முதல்வன் பட பாடலில் ஏ.ஆர்.ரஹ்மானின் உதவியாளர் ஹாரீஸ் ஜெயராஜ் சேர்த்த அந்த ஒரு வரி ? ஆஹா அற்புதம்
சென்னை : முதல்வன் படத்தில் வரும் பாடலில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உதவியாளராக பணியாற்றிய ஹாரீஸ் ஜெயராஜ் என்ன செய்தார் என்பதை தெரிந்து கொள்வோம். அவர் சேர்த்த ஒரு வரி எத்தனை பிரபலம் என்பதை மறுக்க முடியாது.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: ரஹ்மான் மண்டபத்தில் எழுதிய சுக்வீந்தர்சிங்கின் பாட்டை தர்பாரில் மாற்றி விட்டு ஆயிரம் பொற்காசு பார்த்ததாகவும், ஆஸ்கர் வாங்கியதாகவும் ராம்கோபால் வர்மா சொல்லி இருக்கிறார்.

உடனே ரஹ்மான் ஹேட்டர்ஸ் சலங்கை கட்டி ஆடத் தொடங்கிட்டாங்க. முதலில் இசை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என நீதிகள் கொண்டு வந்தால் அதில் சினிமா இசையே வராது. அதனால் தான் அது மெல்லிசை. பாகவதர் காலத்தில் ராக, ஆலாபனைகளாக தொடங்கப்பட்டு படிப்படியாக ஒவ்வொரு பத்தாண்டும், சினிமா இசை தன் வடிவை மாற்றிக்கொண்டே வந்திருக்கின்றன.
எம்.எஸ்.வி இசை போரடித்த போது மக்களுக்கு ஹிந்தி இசை பிடித்திருந்தது. அப்போது புகுந்த இளையராஜா இசை தமிழ்மக்களை தனி பரவசத்துக்குள் கொண்டு போனது உண்மை. இளையராவின் காலத்தில் பாடல்கள் ஹம்மிங்கில் தொடங்கும். அன்னக்கிளி படத்தின் 'லலிலலிலலு...லலிலலிலலு...' ஹம்மிங் ஒரு புது பிரவாகத்தை நம் மனதில் ஏற்படுத்தியது உண்மை. மச்சானைப் பாத்தீங்களா பாட்டு பட்டி தொட்டியெங்கும் ஒலித்த போது இந்த ஹம்மிங் தான் அதை புகழடைய வைத்தது.
அதே போல் ஆயிரம் மலர்களேவின் ஹம்மிங்...ஒரு பெண்ணின் ஆனந்தத்தை அழகாக உள்ளிருத்திய ஒன்று. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
ரஹ்மான் வந்ததும் முதலில் அழிந்தது இந்த ஹம்மிங்கும், தொகையறாவும் தான். ஹம்மிங்குக்கு பதிலாக அவர் ஜி.வி.பிரகாஷை வைத்து படத்தில் முதல் இரண்டு வரிகளை பாடவைப்பார். குச்சி குச்சி ராக்கம்மா...சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே...அல்லது மர்ஹபா போன்ற பாங்கிசையை சேர்ப்பார். தொடக்கத்தில் அவர் பாடல் ஒரே மாதிரி தான் பேட்டர்னைக் கொண்டிருக்கும். அவரது ஹம்மிங் கேட்க வேண்டுமென்றால் ரங்கீலாவின் யாரோ சுன்லோஸரா பாட்டில் கேட்கும் அளவு தான்.

அந்த ஹம்மிங் ஒரு இசைக் கருவிக்கு பதிலாக இருக்கும். தனித்துவத்துக்காகவே அவர் சாகுல்ஹமிது, சுபா, உதித் நாராயண் போன்றவர்களை பாடவைத்தார். அவர் பாடல்கள் ரிதங்களை அடித்தளமாகக் கொண்டிருந்தது. பரோட்டா பரோட்டா என ஒரு பாட்டு வண்டிச்சோலை சின்ராசு படத்தில் இருக்கும். அதன் வரிகளுக்கும், டியூனுக்கும் மேட்ச்சே ஆகாது. பாலு ட்யூனுக்கு தகுந்தாற்போல வேகமாகவும், மெதுவாகவும் பாடி மேட்ச் செய்வார்.
தன் பாடல்களை மேம்படுத்த பலரை பயன்படுத்துவதுண்டு. பிரசன்னா, ஹாரிஸ் ஜெயராஜ், கத்ரி கோபால்நாத் என பலரை அழைப்பார். என்னவளே பாட்டின் தொடக்கத்தில் வரும் குழல் இசை அப்படியே ரங்கீலாவின் தன்ஹா பாட்டில் வரும்.
இடையில் வைரமுத்துவை வைத்துக் கொண்டு அவர் ஆசை, அழகு என பாடல் முழுக்க வருவது போல், பஞ்சபூதங்களை மையப்படுத்தி ரிதம் படத்தில் பாடல்கள் அமைத்தது, ஏழு அதிசயங்களை ஒரே பாட்டிற்குள் வருவது போல் ஜீன்ஸ் படத்தில் இசை அமைப்பது, எல்லா வண்ணங்களும் வருவது போல் அலைபாயுதே படத்தில் பாடல் அமைத்தது எல்லாமே இளையராஜா போன்ற முன் இசையமைப்பாளர்களின் இசை நடைமுறைகளிலிருந்து விலகி நிற்கத்தான்.
அதேப்போல பாடல் பல்லவியை விட அனுபல்லவியாக வரும் அல அலே அல அலே போன்றவை ஹிட்டாகும் விதத்தில் பாடல் அமைப்பார். 'எகிறி குதித்தேன்.. வானம் வெடித்த'தை விட அல அலே தான் பாடல் முழுக்க நிரம்பி இருக்கும்.
பூம்பூம் பாட்டில் கணீரென 'காதல் இது தான் இது தான் என்று கேட்குமா' என பெண்ணின் குரல் பாடும் போது ஆணின் குரல் பூம் பூம் என சொதப்பலாக வயதான குரல் போலிருக்கும்.
இப்போது நான் சொன்னது சிலவற்றை மட்டுமே, இன்னும் நிறைய சொல்லலாம். இவை எல்லாமே தவறு எனச் சொல்லவில்லை. இவை எல்லாமே ராஜா என்கிற பேட்டர்ன் இசையிலிருந்து மாறி தமிழிசையை வேறு பேட்டர்னுக்குள் கொண்டு செல்ல ரஹ்மான் செய்த முயற்சிகள். அவை தமிழ் மக்களால் ரசிக்கப்பட்டதும் உண்மை. இவை நிச்சயம் ரஹ்மான் அல்லாத வேறு ஒருவர் செய்ய முடியும் என நான் நிச்சயம் நினைக்கவில்லை.
சமீபத்தில் காதலன் படத்தில் காதலிக்கும் பெண்ணின் கைகள் பாட்டில் வரும் ஒரு தவிலிசையை இசைத்த தவில் கலைஞரை பேட்டி கண்டிருந்தது ஒரு யூடியூப் சேனல். நல்ல வேளை....என்னால் தான் பாடல் ஹிட்டானது என அவர் சொல்லவில்லை.

முதல்வனே பாட்டில் உதவியாளராக இருந்த ஹாரிஸ் ஜெயராஜ் அதில் வரும் கோரஸுக்கு 'ஹால்ல்லே...லுய்ய்ய்யா' என தன் ஜெபமொழியை சேர்த்ததாக ஒருவர் சொன்னார். நிச்சயம் இது ரஹ்மானுக்கு தெரியாமல் நடந்திருக்காது.
இப்படி பலராலும் மெருகேற்றப்படுவது ரஹ்மான் இசை. ரஹ்மான் இசை முழுக்க முழுக்க அவர் கை விரல்களில் பிறப்பவை. ராஜாவின் இசை ராஜாவின் இதயத்தில் பிறப்பவை. அவ்வளவு தான் வித்தியாசம்.... அந்த வித்தியாசத்தில் தவறாக ஒன்றுமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications