்கு பிறகு நாட்டில் பெண்கள் தங்கள் சுதந்திரத்தையும் வாழ்வாதாரத்தையும் எப்படி இழக்கிறார்கள் என்பதை ஒரு கல்லூரி விழாவில் ஒரு முன்னாள் மாணவி விளக்குகிறார். இதை கேட்ட ஜோவும் ஷர்பானியும் முடிந்த வரை திருமணத்தை தடுத்துவிட வேண்டும் என நினைப்பார்கள். இதற்காக இவர்கள் ஒரு சிறிய நாடகத்தை போடுவார்கள்.
அதில் ஒரு துப்பாக்கிச் சூடு நடக்கும். எதிர்பாராத வகையில் அந்த துப்பாக்கிச் சூட்டில் நடக்கும் கொலைப் பழி இவர்கள் மீது விழும். இதனால் நெருங்கிய தோழிகள் இருவரும் பிரிந்துவிடுவார்கள். இந்த பிரிவிற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்கும் போதுதான் அதற்கான விடை தெரியவரும். திரில்லிங்காக கதை நகரும். இந்த படத்தில் நடித்த ஷர்பானி மிகவும் அழகாக இருப்பார். அவர் குழந்தை நட்சத்திரமாக 1977 ஆம் ஆண்டு ஹைவான் படத்தில் நடித்திருந்தார். இந்தி படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் தமிழில் சிநேகிதியே என்ற படத்தில் மட்டுமே நடித்திருந்தார்.

அதன் பின்னர் தமிழ் சினிமாவில் இவர் தலைகாட்டவே இல்லை. மலையாளம், இந்தி, போஜ்புரி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இந்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா. இவர் பாலிவுட் நடிகை கஜோலின் உறவினராம். இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இவரை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications