மணிவண்ணன் மாப்பிள்ளைதான்.. ஆனா அவர் போட்டிருந்த டிரஸ் அவரோடதில்லை.. மனோபாலாவின் கல்யாண சுவாரஸ்யம்
சென்னை: இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் திருமணத்தின் போது அவர் அணிந்திருந்த கோட் அவருடையது இல்லை என மறைந்த நடிகர் மனோபாலா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கோயமுத்தூரை சேர்ந்த மனோபாலா சென்னை வந்த போது அவரை உதவி இயக்குநராக பாரதிராஜாவிடம் சேர்த்துக் கொள்ள கமல்ஹாசன்தான பரிந்துரை செய்தார். அதே போல் அவர் நிறைய படங்களில் நடிக்கவும் செய்தார்.

இதுவரை 175 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மனோபாலா நல்ல ஓவியரும் கூட! அவர் சதுரங்க வேட்டை என்ற படத்தை அண்மையில் இயக்கியிருந்தார். நிறைய காமெடி வேடங்களில் கலக்கியிருப்பார். நடிகர் பிரசாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் அண்மையில் அவர் பிறந்த நாளை கொண்டாடியிருந்தார்.
இந்த நிலையில் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த மனோபாலா கடந்த இரு தினங்களுக்கு முன்பு இறந்தார். அவர் கொடுத்த பழைய பேட்டிகள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் அவர் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் இயக்குநர் சித்ரா லட்சுமணனுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் மணிவண்ணன் குறித்து பேசியிருந்தார். மணிவண்ணன் அங்கிருக்கும் டெக்னீசியன்களில் 20 நாள் ரிப்போர்ட்டை எழுதிவிட்டார். அது எப்படினு தெரியலை. இந்த ஷாட்டுக்கு அப்பறம் என்னாச்சு எந்த ஷாட்டு ஓகே ஆச்சு என எல்லாரிடமும் கேட்டு கேட்டு ரிப்போர்ட் எழுதினார். இப்படி ஒரு உதவி இயக்குநரை நான் பார்த்ததே இல்லை. இங்க் பேனாவில் அழிந்துபோன ரிப்போட்டை எழுதியிருந்தார். அதில் ஏதாவது தவறாக இருக்கும் என நான் நினைத்திருந்தேன்.
ஆனால் ஒரு ரிப்போர்ட் கூட தவறு இல்லை என்றார். மேலும் மணிவண்ணன் செங்கமலம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமண புகைப்படம் வைரலாகி வந்தது. இந்த நிலையில் இநத் திருமண புகைப்படத்தில் அவர் அணிந்திருக்கும் கோட் சூட் மணிவண்ணனுடையது இல்லையாம். அது இயக்குநர் பாராதிராஜாவின் கோட் சூட்டாம்.
அவர்தான் மணிவண்ணனின் திருமணத்தின்போது போட்டுக் கொள்ளுமாறு கொடுத்ததாக மனோபாலா ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். மணிவண்ணனும் மனோபாலாவும் ஒரே ஊர்க்காரர்கள். இருவரும் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநர்களாக இருந்து முன்னேறியவர்கள். இதனால் இருவரும் நண்பர்கள். இவருடைய இழப்பால் மனோபாலா மிகவும் உடைந்துவிட்டார் என்கிறார்கள்.
திராவிடம் மற்றும் நாத்திக கொள்கையில் பிடிப்புள்ளவர் மணிவண்ணன். இவர் தமீழழ போராட்டத்தையும் விடுதலைப்புலிகளையும் ஆதரித்தவர். மதிமுக, நாம் தமிழர் கட்சியில் இணைந்து பணியாற்றியவர். சிறந்த நகைச்சுவை இயக்குநர். வில்லன் ரோல்களிலும் நடித்துள்ளார். இவரை போன்ற தைரியமான ஒருவரால் மட்டும்தான் அமைதிப்படை போன்ற படத்தை எடுக்க முடியும் என்பார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications