ப்ரியா படத்திற்கு ரஜினி கேட்ட சம்பளம் எவ்வளவு! "அடப்பாவி"னு பதறிய பஞ்சு! கடைசியில் கொடுத்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ப்ரியா படத்திற்கு ரஜினி கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? அதற்கு தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் தந்த காசு எவ்வளவு என்பதை தெரிந்து கொள்வோம். இளையராஜாவும் ரஜினிகாந்தும் பஞ்சு பிடித்து வைத்த பிள்ளையார்கள் என்பதையும் அது எப்படி என்பது குறித்தும் பார்க்கலாம்.

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: நாம சிலர் பிடிச்சு வச்சா மண் தான். ஆனா சிலர் பிடிச்சி வச்சா மட்டும் தான் அது பிள்ளையார். அது தான் அவர்களின் மகத்துவம். ராசையா என்ற வாலிபன் பற்றி ஆர்.செல்வராஜ் சொன்னதும் பஞ்சு அவரை வரச் சொல்கிறார்.

television rajinikanth ilayaraja

பஞ்சு மாலை நேரங்களில் லைட்டாக சரக்கு அடிப்பார். அப்படிப்பட்ட நேரத்தில் ராசையாவை அழைத்திருக்கிறார். ராசையாவும், அமரும், பாஸ்கரும் பாடிக் காட்ட பஞ்சுவுக்கு அவர்களின் திறமை பற்றி ஒரு தெளிவான பார்வை கிடைக்கிறது. "மழ பெஞ்சா வெத வெதச்சு நாத்து நட்டு கருதறுத்து போரடிக்கெம் பொன்னுமாமன் போழுதிருக்க வருவாரோ..."
அந்த அழகான கிராமியப் பாடல் பஞ்சுவை கவர்ந்திழுத்து விட்டது.

முன்பே ஆர்.செல்வராஜ் சொன்ன 'மருத்துவச்சி" கதைக்கு இந்தப் பாடல்கள் மெருகேற்றும் எனத்தோன்றி விட்டது. இப்போது 'மருத்துவச்சி' கதையில் இந்தப் பாடல்களோடு சேர்த்து பார்க்கிறார். ஆஹா..அழகாக பொருந்திப் போகிறதே...

சில பல மாற்றங்களுக்குப் பிறகு மருத்துவச்சி அன்னமாக பிறக்கிறது. "அன்னக்கிளி". அடுத்த பல்லாண்டுகள் தமிழ்த் திரையுலகை வாழவைக்க ராஜா என்கிற வாலிபரை மூத்த ஏ.எம்.ராஜா இசைத் துறையில் இருப்பதால் "இளையராஜா" என மாற்றி இருக்கிறார்.

பின் நடந்தது வரலாறு. அன்னக்கிளி பட்டி தொட்டியெங்கும் சிறகடித்து பறந்தது. எல்லா திருவிழாக்களிலும், கல்யாண வீடுகளிலும் 'அடி ராக்காயி....மூக்காயி' பாடல் ப்ளேயர்கள் கூம்புக் குழாய்களில் வழியே தமிழர் இதயத்துள் நுழைந்தது. "காயத்ரி" என்கிற தன் பார்ட்னர்ஷிப் தயாரிப்பு படத்தை பஞ்சு தியேட்டரில் ரசிகர்களோடு ரசிகர்களாக பார்க்கும் போது அது நிகழ்கிறது. "காயத்ரி" நாயகிக்கான கதை. நாயகன் ஜெய்சங்கர். நாயகி ஸ்ரீதேவி. இதையெல்லாம் மீறி கை தட்டல் அந்த வில்லன் நடிகருக்கு விழுகிறது.

சண்டைக் காட்சிகளில் வில்லன் நாயகன் ஜெய்யை அடிக்கும் போதெல்லாம் கை தட்டல், விசில் பறக்கிறது. யாராவது நம்பியார் எம்.ஜி.ஆரை அடித்தால் கை தட்டுவார்களா? அப்படி ஒரு வில்லன் ரஜினிகாந்த். அதே படத் தியேட்டரின் பக்கத்து தியேட்டரில் தான் ஒரு மாதம் முன்பு ரிலீசான பஞ்சுவின் மற்றொருப்படமான 'புவனா ஒரு கேள்விக்குறி' ஓடுகிறது.

அதில் நாயகன் சிவக்குமாருக்கு வில்லன் பாத்திரத்தையும், வில்லன் ரஜினிக்கு நாயகப் பாத்திரத்தையும் மாற்றிச் செய்த ரிஸ்க் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. குடும்பம் குடும்பமாக மக்கள் 'புவனா ஒரு கேள்விக்குறி'யை பார்க்க வருகின்றனர்.

இதுவும் ஒரு நாயகிப்படமே. நாயகி புவனாவாக சுமித்ரா. ஆனால் திரை முழுவதும் ரஜினியும், அவர் காதலும், மறைந்த காதலியின் நினைவாக வைத்திருக்கும் தாடியும் நிறைந்திருக்கிறது. பஞ்சுவுக்கு இவர் ஸோலோ ஹீரோவாக வர வேண்டிய ஆள் என எண்ணம் மின்னலாக தோன்ற கால்ஷீட்டை வாங்கி வைக்கிறார்.

ரஜினியும் - கமலும் இணைந்து நடிக்கவிருந்து பின் சேர்ந்து நடிக்க மாட்டோம் என சொல்லி விட்டதால் ரஜினியை வைத்து "ஆறிலிருந்து அறுபது வரை" எடுக்கிறார். அது ஹிட். 'ப்ரியா' படத்துக்கு சம்பளமாக 35000 ரஜினி கேட்க "அடப்பாவி...உன் வேல்யூ உனக்குத் தெரியலையே....வெளியே என்ன மார்க்கெட்னு சொல்ல உனக்கு ஆளில்லையா?.. நான் உனக்கு ஒரு லட்சம் தருகிறேன்...வேண்டாம்.

ராசி இருக்காது. ஒரு லட்சத்து பத்தாயிரம் தருகிறேன்..." அப்படி ஒரு லட்சத்து பத்தாயிரம் வாங்கிய ரஜினி அடுத்த முப்பதாண்டுகள் திரைத் துறைக்கு வேலை கொடுக்கப் போகிறார் என செய்தவர் பஞ்சு.

இளையராஜா, ரஜினி என பஞ்சு செய்த நம்பிக்கைகள் வீணாகாமல் அடுத்த முப்பதாண்டுகள் திரைத் துறைக்கு மறைமுகமாக விளைந்த நன்மைகளாக மாறி இருந்தன. சிலர் பிடிச்சி வச்சா தான் பிள்ளையார்.... அந்த பஞ்சு என்கிற பீஷ்மருக்கு நினைவஞ்சலிகள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+