Bigg Boss 7: நடிகை விசித்ராவுக்கு இத்தனை முகங்களா? எதுல மாஸ்டர் டிகிரி வாங்கியிருக்கார் பாருங்க!
சென்னை: நடிகை விசித்ரா நல்ல நடிகை, சமையல் கலைஞர், நிர்வாக திறமைமிக்கவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் குறித்து இன்னொரு முக்கிய தகவலும் இருக்கிறது.
நடிகை விசித்ரா 90ஸ் கிட்ஸ் மத்தியில் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். இவர் தமிழில் பொற்கொடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். சின்னத்தாயி, தலைவாசல், தேவர் மகன், எங்க முதலாளி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் கவர்ச்சி, வில்லி, காமெடி, ஐட்டம் சாங் என அனைத்திலும் கலக்கியவர். தலைவாசல் படத்தில் மடிப்பு அம்சா எனும் கேரக்டரில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து ரசிகன், முத்து, சுயம்வரம் உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்லதொரு பெயரை பெற்று தந்தன.
இவருடைய தந்தை நடிகர் வில்லியம்ஸ், தாய் மேரி வசந்தா. விசித்ராவுக்கு இரு சகோதரிகள், ஒரு சகோதரன். விசித்ராவின் தந்தை கடந்த 2011 ஆம் ஆண்டு பண்ணை வீட்டில் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வேதனையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னை தேற்றிக் கொண்டார் விசித்ரா.
இவர் இவருடைய கணவர் ஹாஜியை கேரளாவில் ஒரு ரெஸ்டாரன்டில் சந்தித்தார். அந்த ஹோட்டலின் பொது மேலாளராக பணியாற்றியவர் ஹாஜி. இதையடுத்து இருவரும் காதலித்து கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவருக்கு 3 ஆண் பிள்ளைகள். இதில் கடைசி மகன்கள் இரட்டையர்கள், கணவர் ஹாஜி ஹோட்டல் துறையில் இருந்ததால் மும்பை, புனே, பெங்களூரு என டிரான்ஸ்பர் கிடைத்துக் கொண்டே இருந்தது.
விசித்ராவும் குழந்தைகளின் நலனுக்காக நடிப்பை மூட்டை கட்டி வைத்துவிட்டு கணவருடன் சென்றுவிட்டார். குழந்தை வளர்ப்பிலும் அதிக கவனம் செலுத்தினார். விசித்ரா 10ஆவது படிக்கும் போதே சினிமாவுக்கு நடிக்க வந்துவிட்டார், இதையடுத்து தொலைத்தூர கல்வி மூலம் பி.ஏ. சைக்காலஜி படித்தார். திருமணமானதும் சைக்காலஜியின் முதுநிலை பட்டம் பெற்றார்.

இவர் உளவியல் கவுன்சலிங்கும் கொடுத்து வந்தார். இவருடைய மகன் படித்த பள்ளியிலும் கவுன்சலிங் கொடுத்துள்ளார். மன திருப்தியுடன் இந்த பணியை செய்து வருவதாக நிறைய பேட்டிகளில் தெரிவித்துள்ளார். சினிமா துறைக்கு பிறகு கோகிலா எங்கே போகிறாள் உள்ளிட்ட சீரியல்களிலும் விசித்ரா நடித்துள்ளார்.
அண்மையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் வெங்கடேஷ் பட்டுடன் சமையல் கலை படித்தவர். இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அந்த 18 போட்டியாளர்களில் இவர்தான் பிரபலம். இவர் இந்த வீட்டில் நீண்ட காலம் தாக்குப்பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications