மிஸ்ஸிங் 2 விஷயம்.. பிரியங்கா குஷி.. அதைவிடுங்க, குக் வித் கோமாளி பைனலில் இதை யாராவது கவனிச்சீங்களா?
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் யார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2 விதமான மாற்றங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. இதுகுறித்த சலசலப்புகள்தான், சோஷியல் மீடியாவிலும் ஓடிக்கொண்டிருக்கின்றன.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி இந்த சீசன் ஆரம்பித்ததிலிருந்தே, மணிமேகலை தன் இயல்பிலிருந்து விலகியிருக்கிறாரோ? என்ற சந்தேகம் பல தரப்பிலும் எழுந்தவாறே இருந்தது.. தனக்கு விஜய் டிவியில் என்ன பிரச்சனை என்று, அனைத்தையும் பொதுவெளியில் போட்டு உடைத்திருந்தார்.

பிரியங்காவுக்கு விஜய் டிவி அதிக முக்கியத்துவம் தருவதாக மறைமுகமாக கூறியிருந்த நிலையில், பிரியங்காவுக்கு எதிரான விமர்சனங்கள் சோஷியல் மீடியாவில் ஆக்கிரமித்திருந்தன.
விமர்சனங்கள்: அதுமட்டுமல்ல, இந்த முறை டைட்டில் வின்னராக பிரியங்காவை அறிவிக்கப் போகிறார்கள் என்பதால்தான், மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதாகவும் சலசலக்கப்பட்டன. அதனால், உண்மையிலேயே பிரியங்காதான் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவாரா? அல்லது வதந்தியா? என்ற குழப்பம் நிலவியது.
இந்நிலையில், இன்றைய தினம், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். நடிகர்கள் அரவிந்த்சாமி, கார்த்தி இருவருமே சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கியிருக்கிறார்கள்..

இறுதிப்போட்டி: இறுதிப்போட்டியில், இர்பான், விடிவி கணேஷ், பூஜா, ஜோயா, சுஜிதா, பிரியங்கா என 6 பேர் நுழைந்த நிலையில், பிரியங்கா - ராமர் ஜோடி டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டுள்ளனர். பிரியங்காவுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது.. கோமாளியாக ராமருக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2வது பரிசு, சுஜிதா- புகழ் ஜோடி வெற்றி பெற்றுள்ளது.. இந்த ஜோடிக்கு 1 லட்சம் ரூபாய் பரிசாக பெற்றுள்ளார்கள்.. அதேபோல, குரேஷி - 1 லட்சம் சிறப்பு பரிசாக பெற்றுள்ளார்.
ஆனால், இந்த முறை சீசனில், 2 விஷயங்கள் மிஸ்ஸாகியிருக்கின்றன.. குக் வித் கோமாளியின் எல்லா சீசனிலும், 2nd runner up அறிவிப்பது வழக்கமாகும்.. ஆனால, இந்த முறை 2nd runner up யாரையுமே தேர்ந்தெடுக்கவில்லை..

பரிசுத்தொகை: அதேபோல, எப்பவுமே முதல்பரிசு பெற்றவருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.. 2வது இடத்தை பெறுவோருக்கு 5 லட்சமும், 3வது இடத்தை பெறுவோருக்கு 2 லட்சமும் வழங்கப்படும். ஆனால், இந்த முறை, முதல் பரிசே 5 லட்சம்தான் அறிவிக்கப்பட்டுள்ளது.. கோமாளிகள், ராமர், குரோஷி இருவருக்கும் தலா 1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த சீசனை மொத்தமே 7 லட்சம் ரூபாய்க்குள் அடக்கிவிட்டுள்ளது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
இதைவிட முக்கியமாக, சன் டிவியின்" டாப் குக்கு டூப் நிகழ்ச்சியில், முதல் பரிசு 20 லட்சம் ரூபாயும், 2வது பரிசுக்கு 10 லட்சம் ரூபாயும் அறிவிக்கப்பட்டது.. ஏற்கனவே அந்த நிகழ்ச்சி டாப்பில் சென்று கொண்டிருக்கும் நிலையில், பரிசுத்தொகை விஷயத்திலும், டாப்பில் சென்றுள்ளது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

பரிசுத்தொகை: அதேபோல, இறுதி போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு எப்பவுமே முதல்பரிசு பெற்றவருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.. 2வது இடத்தை பெறுவோருக்கு 5 லட்சமும், 3வது இடத்தை பெறுவோருக்கு 2 லட்சமும் வழங்கப்படும். ஆனால், இந்த முறை, முதல் பரிசே வெறும் 5 லட்சம்தான் அறிவிக்கப்பட்டுள்ளது.. அந்த 5 லட்சத்தை பிரியங்கா வென்றுள்ளார்.. கோமாளிகள், ராமர், குரோஷி இருவருக்கும் தலா 1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த சீசனை மொத்தமே 7 லட்சம் ரூபாய்க்குள் அடக்கிவிட்டுள்ளது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications