மஞ்சுளாவை பார்த்ததும் விஜயகுமாருக்கு காதல்! ஷூட்டிங்கில் திருமணம்! 48 ஆண்டாகியும் வெளிவராத படம்
சென்னை: மஞ்சுளாவும் விஜயகுமாரும் ஷூட்டிங் செட்டிலேயே திருமணம் செய்து கொண்ட படம் தற்போது வரை, அதாவது 48 ஆண்டுகளாகியும் இன்னும் வெளி வரவே இல்லை. அந்த படம் எது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: "உன்னிடம் மயங்குகிறேன்" 1976. விஜயகுமார் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்த நேரம்....
அவர் ஒரு பீம்சிங் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த படத்தின் படப்பிடிப்பில் மேக்கப் ரூமில் படத்தின் இரண்டாவது நாயகனான ரஜினிக்கு ஒரு காஸ்ட்யூமை தந்தார்கள். அவர் புதுமுக நடிகர் என்பதால் யாரும் கண்டு கொள்ளவில்லை. ரஜினியோ தன் உடம்பை அதனுள் நுழைக்க சிரமப்பட்டார். "அது சிறிய சைஸ்...உங்களுக்கு சேராது" என விஜயகுமார் சொல்ல "காஸ்ட்யூமர் இதைத்தான் கொடுத்தார்" எனச் சொன்னார் ரஜினி.

விஜயகுமார் காஸ்ட்யூமரை அழைத்து "வேறு சரியான அளவுள்ள உடையை கொடுங்கள்" எனச் சொல்ல வேறு உடை தரப்பட்டது. அன்று முதல் துவங்கிய நட்பு தினமும் தனது காரில் ரஜினியை ட்ராப் செய்யும் அளவுக்கு வளர்ந்திருந்தது.
நாயகியாக ஸ்ரீப்ரியா பேசப்பட்டு நடிக்க வந்த மஞ்சுளாவைக் கண்டதும் மயங்கிப் போனார் விஜயகுமார். அப்போது விஜயகுமாருக்கு திருமணமாகி மூன்றாவது குழந்தை அருண் பிறந்திருந்தார்.படப்பிடிப்பின் இடைவேளையில் மஞ்சுளாவை பார்த்து "நான் உங்களை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன். நீங்க என்ன சொல்றீங்க?" என கேட்டே விட்டார்.
திடுக்கிட்ட மஞ்சுளா விக்கித்துப்போனார். அடுத்தநாள் மஞ்சுளாவை பார்த்து "நேத்து நான் கேட்ட விஷயம் யோசித்தீர்களா?" எனக் கேட்டதும் மஞ்சுவோ "நானாக எந்த முடிவும் எடுக்க முடியாது" எனச் சொல்ல.. பெற்றோரைப் பார்த்து சம்மதம் வாங்கினார் விஜயகுமார்.
எளிமையாக அவர்கள் திருமணம் நடந்தது இந்தப் படத்தின் படப்பிடிப்பில் தான். எதிர்பாராமல் இயக்குனர் பீம்சிங் உடல் நலமில்லாமல் இறக்க காரைக்குடி நாராயணன் இயக்கி படத்தை வெளியிட நினைத்த போது தயாரிப்பாளர்-ரஜினி லடாய் உண்டாக...ரஜினி வெளியேற்றப்பட்ட கதை நமக்கு தெரியுமே...ரஜினியே தர்பார் விழாவில் சொன்னது...
தயாரிப்பாளர் சிவசுப்ரமணியன். '16 வயதினிலே' ராஜ்கண்ணுவின் சகோதரர். தயாரிப்பாளர் கவுன்சிலில் புகாரளித்து ரஜினியை வரவழைக்க நினைத்த அவரின் பாச்சா ரஜினியிடம் பலிக்கவில்லை... பீம்சிங் கடைசியாக இயக்கிய, விஜயகுமார்-மஞ்சுளா காதல் திருமணம் நடத்திய, ரஜினியை வெளியேற்றி வெறியேற்றிய அந்தப்படம்.. "உன்னிடம் மயங்குகிறேன்..." படம் இன்றும் வெளிவராமல் பெட்டிக்குள் தூங்குகிறது.... இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications