36 வருட அனுபவம்.. 20 ஆண்டுகாலம் பட்ட கஷ்டம்.. எல்லாமே பறந்தோடிய அந்த நாள்.. கோவை குணா பிளாஷ்பேக்!
20 ஆண்டுகளாக கஷ்டப்பட்டதன் பலனாக கலக்க போவது யாரு வெற்றி- கோவை குணாவின் பழைய பேட்டி
கோவை: 20 ஆண்டுகளாக பட்ட கஷ்டத்தின் விளைவாக அசத்த போவது யாரு போட்டியில் சாம்பியன் ஆனதாக கோவை குணா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் குணா. இவர் மேடை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்து மக்களை கவர்ந்து வந்தார். 1990 களில் அசத்த போவது யாரு நிகழ்ச்சியை நடத்தி வந்தார். இந்த நிகழ்ச்சியில் கோவை குணா டைட்டில் வின்னராக வென்றார்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை முத்து, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோவை குணா நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், ராதாரவி, கவுண்டமணி உள்ளிட்டோரை போல் மிமிக்ரி செய்து அசத்துவார்.

எம்ஜிஆர்
அதிலும் எம்ஜிஆர் ஒரே டயலாக்கை அழுது கொண்டு, சிரித்து கொண்டு, கோபத்துடன் பேசினால் எப்படி இருக்கும் என்பதை செய்து காட்டுவார். அது போல் பழங்காலத்து வில்லன் நடிகர்களான எம்.ஆர்.ராதா, எம்.என். நம்பியார், அசோகன் உள்ளிட்டோர் போல் பேசி மகிழ்விப்பார். அந்த வில்லன்களின் குரல் மட்டும் அல்லாமல் பாடி லேங்குவேஜும் அப்படியே இருக்கும்.

விக்ரமன்
இந்த நிலையில் விக்ரமன் இயக்கத்தில் வெளியான சென்னை காதல் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. அதே நேரம் அவரை இயக்குநர் லிங்குசாமி, பிரபுசாலமன் உள்ளிட்ட பல இயக்குநர்கள் நடிப்பதற்காக இவரை அணுகிய நிலையில் மேடை நிகழ்ச்சிகளில் குணா பிஸியாக இருந்ததால் அவரால் அந்தப் படங்களில் நடிக்க முடியவில்லை.

ஜனகராஜ் வாய்ஸ்
ஜனகராஜ் வாய்ஸ் எல்லாம் சான்ஸே இல்லை. எதெல்லாம் கஷ்டமான வாய்ஸ்களோ அவற்றை எடுத்து பேசியவர் கோவை குணா. கவுண்டமணி போல் டான்ஸ் ஆடுவதை முதல் முறையாக அறிமுகப்படுத்தியதே குணாதான். அவரை பார்த்துதான் இன்றுள்ள கலைஞர்கள் கவுண்டமணி போல் மிமிக்ரி செய்தாலே அந்த நடனத்தை போட்டுவிடுகிறார்கள்.

கோவை குணா பேட்டி
கோவை குணா பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது: அடுத்தவர்களின் ஐடியாவை நான் எப்போதுமே காப்பி அடிக்க மாட்டேன். நானே சொந்தமாக யோசித்து இந்த நடிகர்கள் இப்படி பேசியிருந்தால் எப்படி இருக்கும் என யோசித்து அதைத்தான் செய்வேன். 36 ஆண்டுகளாக மிமிக்ரி செய்து வருகிறேன். இதை தவிர எனக்கு வேறு எந்த தொழிலுக்கு தெரியாது.

கலக்க போவது யாரு
கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து 2 பேர் என்னை பார்க்க வந்தனர். அப்போது எனது மிமிக்ரியை ஷூட் செய்து எடுத்துச் சென்றார்கள். அடுத்த 10 நாட்களில் என்னை சென்னை வர சொன்னார்கள், 1000 பேர் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் இறுதியாக 4 பேர் இறுதி போட்டி வரை சென்றோம். நான், மதுரை முத்து, ரோபோ சங்கர், வடிவேல் டேவிட் ஆகியோர் ஆவர்.

20 ஆண்டு மேடை நிகழ்ச்சிகள்
20 ஆண்டுகள் மேடை நிகழ்ச்சிகளில் நான் பட்ட கஷ்டங்கள் கலக்க போவது சீசன் 1 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அந்த ஒரு நிமிடம் எனக்கு பெரிய பாக்கியம் என கூறியிருந்தார். பின்னர் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கோவை குணா, கொரோனா காலகட்டத்தில் அப்பா டாடி ஃபாதர் நைனா எனும் யூடியூப் சேனலை தொடங்கியிருந்தார். இந்த நிலையில் அண்மையில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த சில தினங்களாக கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications