பிரபல நடிகை பிக்பாஸ் வீட்டுக்கு வர்றாரா? சும்மாவே ஆடுவாரே..16 பேர் இவங்கதானா? செம.. பிக்பாஸ் சீசன் 8

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் சீசன் 8 விரைவில் துவங்க உள்ள நிலையில், அதன் போட்டியாளர்கள் விவரம் வெளியாகியவண்ணம் உள்ளது.. நேற்றைய தினம் லிஸ்ட் ஒன்று வெளியாகியிருந்த நிலையில், "பிக்பாஸ் வீட்டுக்குள் போகும் 16 போட்டியாளர்கள் முழு விவரம்" என்று இன்னொரு லிஸ்ட் தற்போது வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டி வருகிறது.

எப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கினாலும், அதில் பங்கேற்பவர்கள் யார்? என்பது குறித்த விவாதம், ஒரு மாத காலத்துக்கு முன்னதாகவே சோஷியல் மீடியாவில் துவங்கிவிடும்.. அதுபோலவே இந்த முறையும், பல்வேறு அனுமானங்கள் வலம்வந்து கொண்டிருக்கின்றன..

bigg boss season 8 aishwarya 8

மீண்டும் லிஸ்ட்: இதில், பவித்ரா ஜனனி, அன்ஷிதா, ரஞ்சித், பப்லு பிரிதிவ்ராஜ், பூனம் பஜ்வா, குரேஷி, அமலா ஷாஜி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லக்கூடும் என்று ஒரு தகவல் வெளியானது.

பிறகு, VTV கணேஷ், சுனிதா கோகோய், அன்ஷிதா அக்பர்ஷா, ரவீந்திரன், ரஞ்சித் பப்லூ பிரிதிவீராஜ், அருண் பிரசாத், பரினா ஆசாத், பவித்ரா ஜனனி, பூனம் பஜ்வா, வினோத் பாபு, சஞ்சனா நமிதாஸ், தீபக் தினகர், ஆல்யா மானசா, குரேஷி போன்றோர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக சொன்னார்கள்.

காதல் ஜோடி: ஆனால், குக் வித் கோமாளி பிரபலங்கள் தான் அதிக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக கூறி, இன்னொரு தகவல் 2 நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது.. அதில், தர்ஷா குப்தா, விஜே விஷால், மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சஞ்சனா, காதல் ஜோடியான சோயா, டிடிஎஃப் வாசன், அன்ஷிதா, அர்ணவ், கார்த்திக் குமார் போன்றோர் பங்கேற்கலாம் என்கிறார்கள்.

இப்போது 16 போட்டியாளர்களின் முழுவிவரம் என்று கூறி, இன்னொரு லிஸ்ட் இணையத்தில் கசிந்து வருகிறது... அதில், தர்ஷிகா, டி.எஸ். கே, நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன், கோகுல்நாத், சீரியல் நடிகர் விஜே விஷால், விடிவி கணேஷ், பாடகி பால் தபா, சௌந்தர்யா நஞ்சுண்டன், சீரியல் நடிகை தர்ஷா குப்தா, சுனிதா, சஞ்சனா, அன்ஷிதா, அர்னவ் ஆகியோர் பங்கேற்பதாக கூறப்படுகிறது. இப்படி தினம் ஒரு பட்டியல் வெளியாகி கொண்டிருப்பதால், குழப்பமும், பரபரப்பும் என மாறி மாறி நிலவிக்கொண்டிருக்கிறது.

கானா பாடல்: இப்படிப்பட்ட சூழலில், ஒரு பிரபல சேனலில், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் போட்டியாளர்கள் யார் என்பது குறித்த எக்ஸ்க்ளூசிவ் தகவல் வெளியாகியிருக்கிறது.. அதில், கானா பாடகர் பால் டப்பா நிச்சயமாக போட்டியில் நுழைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக கானா பாடகர்களுக்கு விஜய் டிவி முன்னுரிமை தந்து வருகிறது.. வேல் முருகன், கானா பாலா, அசல் கோளார் போன்றோர் இப்படித்தான் போட்டியாளர்களாக இதற்கு முன்பு பங்கேற்றிருக்கிறார்கள். அந்தவரிசையில் பால் டப்பா அனீஸ் பிக் பாஸ் செல்வது உறுதியாகி விட்டதாம். இப்போது, "மக்காமஷி" பாடலும் வைரலாகி கொண்டிருப்பதால், அனீஸ் வருகை ஆர்வமாக எதிர்பார்க்கப்படுகிறது.

கானா பாடகர்களை போலவே, டான்ஸ் மாஸ்டர்களுக்கும் முக்கியத்துவம் தந்து வருகிறது விஜய் டிவி.. அந்தவகையில், சாண்டி, ராபர்ட் மாஸ்டர் வரிசையில், 'மானாட மயிலாட' கோகுல்நாத், நிகழ்ச்சிக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்கிறார்கள்.

சீனியர் நடிகை: அதேபோல, சீனியர் நடிகைகள் ஒருவரையும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு முறையும் அழைப்பது வழக்கமாகும்.. அந்தவரிசையில், இந்த முறை பிரபல நடிகை ஐஸ்வர்யா கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். ஐஸ்வர்யாவின் சமையல் வீடியோவாகட்டும், சோப்பு விற்பதாக சொன்ன அவரது யூடியூப் பேட்டிகளாகட்டும், அனைத்துமே வைரலாகிவிடும். தற்சமயம் கைவசம் படங்கள் எதுவும் இல்லாத நிலையில், பிக்பாஸ் சீசன் 8ல் பிக்பாஸ் வீட்டுக்குள் ஐஸ்வர்யாவும் வருவதாக சொல்கிறார்கள்.

எப்படியும் பிக்பாஸ் சீசன் 8 தொடங்குவதற்கு, 2 நாட்களுக்கு முன்புதான், போட்டியாளர்கள் அழைக்கப்படுவார்கள் என்பதால், இதுபோன்ற அனுமானங்கள் இனி வரும் நாட்களிலும் தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+