அசத்த போவது யாரு முதல் குக் வித் கோமாளி வரை! காமெடி கிங் மதுரை முத்துவின் மறுபக்கம் இத்தனை சோகங்களா?
சென்னை: நகைச்சுவையாக பேசும் மதுரை முத்துவின் வாழ்க்கையில் மறுபக்கம் சோகங்கள் நிறைந்ததாக இருக்கிறது.
கடந்த 2007ஆம் ஆண்டு சன் டிவியில் அசத்த போவது யாரு எனும் நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக உள்ளே வந்தவர் மதுரை முத்து. இந்த நிகழ்ச்சியில் தடுக்கிவிழுந்தால் காமெடி என்ற ரேஞ்சுக்கு மதுரை முத்து அடித்த காமெடியால் அவருக்கென ரசிகர்கள் கூட்டம் சேர்ந்தது.
இந்த நிகழ்ச்சி மட்டுமல்லாமல் மதுரை முத்து கோயில் திருவிழாக்களில் எல்லாம் கலந்து கொண்டு தனது காமெடி நிகழ்ச்சியை நடத்தி காட்டினார். இதனால் கோயில் திருவிழாக் காலங்களில் மதுரை முத்துவை புக் செய்ய போட்டா போட்டியே நடக்கும்.

வெளிநாட்டு நிகழ்ச்சி
வயிறு குலுங்க சிரிக்க வைத்த இவர் வெளிநாட்டு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். சன் டிவியில் காமெடி ஜங்ஷன் நிகழ்ச்சியின் நடுவராக வந்தார். இதையடுத்து தற்போது நண்பர் ஆதவனுடன் சன்டிவியிலிருந்து விஜய் டிவிக்கு வந்து விட்டார். அங்கு கலக்க போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

முத்துவின் வாழ்வு
எத்தனை நகைச்சுவையாக பேசினாலும் மதுரை முத்துவின் வாழ்விலும் ஒரு சோகம் உள்ளது. இவரது மனைவி பெயர் லேகா. இவர் திருமணமான ஒரு மாதத்தில் அவரது கணவர் ஓடிவிட்டார். அதனால் வயிற்றில் குழந்தையோடு கஷ்டப்பட்டு வந்த லேகா மீது மனம் இறங்கி அவரை மதுரை முத்து திருமணம் செய்து கொண்டார்.

விபத்தில் சிக்கிய முத்து
திருமணமாகி சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் முத்து ஒரு முறை விபத்தில் சிக்கிய போது அவர் குணமடைய வேண்டும் என்பதற்காக கடவுளிடம் வேண்டி லேகா மொட்டை போட்டுக் கொண்டார். அந்த அளவுக்கு தம்பதி அன்யோன்யமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் முத்துவின் வாழ்வில் கடந்த 2016ஆம் ஆண்டு புயல் வீசத் தொடங்கியது. ஆம்! கார் விபத்தில் லேகா உயிரிழந்துவிட்டார்.

மனைவி பலி
இந்த சோகத்தில் இருந்து மீள முடியாத முத்து, காமெடி ஷோக்களின் போது மட்டுமே சிரித்து மகிழ்வாராம். மற்ற நேரங்களில் தனது மனைவி பற்றியே நினைப்பில் இருந்துள்ளார். இதையடுத்து கைக்குழந்தையுடன் கஷ்டப்பட்டு வந்த முத்துவை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள உறவினர்கள் வற்புறுத்தினர். தன் கையில் உள்ள குழந்தை எதற்கு அழுகிறது என்று கூட தெரியாமல் தவித்து வந்த மதுரை முத்து லேகாவின் தோழியான ரீத்துவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர் ஒரு பல் மருத்துவர். தனது முதல் மனைவி குறித்தும் விபத்து குறித்தும் இரண்டாவது மனைவியின் திருமணம் குறித்தும் அவருடைய அரவணைப்பு குறித்தும் ஒரு பேட்டியில் மதுரை முத்து கண்கலங்கியபடி பேசினார்.

மதுரை முத்துவின் ஊர் எது
மதுரை முத்து கள்ளிக்குடி வட்டம் , டி அரசப்பட்டியில் பிறந்தவர். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இவர் அகிலன், மதுரை வீரன், சபாபதி, குற்றம் குற்றமே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குத் வித் கோமாளியில் மதுரை முத்து அடிக்கும் காமெடிக்கு மதுர வீரன் தானே... என்ற பரவை முனியம்மாளின் பாடலை டிஜே வாசிக்க காமெடியாக இருக்கும். அந்த காலத்திலிருந்து தற்போது வரை நாளுக்கு நாள் தனது காமெடியில் அப்டேட்டாக இருந்து வருகிறார் மதுரை முத்து.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications