ட்விஸ்ட்! பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பவா செல்லதுரை.. "கையில்" கொண்டு சென்றது என்ன தெரியுமா?
சென்னை: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பவா செல்லத்துரை எவ்வளவு ஊதியம் பெற்றார் தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சி கடந்த 1ஆம் தேதி விஜய் டிவியில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் இந்த முறை இரு பிக்பாஸ் ஹவுஸ் இருக்கின்றன. இரு வீடு , ஒரு வாசல், ஒரு கிச்சன் என்ற அடிப்படையில் இந்த வீடு அமைந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், வினுஷா, மணி சந்திரா, அக்ஷயா உதயகுமார், ஜோவிகா, ஐஷு, மாயா கிருஷ்ணன், சரவணா, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, அனன்யா ராவ், விஷ்ணு விஜய், பாவா செல்லத்துரை, விஜய் வர்மா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த போட்டியாளர்களின் உத்தேச சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி கூல் சுரேஷுக்கு ரூ.18 ஆயிரமும் பூர்ணிமா ரவிக்கு ரூ.15 ஆயிரமும், ரவீனா தாஹாவுக்கு ஒரு நாளைக்கு 18 ஆயிரமும் , பிரதீப் ஆண்டனிக்கு ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரமும் நிக்சனுக்கு ரூ.13 ஆயிரமும் வினுஷாவுக்கு ரூ.20 ஆயிரமும் மணி சந்திராவுக்கு ரூ.18 ஆயிரமும், அக்ஷயா உதயாகுமாருக்கு ரூ.15 ஆயிரமும் ஜோவிகாவுக்கு ரூ.13 ஆயிரமும் ஐஷுவுக்கு ரூ.1.05 லட்சமும் வழங்கப்படுகிறது.
அது போல் விக்ரம் படத்தில் நடித்த மாயா கிருஷ்ணனுக்கு ரூ.18 ஆயிரமும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவண விக்ரமுக்கு ரூ.18 ஆயிரமும் யுகேந்திரனுக்கு ரூ.27 ஆயிரமும், விசித்ராவுக்கு ரூ.27 ஆயிரமும் அனன்யாவுக்கு 12 ஆயிரமும் விஷ்ணுவுக்கு ரூ.25 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படுகிறது.
அது போல் பாவா செல்லத்துரைக்கு 28 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படுகிறது விஜய் வர்மாவுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் வாரந்தோறும் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள். அந்த வகையில் ஒரு போட்டியாளர் எத்தனை நாட்கள், எத்தனை வாரங்கள் இருக்கிறாரோ அதுதான் அவருடைய மொத்த ஊதியம் ஆகும்.
அந்த வகையில் கூல் சுரேஷுக்கு வாரத்திற்கு ரூ.1.26 லட்சமும் பூர்ணிமா ரவிக்கு ரூ.1 லட்சமும், ரவீனா தாஹாவுக்கு ரூ.1.26 லட்சமும் , பிரதீப் ஆண்டனிக்கு ரூ.1.40 லட்சமும் நிக்சனுக்கு ரூ.91 ஆயிரமும் வினுஷாவுக்கு ரூ.1.40 லட்சமும் மணி சந்திராவுக்கு ரூ.1.26 லட்சமும், அக்ஷயா உதயாகுமாருக்கு ரூ.1.05 லட்சமும் ஜோவிகாவுக்கு ரூ.91 ஆயிரமும் ஐஷுவுக்கு ரூ.1.50 லட்சமும் வழங்கப்படுகிறது.

அது போல் விக்ரம் படத்தில் நடித்த மாயா கிருஷ்ணனுக்கு வாரத்திற்கு ரூ.1.26 லட்சமும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவணனுக்கு ரூ.1.26 லட்சமும் யுகேந்திரனுக்கு ரூ.1.89 லட்சமும், விசித்ராவுக்கு ரூ.1.89 லட்சமும் விஷ்ணுவுக்கு ரூ.1.75 லட்சமும், அனன்யாவுக்கு 84 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
அது போல் பாவா செல்லத்துரைக்கு 1.96 லட்ச ரூபாய் ஆயிரம் ஊதியமாக வழங்கப்படுகிறது விஜய் வர்மாவுக்கு ரூ 1.216 லட்சமும் வழங்கப்படுகிறது என தெரிகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் அனன்யா ராவ் பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது திடீர் ட்விஸ்ட்டாக எழுத்தாளர் பவா செல்லதுரை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்.
அவருக்கு உடல்நலப்பிரச்சினைகள் காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. மிகவும் டஃப்பான போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பாதியில் வெளியேறி இருக்கிறார். அவர் ஒரு வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்ததால் அவருக்கு 1.96 லட்சம் ஊதியமாக வழங்கப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications