காரில் வந்து இறங்கி பிக்பாஸ் வீட்டிற்குள் போவது யார் பாருங்க.. இந்த வாட்டி ஆட்டம் புதுசு.. பிக் பாஸ் 8
சென்னை: பிக்பாஸ் 8வது சீசன் விரைவில் துவங்க உள்ள நிலையில், புது வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.. இந்த வீடியோவை பார்த்து விஜய் டிவி ரசிகர்கள் உச்சக்கட்ட குஷியில் உள்ளனர். அத்துடன், மிகுந்த எதிர்பார்ப்பை இந்த வீடியோ ஏற்படுத்தியும் வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் சீசன், அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் பெற்றுவந்தது.. இதுவரை 7 சீசன்களை கமல் நடத்தி முடித்துள்ளார். அந்தவகையில், கமலுக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் இருந்ததாகவும் தெரிகிறது.

கமல்ஹாசன்: ஆனால், இப்போது, இந்த 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க போகிறார்.. வழக்கமாக பிக்பாஸ் வீட்டுக்குள் கமல், ஏதாவது புதுமையான விஷயங்களை பேசுவார்.. புத்தகம், சினிமா, சமூகம் என அனைத்து தரப்பு ஏரியாக்களையும் "தொட்டுவிட்டு" செல்வார்.. ஆனால், இந்த விஷயங்களையெல்லாம் விஜய் சேதுபதி கையில் எடுப்பாரா? அல்லது புதுபாணி ஏதாவது கைவசம் வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை.. அதனால்தான், இந்த சீசன் எப்படி இருக்கப்போகிறது என்பதை காண ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.
ஆனால், இந்த நிகழ்ச்சியில் யார் போட்டியாளர்கள் என்று இதுவரை தெரியவில்லை.. எனினும், பவித்ரா ஜனனி, அன்ஷிதா, ரஞ்சித், பப்லு பிரிதிவ்ராஜ், பூனம் பஜ்வா, குரைஷி, அமலா ஷாஜி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லலாம் என்கிறார்கள்.
சமீபத்தில்தான் இதற்கான ப்ரோமோ வெளியாகியிருந்தது.. வழக்கமான பாணியில்லாமல், புதுமையான முறையில் புரோமோ வெளியானது.. மக்கள் குழுமியிருக்கும், முக்கிய நகரங்களின், முக்கிய இடங்களில், அதுவும் மக்கள் முன்னிலையிலேயே அவர்களையே வைத்து வெளியிட்டிருந்தது.
விஜய் சேதுபதி: இந்த புரோமோவில், நடிகர் விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் பற்றி, மக்கள் அறிவுரை சொல்கிறார்.. உடனே விஜய் சேதுபதி, உங்க விருப்பமான show.. இன்னும் நெருக்கமா.. இந்த வாட்டி "ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு.." என்ற பஞ்ச் வசனத்துடன் சொல்லி, இந்த டிரைலர் வெளியாகியிருந்தது. இதை பார்த்ததுமே ரசிகர்கள் குஷியாகிவிட்டார்கள்.
இப்போது மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.. இந்த வீடியோவை விஜய் டிவியே தன்னுடைய அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் பதிவிட்டுள்ளது.. ரெடி ரோல் என்ற வார்த்தையுடன் ஷூட்டிங் துவங்குகிறது.. ஆடம்பரமான கருப்பு கலர் காரில், விஜய் சேதுபதி கெத்தாக வந்து இறங்குகிறார்.. அங்கிருந்தோருக்கெல்லாம் "வணக்கம்" வைத்துக்கொண்டே செட்டுக்குள் நுழைகிறார் விஜய் சேதுபதி.
வழக்கமாக பிக்பாஸ் சீசன் துவங்கும்போது, கமல்ஹாசன், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார்.. ஒவ்வொரு முறையும், அந்த வீட்டில் புதுமையாக என்ன செய்யப்பட்டுள்ளது, என்னென்ன மாற்றம் உள்ளது என்பது குறித்தெல்லாம், வீட்டிற்குள் அவரும் பார்வையிட்டு கொண்டே, நேயர்களுக்கும் அதுகுறித்து விளக்குவார். அதுபோலவே, விஜய் சேதுபதியும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவது போலவும், கேமராவில் பேசுவது போலவும் ஷாட்கள் எடுக்கப்பட்டுள்ளன.
வீடியோ: "இன்னும் நெருக்கமா.. இந்த வாட்டி "ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு" என்று வீட்டிற்குள் பஞ்ச் டயலாக்கை சொல்கிறார் விஜய் சேதுபதி. இந்த மேக்கிங் வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. ஆக, பிக் பாஸ் சீசன் 8-ன் புரோமோ, டிரைலரை போலவே, இந்த மேக்கிங் வீடியோவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது...!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications